Wednesday, April 15, 2009

திருவனந்தபுரமும் பெங்களூருவும்... 1



"நீங்க கேரளால வாசிச்சிருக்கேளா? ஷண்முகானந்த சபால (மும்பை) வாசிச்சிருக்கேளா?" என்பன, கலைஞர்களிடம் கேட்கப்படும் வழக்கமான கேள்விகளில் ஒன்று.

திருவனந்தபுரத்தில் கச்சேரி, அதுவும் ரேடியோ என்றதும் மகிழ்வில் திளைத்தது மனது. வெளிநாட்டு சிஷ்யர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகையில், ரேடியோ, மும்மூர்த்திகள் விழா என்றெல்லாம் குழப்பாமல், நேஷனல் ப்ரோக்ராம் என்று அனுப்பிவிட்டேன். அங்கே போனால், நிஜமாகவே இதை நேஷனல் ப்ரோக்ராம்-ஆக ஒலிபரப்ப முடிவு செய்திருப்பதைத் தெரிவித்தனர். அதோடு, தூர்தர்ஷன் நேஷனல் சேனலிலும் இது ஒளிபரப்பாகும் என்று, கச்சேரி நடந்த "கார்த்திகை திருநாள்" அரங்கத்தை, பெயருக்கு ஏற்றாற்போல் ஏகப்பட்ட விளக்குகள் பொருத்தி படம் பிடித்தனர்.

கேரள மன்னர்களுக்கு அவரவர் பிறந்த நக்ஷத்திரம் தான் பெயர். ஸ்வாதி திருநாள் (கேரளத்தில் கொண்டாடப்படும் ஒரு இராஜா. கலைகளை ஆதரித்தவர்; அவரே ஒரு வாக்கேயக்காரர்)என்பதும் அதைப் போலத்தான். சேஷன் ஒரு முறை, "தஞ்சாவூர் பிராமணர்களும் கேரள பிராமணர்களும் மிகுந்த அறிவாற்றலுடையவர்கள்" என்று கூறியபோது, சிவராமன் சார், " ஏன்னா, தஞ்சாவூர்ல ஸர்போஜி மகாராஜாவும் கேரளாவில் ஸ்வாதி திருநாளும் கலைகளை ஆதரித்ததால் பண்டிதர் கூட்டம் நாட்டின் பிற பாகங்களிலிருந்து அங்கே நிலை கொண்டது. அந்த ஜீன்..." என்றார்.

பத்தாம் தேதி மாலை வெகு முன்னதாக இரயிலில் அமர்ந்தபோது பெட்டியில் நானும் அருணும் மட்டும் இருந்தோம். வீல் சேரை பூட்ட முயலும்போது மிக அருகே நீண்ட கை ஒரு அலியினுடையது. Handicapped என்பதை, physically challenged-differently abled என்பது போல திருநங்கை-அரவாணி.

அலி எதிர்ப்படுதல் தீய சகுனம் என்கிறது சாத்திரம். பாக்கெட்டிலிருந்து ஐந்து ரூபாய் போட்டதும் விடுதலை.

ஓரமாய் சென்று அமர்ந்ததும், அடுத்த தண்டவாளத்தில் அன்-ரிசர்வ்ட் பெட்டியில் எட்டு பேருக்கான இடத்தில் இருபது பேர்களுக்கிடையில் நீலப்புடவையில் நுழைந்த பெண்ணின் கையில் ஒன்று;கால்களைத் தழுவியபடி இரண்டு. கூட்டத்துக்கு நடுவில் ஜன்னலோர இருக்கை அருகே மூன்று குழந்தைகளும் சொருகப்பட்டு, இரண்டு சீட்களுக்கும் நடுவில் நீலம் நின்றபோது, வாட்டர் பாட்டில் கொக்கியில் தொங்க விடப்பட்டது போல் எதிர் இருக்கை முஸ்லீம் பெண்ணின் கணவன், நீலத்தின் பின்னால். "மேசைக் கரண்டி முறை"யில் ஏற்பட்ட சில அசைவுகள், அங்கே ஒரு புயலைக் கிளப்பியது.

சகலரும் திடீரென அடித்துக்கொண்டார்கள்.

குழந்தைகள் வீரிட்டு அழ ஆரம்பித்தன.‘ழ’கரத்தில் முடியும் அத்தனை வார்த்தைகளையும் அந்த பெண்கள் இறைத்துக்கொண்டனர்.

விரிப்பில் கூடும் விதங்கள், விவரிப்புகளில் மலினமாயின.

நீலத்தின் தாலி-நகைகள் அறுந்து தொங்கின. தன் பின்னே ஒருவன் நிற்பதை அவள் ஆட்ஷேபித்ததுதான் காரணம். அடி விழுந்தது... அனேகமாக எல்லோர் விரல்களுக்கிடையிலும் முடி இருந்தது. இரயில் கிளம்ப இன்னும் இருந்த முக்கால் மணி நேரமும், "அஞ்சு பவுனை அறுத்துட்டா அவ... எப்பிடியும் ஏறங்கரத்துக்குள்ள .......... துருவேண்டி. உன்ன.... புருஷன வுட்டுட்டு இருக்க முடியாத ..............களுங்க எல்லாம் ......... அறுத்து வெச்சுக்குங்கடீ....”

ஆஸ்த்ரேலியா நெட்வொர்க்கின் பிசினெஸ் இங்க்லிஷ் பாடங்களின் சம்ப்ரதாய வார்த்தைகள், திரும்பத் திரும்ப உபயோகப்படுவதைப் போல, அடங்காத ஆத்திரமும் - உறுப்புகளின் செயகையை விளக்கும் சொற்களும் மீண்டும் மீண்டும் ஒலித்த வண்ணம் இருந்தன, நேயர்கள் விரும்பாவிட்டாலும். அவற்றைக் காற்றில் கரைத்தபடி அந்த இரயில் கிளம்பும் வரை , என்ன விதமாய் முகத்தை வைத்துக்கொள்வது என்றறியாமலேயே அருண், இருக்கைகளையும் ஜன்னல்களையும் வேடிக்கை பார்த்துச சாய்ந்திருந்தான். எதாவது சொல்ல விரும்பினேன்.

(தொடரும்...)

4 comments:

  1. இது தேவையா? என்றே தோன்றியது. இப்படி எழுதினதுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  2. இது தேவையா என்று தோன்றுகிறது. இந்த கமெண்டை முதலில் கொடுத்தப்போ போகலை, இப்போ போகிறதானும் தெரியலை, உங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  3. comment moderation is enabled, so word verification is not necessary, I think. :D

    ReplyDelete
  4. Even i was shocked to witness such a pitiable state of women. Please read fully and add your valuble views.

    ReplyDelete