தலைப்பைப் படித்ததும், கோகுலைக் (Google. உபயம் சமீப கால விஜயகாந்த் வாரல்கள்) கேட்டு படங்கள் பார்த்து படிக்கத் தொடரும் யானை-புலி இரசிக மெய்யன்பர்கள் மேற்கொண்டு தொடர வேண்டாம்.
சமிரா ரெட்டியைப் பார்த்த சூர்யாவின் நெஞ்சுக்குள் பெய்ததைப் போல,
"கிரியருகில் காலுணர்தல் கிட்டிடாத கழை
பிரிவுணர்தல் இல்லையேல் பிழை"
என்று ஒரு வெண்பாமைப் போட்டு ட்விட்டர் நண்பர்களுக்கு ஒரு BFN சொல்லிவிட்டுக் கிளம்பினோம் இரவி ஒரு காரிலும், அருண் ஒரு காரிலுமாக. ஊட்டியிலிருந்து அவலாஞ்சி செல்லும் சாலையில் ஆறாவது கிலோமீட்டரில் Krishnaja Retreat. பழக்க தோஷத்தில் retweet என்றே காலிஃப்ளவருக்குச் செய்தியனுப்பின, கண்கள்.
சனிக்கிழமை (26-5-11) காலை பத்து மணிக்குக் கிளம்ப உத்தேசித்து, சிலபல தாமதங்களால் கொழுத்த எம கண்டத்தில் புறப்பட்டோம். ஏழு கண்டங்களின் விஸ்தீரணத்தை விட இந்த துணைக்கண்டத்தின் அல்பாயுசு எம கண்டங்கள், அது கிளப்பும் 'wish the ரணம்' விசேஷமானது. திடீரென குறுக்கே ஓடும் ஆட்டோ, வழி விடாது செல்லும் 'வழி விடு முருகா' லாரிகளை (ஒரு வேளை இராமதாசோ இரவிக்குமாரோ படிக்க நேர்ந்தால் சுமையுந்து எனத் திருத்தி வாசிக்கவும்) இடைஞ்சலாக நினைக்காமல் மனதை ஆறுதல்படுத்த யமனோ ராகுவோ உதவக்கூடும்.
மதிய வேளை என்பதால் பீப் பிரியாணி (அப்படி எழுதாதீர்கள் என்று யாரேனும் சொன்னால் தேவலை) சாப்பிட்டிருந்த லாரி ஓட்டுனர்கள் ஓய்வெடுக்க, மேட்டுப்பாளையம் சாலையில் மேவிக் கடந்தோம். உதகை மலையடிவாரத்தில் கல்லாறு தோட்டம் கண்களில் பட்டது. கல்லார் என்று இங்கிலிஷில் பார்த்துவிட்டு கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்று காரினுள்ளேயே காத்திருந்தேன். 'கதவ சாத்திக்குங்க, கொரங்கு வந்துரும்', என்று டிரைவர் ரமேஷ் சொன்னார்.
'அப்படியா!'
'ஆமாங்... நான் ஒருக்கா டிபன் (lunch) எடுத்துகிட்டு வந்து சாபட்லாம்னு பிரிச்சேன். ஒரு கொரங்கு வந்திச்சு. ஒரு கை சோத்தை எடுத்து போட்டேன் பாருங்க, ஜங்குன்னு ஒரு.. நாப்பது கொரங்கு மேலேந்து என்ன சுத்தி குதிச்சுது! அப்படியே போட்டுட்டு ஓடிட்டேன்'
ராம்கி வந்து, 'சித்தப்பா.. நீங்க வாங்க.. அருண்குமார் சொன்னான்... வீல்ச்சேர்லயே பாதி தூரம் போலாமாம்.. அது வரைக்கும் நீங்க வாங்க', என்றான். தோட்டம் ஆரம்பிக்கும் இடத்திலுருந்து உள்ளே சற்று தொலைவு வரை கார் செல்லலாம், விடவில்லை. பார்வையாளர்கள் நிறைய பைக்குகளை உள்ளே தான் நிறுத்தியிருந்தார்கள். அந்த இடம் வரை அனுமதித்தால் கூட வீல்ச்சேரின் மெல்லிய சக்கரங்கள், கல்லும் மேடு பள்ளங்களுமாய் இருந்த இடத்தை எளிதாகக் கடந்துவிடும். அங்கே இருந்த பெண் பையன்கள் சொல்லியது காதில் ஏறுமுன் மறுத்து வேறு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். நான் பேசாமல் பஸ்சுக்குள் 'என் பெயர் செல்வி. வாய் பேச இயலாது... கார்டுடன் ஏறுபவர்களைப் போல, 'என் பெயர் நாகராஜன்...' என்று அச்சடித்து வைத்துக் கொண்டால் என்ன என எண்ணினேன். காரிலோ modified honda activa-விலோ இருந்து கொண்டு, ஆயிரம் வார்த்தைகளால் விளக்க முயற்சித்து விளங்காதவைகளை வெறும் பர்முடா அணிந்துகொண்டு கால்களைக் காட்டியபடி கையால் பெடல் செய்தபடி மூன்று சக்கர வாகனத்தில் சென்றால் அவர்கள் எளிதில் அறிந்துகொள்ளக்கூடும். காட்சிகளால் கதை செல்லல் அறியாது பேசிப்பேசிக் கொல்லும் கலை(ஞர்) வளர்த்த தமிழ் சினிமா ரசிகன் இங்கே மட்டும் இப்படி!
