Tuesday, May 31, 2011

அவலாஞ்சி ரோடு - 2

அடி மரத்தில் இருவர் நிற்குமளவிற்கு இடமிருந்தது. அங்கிருந்து வேர்களின் மேல் நடந்தால் விழுது தொங்கல் எளிதானது. அதற்கு மேல் என்னால் செல்ல முடியவில்லை. குறுக்கே சிறு வாய்க்கால்கள் வழியெங்கும் குறுக்கிட்டன. மேலே மூன்றடி அகலக் கல் இருந்திருந்தால்... இல்லை. நான் அங்கேயே இருப்பதாகச் சொல்லி அருணையும் ராம்கியையும் அனுப்பிவிட்டேன்.

சட்டென ஒரு யானையோ, கரடியோ at least, பற்களைக் காட்டியபடி ஒரு  நாயோ வந்திருந்தால் கூட முதல் பாகத்திலேயே எழுதித் தொடரும் போட்டிருக்கலாம். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. 

திரும்பி வரும்போது ராம்கியின் கையில் ஒரு பெரிய பப்ளிமாஸ் இருந்தது. முதலில் அது அபூர்வமாக விளையும் பெரிய சாத்துக்குடி என்று நினைத்தேன்.
அங்கிருந்து கிளம்பி, கொண்டை ஊசி வளைவுகளில் ஏற ஆரம்பித்தோம். அட்டகட்டியில் இருந்தபோது, வால்பாறையில் பதினாறு வளைவுகள் உண்டு. பள்ளியில் இருந்து திரும்புகையில் குறுக்கே குதித்து குதித்து கடந்து விடுவார்கள், அண்ணா அக்கா எல்லோரும். நல்ல ஊர் அது. இரவில் கரடி வந்து குழந்தை அழுவது போல் சப்தமிட்டு, கதவைச் சுரண்டும். நெல்லி மரங்கள், கோண புளியங்கா, மாலையானதும் வரிசையாய் வருகை தரும் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள், வெட்டி வைத்த மரங்களைத் தூக்க அழைத்து வரப்படும் யானைகள்... Why do tamarind trees live long? புளியங்கா இருப்பதால் என்று ஆர்குட்டில் கடித்தது ஞாபகம் வந்தது.

இனிமையான நாட்கள். 

கீழிருந்து மேலே செல்வபவர்களுக்கு, திருப்பங்களில்,  மேலிருந்து இறங்குபவர்கள் ஒதுங்கி வழிவிடவேண்டும் என்று Right of Way பற்றி இரவி சொல்லிக்கொண்டிருக்கும்போதே பின்னால் பாரமேற்றி வந்த லாரி திரும்பும் நேரத்தில் பேருந்தைக் குறுக்கே பாய்ச்சினார் அதன் ஓட்டுனர். 

Kun x 100. 

மேலே ஏற ஏற சில்லென்ற காற்று படர்ந்தது. மலையரசி மக்கள் நெருக்கத்தால் திணறிக்கொண்டிருந்தாள். வளைந்து வளைந்து மேலேறிய எறும்புகள் போல அங்குமிங்கும் அலைந்தவண்ணம் மக்கள். அரசு, அரசிக்கு வேறொரு முகம் தந்திருந்தது. அந்த முகமூடியும் அங்கியும் இல்லாது அவளை நேசிப்பவர்கள் அங்கேயே இருந்தனர். வந்து செல்பவருக்கான பூச்சுகளுடன் வரவேது செலவேதென, zuzu-வைக்கடந்து அவலாஞ்சி சாலையில் விரைந்தோம். குதிரைகள் மேட்டில் மேய்ந்துகொண்டிருந்தன. பசும்புல் போர்வையில் மூடிக்கொண்டு கதகதப்பாக ஒரு மலை அக்குபங்க்ச்சர் ஊசிகளைச் செருகிக்கொண்டு ஓய்வாக சூரியக்குளியல் நடத்திக் கொண்டிருந்தது. கண்களை மூடியபடி அதிர்வுகளை உள்வாங்கி இன்றைக்கு எத்தனை பேர் கடந்தனர் என்று அது கணக்குப் போட்டுக்கொண்டிருக்கக் கூடும். நமக்கென்ன என்று எல்லோரும் சோம்பலாக விரைந்தோம்.