யானை சவாரி போல ஒட்டகச்சிவிங்கி தலையில் மணையைப் போட்டு அமர்ந்தால்தான் பார்க்க முடியும் உயரத்தில் தலை விரித்தும் அடக்கமாயும் மரங்கள்; வேர்களிடம் பேசினால் உச்சியிலை சிலிர்க்கும் உயிப்புடன். முகப்பில் இருக்கும் இலவம் மரத்திலிருந்து காய்கள் வெடித்து தாத்தா பூச்சிகளாய் செம்மலையின்றிப் பறந்துகொண்டிருந்தது பஞ்சு. பலாப்பழங்கள் வேரிலிருந்து உச்சிவரை 'மர்க்கட கிஸோர ந்யாயமாய்' மேலெங்கும் முள்ளிருந்தும், எரியாமல் பற்றிக்கொண்டிருந்தன. சிங்கப்பூர் பலா வகையும் இருந்தது.
எனக்கு பலான மேட்டர்கள் பழக்கமில்லையே தவிர, பலா matters to me a lot. மிதுன ராசிக்கு விருக்ஷம் பலா தான். மிருதங்கமாய் என் மடியில் பெரும்பாலும் இருப்பதும் அதுவே. மடி என்றால் பாலிருக்கும்; கோபுச்சம் என வாலிருக்கும். Wall என்றால் முகநூலிருக்கும். Facebook-ல் Farmville விளையாட்டில் (நான் level 121) என்னுடைய farm-ல் Singapore Jackfruit மரங்கள் நிறைய உண்டு. ஊரிலிருந்து கிளம்பி ஒரு வாரமாகியிருந்ததால் வாத்யத்தைப் பிரிவுணர ஆரம்பித்திருந்தேன். பையன்கள் தள்ளுவதால் hand rest-ல் வாசித்தபடி இன்னும் முன்னே செல்ல, வேர் பரப்பி விழுதுகள் பூண்டு, இருபது பேர்கள் கைகோத்தால் PDA பண்ணும் அளவில் ஆலமரம். அதைக் கண்டதும் வைத்தா அண்ணா (குறிப்பு கீழே) ஞாபகம் வேறு.
எனக்கு பலான மேட்டர்கள் பழக்கமில்லையே தவிர, பலா matters to me a lot. மிதுன ராசிக்கு விருக்ஷம் பலா தான். மிருதங்கமாய் என் மடியில் பெரும்பாலும் இருப்பதும் அதுவே. மடி என்றால் பாலிருக்கும்; கோபுச்சம் என வாலிருக்கும். Wall என்றால் முகநூலிருக்கும். Facebook-ல் Farmville விளையாட்டில் (நான் level 121) என்னுடைய farm-ல் Singapore Jackfruit மரங்கள் நிறைய உண்டு. ஊரிலிருந்து கிளம்பி ஒரு வாரமாகியிருந்ததால் வாத்யத்தைப் பிரிவுணர ஆரம்பித்திருந்தேன். பையன்கள் தள்ளுவதால் hand rest-ல் வாசித்தபடி இன்னும் முன்னே செல்ல, வேர் பரப்பி விழுதுகள் பூண்டு, இருபது பேர்கள் கைகோத்தால் PDA பண்ணும் அளவில் ஆலமரம். அதைக் கண்டதும் வைத்தா அண்ணா (குறிப்பு கீழே) ஞாபகம் வேறு.
BFN- bye for now
PDA- public display of affection
PDA- public display of affection
"கிரியருகில் காலுணர்தல் கிட்டிடாத கழை
பிரிவுணர்தல் இல்லையேல் பிழை"
கிரி-மலை/ கால்-காற்று-மூச்சு/ கழை-கரும்பு.
பிரிவுணர்தல்: feeling of missing sb or sth
மலைகள் சூழ்ந்த இயற்கைச் சூழலில் பிராணாயாமம் செய்து மனஒருமை அடைதல் கரும்பு போல் இனிமை எனினும், நண்பர்களைப் பாராதிருக்கும் வருத்தம் வரவில்லையெனில் தவறு.
மலைகள் சூழ்ந்த இயற்கைச் சூழலில் பிராணாயாமம் செய்து மனஒருமை அடைதல் கரும்பு போல் இனிமை எனினும், நண்பர்களைப் பாராதிருக்கும் வருத்தம் வரவில்லையெனில் தவறு.
செம்மலை: அருணாச்சலம். (அருண-சிவப்பு/அசலம்-மலை) அருணோதயம் என்று செங்கதிர்ச் சூரியன் என்று இள ஞாயிறைச் சொல்வது அதனால் தான். பால பகலவன்!
கோபுச்சம்: gO-பசு/puchcham-வால். வாலின் அமைப்பு, அகலமாய் தொடங்கி சிறுத்துக் கொண்டே வந்து குருகியிருக்கும். அது போல, தத் தித் தகதின, தித் தகதின, தகதின என்று செல்லும் அமைப்பிற்கு அந்தப் பெயர். கோபுச்ச யதி என்னும் இதைத் தவிர இன்னும் ஐந்து யதிகள் உண்டு. நேரில் சந்திக்கும் போது சொல்கிறேன்.
Thanjavur Vaidhyanatha Iyer (c. 1940)
Vaidyanatha Ayyar was born in Vaiyacheri near Thanjavur in 1897 and died on April 13, 1947. He learned mridangam from Thanjavur Doss Swamigal, Kannuswami Nattuvanar, and K. Ponniah Pillai. He trained disciples in the "Guru Kula" system. He was popularly known as "Vaitha Anna," ("Vaitha" is the short form for Vaidhyanatha and "Anna" means elder brother.) Initially, he played for Parameswara Iyer’s drama troop and traveled to many places in India. Soon, he accompanied Harikesanallur Muthaih Bhagavathar, Fiddle Appa Iyer Subharama Bhagavathar, Kanchipuram Nayana Pillai (from 1916-1926). He also served in the State Broadcasting Radio Station in Trivandrum. Vaidhyanatha Iyer served as a "King Maker" in the field of mridangam with three of his disciples being the legends Palghat T. A. S. Mani Iyer, T. K. Murthy, and Umayalpuram K. Sivaraman. Only after coming under his tutelage, Mani Iyer started playing the "arai chappu" stroke (more common in modern mridangam playing). T. K. Murthy grew up as an adopted son in the maestro’s house and often played double mridangam with him in many concerts. Umayalpuram K. Sivaraman used to play any lesson in 4 speeds immediately after learning the nuances from Vaitha Anna at the young age of 14. Like the singing culture of vocalists, T. V. Iyer imparted a unique pedagogy based on his mridangam fingering and is today considered to be the "Father of Mridangam." It is said that in his playing style, one can identify whether a pallavi, anupallavi, or charanam was being performed just by hearing his mridangam accompaniment. His other disciples include Mangudi Dorairaja Iyer (who wrote a book for learning mridangam), ghatam Vilvadhri Iyer, and Krishnamurthy Rao, among others.
(http://www.nscottrobinson.com/southindiaperc.php)
அவலாஞ்சி டாம் - என்னுடைய பன்னிரண்டு வயதில் பார்த்தது. இப்போ எப்படி இருக்கின்றது? படங்கள் வெளியிடவும்.