ஆறாவது கிலோமீட்டரில் சாலைக்கு இருபுறமும் Krishnaja Retreat. அழகான குடியிருப்பு. அத்ருஷ்டவசமாக நாங்கள் தங்கியது வலது மூலையில் மேல் வரிசையில். முன்னும் பின்னும் விரிந்த காட்சிகளிலிருந்து கண்ணெடுத்து உட்புகவே நேரமாகியது. வெறும் தரையில் கால்வைத்தாலே, மானஸரோவரில் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கவேண்டுமென்று எண்ணினார்கள் போலும், பளிங்குக் கல் தரை! எட்டு மணி ஆனதும் இன்னும் குளிர் ஏறியதால், பசும்புல் போர்வை போதாமல் இருட்டையும் போத்திக்கொண்டன மலைகள். அவற்றிற்கு நடுவே வெளிச்சம் சூழ்ந்த வீடுகளும் அறைகளும் ஆடையற்றாற்போல் இருந்தன. 

"சார், குளிர் ஊருக்கப் போறீங்க. டயட் அது இதுன்னு சரியா சாப்டாம இருக்காதீங்க, பசியோட இருந்தா ரொம்ப குளிர் தெரியும்", கிருஷ்ணாவின் குரல் மனதினுள் கேட்டது. சட்டென, பிரியமான சிஷ்யர்கள் சூழ அங்கே வட்டமாய் அமர்ந்து கொள்ளவேண்டும் போல் இருந்தது. "இன்னொரு தடவ சாம்பார் சாதம் சாப்பிடறேன்"

"நேத்திக்கு சரியான மழைங்க. இல்லாட்டி இவ்ளோ குளிராது. காலைல ஒரு ஏழு மணிக்கு டீ கொண்டுவரட்டுங்களா? டிபன் என்ன வேணும்னு அப்போ சொன்னீங்கன்னா போதும். இட்டிலி-தோசை கெடைக்கும்"

பன்னிரண்டு டிகிரி செல்சியஸ் குளிர் இருக்கும், 6000 அடி உயரத்தில் இருக்கிறோம் என்று ரவி சொன்னான். ஃபேஸ்புக்கின் நிலைச் செய்தி தயார் என்று BSNL உபயத்தில் "Krishnaja Retreat, Avalanche, Fernhill. 6000 ft/12•C! Fahrenheit? Faaaaaaaar from heat. :)" என்று எழுதிவிட்டு Warmex -ஐ ஓடவிட்டுப் படுத்தோம். விடியலில் குளிர் நடுக்குமென்பதால்  எழுக்கோ எட்டுக்கோ எழுந்தால் போதும் என்று சொன்னதற்கு மண்டைய மண்டைய ஆட்டிவிட்டு, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு, ஐந்தேகாலுக்கெல்லாம் எழுந்துவிட்டேன்!

புல்லெல்லாம் போட்டபின்பும்
பல்லெல்லாம் தந்திபோல
மேகங்கள் மேலுரச
இழுத்திழுத்து மேலணிந்தாய்.

இருட்டையும் சேர்த்து
இழுத்தே போத்தியதும்
கதகதப்பாய்த் தானே
கடந்திருக்கும் இரவு?

காலையில் புல் மட்டும்
துளித்துளியாய் ஈரம் மேவ,
யாரோடு கூடினாய்
யானறியாது.
zuzu & krithicka

 right of way!Add caption


accupuncture


indha kadhuvula right thirumbi...

indha vazhiyA mEla pOi

marupadiyum oru right
a

Monday, May 30, 2011

அவலாஞ்சி ரோடு - 1

தலைப்பைப் படித்ததும், கோகுலைக் (Google. உபயம் சமீப கால விஜயகாந்த் வாரல்கள்) கேட்டு படங்கள் பார்த்து படிக்கத் தொடரும் யானை-புலி இரசிக  மெய்யன்பர்கள் மேற்கொண்டு தொடர வேண்டாம். 

சமிரா ரெட்டியைப் பார்த்த சூர்யாவின் நெஞ்சுக்குள் பெய்ததைப் போல, 

"கிரியருகில் காலுணர்தல் கிட்டிடாத கழை
 பிரிவுணர்தல் இல்லையேல் பிழை" 
என்று ஒரு வெண்பாமைப் போட்டு ட்விட்டர் நண்பர்களுக்கு ஒரு BFN சொல்லிவிட்டுக் கிளம்பினோம் இரவி ஒரு காரிலும், அருண் ஒரு காரிலுமாக. ஊட்டியிலிருந்து அவலாஞ்சி செல்லும் சாலையில் ஆறாவது கிலோமீட்டரில் Krishnaja Retreat. பழக்க தோஷத்தில் retweet என்றே காலிஃப்ளவருக்குச் செய்தியனுப்பின, கண்கள். 

சனிக்கிழமை (26-5-11) காலை பத்து மணிக்குக் கிளம்ப உத்தேசித்து, சிலபல தாமதங்களால் கொழுத்த எம கண்டத்தில் புறப்பட்டோம். ஏழு கண்டங்களின் விஸ்தீரணத்தை விட இந்த துணைக்கண்டத்தின் அல்பாயுசு எம கண்டங்கள், அது கிளப்பும் 'wish the ரணம்' விசேஷமானது. திடீரென குறுக்கே ஓடும் ஆட்டோ, வழி விடாது செல்லும் 'வழி விடு முருகா' லாரிகளை (ஒரு வேளை இராமதாசோ இரவிக்குமாரோ படிக்க நேர்ந்தால் சுமையுந்து எனத் திருத்தி வாசிக்கவும்) இடைஞ்சலாக நினைக்காமல் மனதை ஆறுதல்படுத்த யமனோ ராகுவோ உதவக்கூடும். 

மதிய வேளை என்பதால் பீப் பிரியாணி (அப்படி எழுதாதீர்கள் என்று யாரேனும் சொன்னால் தேவலை) சாப்பிட்டிருந்த லாரி ஓட்டுனர்கள் ஓய்வெடுக்க, மேட்டுப்பாளையம் சாலையில் மேவிக் கடந்தோம். உதகை மலையடிவாரத்தில் கல்லாறு தோட்டம் கண்களில் பட்டது. கல்லார் என்று இங்கிலிஷில் பார்த்துவிட்டு கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்று காரினுள்ளேயே காத்திருந்தேன். 'கதவ சாத்திக்குங்க, கொரங்கு வந்துரும்', என்று டிரைவர் ரமேஷ் சொன்னார். 

'அப்படியா!'

'ஆமாங்... நான் ஒருக்கா டிபன் (lunch) எடுத்துகிட்டு வந்து சாபட்லாம்னு பிரிச்சேன். ஒரு கொரங்கு வந்திச்சு. ஒரு கை சோத்தை எடுத்து போட்டேன் பாருங்க, ஜங்குன்னு ஒரு.. நாப்பது கொரங்கு மேலேந்து என்ன சுத்தி குதிச்சுது! அப்படியே போட்டுட்டு ஓடிட்டேன்'


ராம்கி வந்து, 'சித்தப்பா.. நீங்க வாங்க.. அருண்குமார் சொன்னான்... வீல்ச்சேர்லயே பாதி தூரம் போலாமாம்.. அது வரைக்கும் நீங்க வாங்க', என்றான். தோட்டம் ஆரம்பிக்கும் இடத்திலுருந்து உள்ளே சற்று தொலைவு வரை கார் செல்லலாம், விடவில்லை. பார்வையாளர்கள் நிறைய பைக்குகளை உள்ளே தான் நிறுத்தியிருந்தார்கள். அந்த இடம் வரை அனுமதித்தால் கூட வீல்ச்சேரின் மெல்லிய சக்கரங்கள், கல்லும் மேடு பள்ளங்களுமாய் இருந்த இடத்தை எளிதாகக் கடந்துவிடும். அங்கே இருந்த பெண் பையன்கள் சொல்லியது காதில் ஏறுமுன் மறுத்து வேறு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். நான் பேசாமல் பஸ்சுக்குள் 'என் பெயர் செல்வி. வாய் பேச இயலாது... கார்டுடன் ஏறுபவர்களைப் போல, 'என் பெயர் நாகராஜன்...' என்று அச்சடித்து வைத்துக் கொண்டால் என்ன என எண்ணினேன். காரிலோ modified honda activa-விலோ  இருந்து கொண்டு, ஆயிரம் வார்த்தைகளால் விளக்க முயற்சித்து விளங்காதவைகளை வெறும் பர்முடா அணிந்துகொண்டு கால்களைக் காட்டியபடி கையால் பெடல் செய்தபடி மூன்று சக்கர வாகனத்தில் சென்றால் அவர்கள் எளிதில் அறிந்துகொள்ளக்கூடும். காட்சிகளால் கதை செல்லல் அறியாது பேசிப்பேசிக் கொல்லும் கலை(ஞர்) வளர்த்த தமிழ் சினிமா ரசிகன் இங்கே மட்டும் இப்படி!

யானை சவாரி போல ஒட்டகச்சிவிங்கி தலையில் மணையைப் போட்டு அமர்ந்தால்தான் பார்க்க முடியும் உயரத்தில் தலை விரித்தும் அடக்கமாயும் மரங்கள்; வேர்களிடம் பேசினால் உச்சியிலை சிலிர்க்கும் உயிப்புடன். முகப்பில் இருக்கும் இலவம் மரத்திலிருந்து காய்கள் வெடித்து தாத்தா பூச்சிகளாய் செம்மலையின்றிப் பறந்துகொண்டிருந்தது பஞ்சு. பலாப்பழங்கள் வேரிலிருந்து உச்சிவரை 'மர்க்கட கிஸோர ந்யாயமாய்' மேலெங்கும் முள்ளிருந்தும், எரியாமல் பற்றிக்கொண்டிருந்தன. சிங்கப்பூர் பலா வகையும் இருந்தது. 


எனக்கு பலான மேட்டர்கள் பழக்கமில்லையே தவிர, பலா matters to me a lot. மிதுன ராசிக்கு விருக்ஷம் பலா தான். மிருதங்கமாய் என் மடியில் பெரும்பாலும் இருப்பதும் அதுவே.  மடி என்றால் பாலிருக்கும்; கோபுச்சம் என வாலிருக்கும். Wall என்றால் முகநூலிருக்கும். Facebook-ல் Farmville விளையாட்டில் (நான் level 121) என்னுடைய farm-ல் Singapore Jackfruit மரங்கள் நிறைய உண்டு. ஊரிலிருந்து கிளம்பி ஒரு வாரமாகியிருந்ததால் வாத்யத்தைப் பிரிவுணர ஆரம்பித்திருந்தேன். பையன்கள் தள்ளுவதால் hand rest-ல் வாசித்தபடி இன்னும் முன்னே செல்ல, வேர் பரப்பி விழுதுகள் பூண்டு, இருபது பேர்கள் கைகோத்தால் PDA பண்ணும் அளவில் ஆலமரம். அதைக் கண்டதும் வைத்தா அண்ணா (குறிப்பு கீழே) ஞாபகம் வேறு.                                         
Glossary:-

BFN- bye for now
PDA- public display of affection

"கிரியருகில் காலுணர்தல் கிட்டிடாத கழை
 பிரிவுணர்தல் இல்லையேல் பிழை" 

கிரி-மலை/ கால்-காற்று-மூச்சு/ கழை-கரும்பு.
பிரிவுணர்தல்: feeling of missing sb or sth 


மலைகள் சூழ்ந்த இயற்கைச் சூழலில் பிராணாயாமம் செய்து மனஒருமை அடைதல் கரும்பு போல் இனிமை எனினும், நண்பர்களைப் பாராதிருக்கும் வருத்தம் வரவில்லையெனில் தவறு.

செம்மலை: அருணாச்சலம். (அருண-சிவப்பு/அசலம்-மலை) அருணோதயம் என்று செங்கதிர்ச் சூரியன் என்று இள ஞாயிறைச் சொல்வது அதனால் தான். பால பகலவன்!

கோபுச்சம்: gO-பசு/puchcham-வால். வாலின் அமைப்பு, அகலமாய் தொடங்கி சிறுத்துக் கொண்டே வந்து குருகியிருக்கும். அது போல, தத் தித் தகதின, தித் தகதின, தகதின என்று செல்லும் அமைப்பிற்கு அந்தப் பெயர். கோபுச்ச யதி என்னும் இதைத் தவிர இன்னும் ஐந்து யதிகள் உண்டு. நேரில் சந்திக்கும் போது சொல்கிறேன்.


Thanjavur Vaidhyanatha Iyer (c. 1940)


Vaidyanatha Ayyar was born in Vaiyacheri near Thanjavur in 1897 and died on April 13, 1947. He learned mridangam from Thanjavur Doss Swamigal, Kannuswami Nattuvanar, and K. Ponniah Pillai. He trained disciples in the "Guru Kula" system. He was popularly known as "Vaitha Anna," ("Vaitha" is the short form for Vaidhyanatha and "Anna" means elder brother.) Initially, he played for Parameswara Iyer’s drama troop and traveled to many places in India. Soon, he accompanied Harikesanallur Muthaih Bhagavathar, Fiddle Appa Iyer Subharama Bhagavathar, Kanchipuram Nayana Pillai (from 1916-1926). He also served in the State Broadcasting Radio Station in Trivandrum. Vaidhyanatha Iyer served as a "King Maker" in the field of mridangam with three of his disciples being the legends Palghat T. A. S. Mani Iyer, T. K. Murthy, and Umayalpuram K. Sivaraman. Only after coming under his tutelage, Mani Iyer started playing the "arai chappu" stroke (more common in modern mridangam playing). T. K. Murthy grew up as an adopted son in the maestro’s house and often played double mridangam with him in many concerts. Umayalpuram K. Sivaraman used to play any lesson in 4 speeds immediately after learning the nuances from Vaitha Anna at the young age of 14. Like the singing culture of vocalists, T. V. Iyer imparted a unique pedagogy based on his mridangam fingering and is today considered to be the "Father of Mridangam." It is said that in his playing style, one can identify whether a pallavi, anupallavi, or charanam was being performed just by hearing his mridangam accompaniment. His other disciples include Mangudi Dorairaja Iyer (who wrote a book for learning mridangam), ghatam Vilvadhri Iyer, and Krishnamurthy Rao, among others. 

(http://www.nscottrobinson.com/southindiaperc.php)