ReplyDeleteஅன்புடன்
கௌதமன்
இன்னைக்குத்தான் உங்க ப்லாக் பார்க்கிறேன் அருமை நாகா..:) ஒரு மலைப்பக்கத்துக்கு இலவச டூர் போனது போல இருக்கு..:)
ReplyDelete//மதிய வேளை என்பதால் பீப் பிரியாணி (அப்படி எழுதாதீர்கள் என்று யாரேனும் சொன்னால் தேவலை//
ReplyDeletelol ;))))))
IMG_1894 பழம் பேரு என்ன தின்ன ஞாபகம் இருக்கு பேரு மட்டும் நாட் கம்மிங் :)
thank you thenammai. :)
ReplyDeletegouthaman anna, shall write.
Ayilyan, it is bablimas.
//கிரியருகில் காலுணர்தல்//
ReplyDeleteநான் ஏதோ என்னியப் பத்தி சொல்ல வந்திருக்கீங்கன்னு நெனச்சேன்!
:)
ReplyDeleteநகைச்சுவை இழையோட எழுதியிருக்கீங்க. ஏற்கெனவே ட்விட்டரில் சொன்னது தான்...
ReplyDelete//திடீரென குறுக்கே ஓடும் ஆட்டோ, வழி விடாது செல்லும் 'வழி விடு முருகா' லாரிகளை (ஒரு வேளை இராமதாசோ இரவிக்குமாரோ படிக்க நேர்ந்தால் சுமையுந்து எனத் திருத்தி வாசிக்கவும்) இடைஞ்சலாக நினைக்காமல் மனதை ஆறுதல்படுத்த யமனோ ராகுவோ உதவக்கூடும். // இதை உரக்கக் கண்டிக்கிறேன். ஆட்டோவையும் சுமையுந்து, லாரியையும் சுமையுந்து என்றும் ஒரே தரத்தில் எழுதியதற்காக 'இ'ராகு கூட உதவ மாட்டார், ஆட்டோ தான் வரும்;-)
ஆட்டோ-தானுந்து/கார்-மகிழ்வுந்து/ஏரோப்ளேன்-வானுந்து..
ReplyDeleteபல வருடங்களுக்கு முன் பேருந்து என்ற வார்த்தை பிரபலமாகிக் கொண்டிருக்கையில் ஆனந்த விகடனிலோ குமுதத்திலோ ஜீப்பை உந்துந்து என்று கலாய்த்திருந்தார்கள்.
ஆலமர விழுதில் ஊஞ்சல் ஆனந்தம்:)! நல்ல பகிர்வு.
ReplyDeletethank you :>
ReplyDeleteI liked the 'jayakanthan' meesai. ;)
ReplyDeletearavukkarasar ezhuttilE sugam, azhuttam--eppOdumE.
ReplyDeleteNagaraj,
Not only did you take me along on your trip, you gave me a chance to picture you when you reach your golden years!
Greetings!
thank you.
ReplyDeleteif manas craves for thapas in caves, the goal-den days are closer than yesterday :)
'pun'narasar nam pannagarasar :)
ReplyDeleteவேர்களிடம் பேசினால் உச்சியிலை சிலிர்க்கும் உயிப்புடன்.//
ReplyDeleteஅற்புதமான ரசனை, கவனிப்பு. பல நாட்கள் ஆச்சு உங்க பதிவுகளுக்கு வந்து. வந்ததுமே அவலாஞ்சிப்பயணம்! போனதில்லை. ஊட்டியில் இருந்தும் போக முடியலை! இனிமேல் முடியுமா? தெரியலை. நல்ல வர்ணனைகள்.
காரிலோ modified honda activa-விலோ இருந்து கொண்டு, ஆயிரம் வார்த்தைகளால் விளக்க முயற்சித்து விளங்காதவைகளை வெறும் பர்முடா அணிந்துகொண்டு கால்களைக் காட்டியபடி கையால் பெடல் செய்தபடி மூன்று சக்கர வாகனத்தில் சென்றால் அவர்கள் எளிதில் அறிந்துகொள்ளக்கூடும்.//
மனம் கனக்கச் செய்தது.
பம்ப்ளிமாஸ் உத்தராஞ்சல் மாநிலத்தில் அதிகம் பார்க்கலாம்.
எத்தன நாட்களுக்கு முன்னாடி இத படிக்கணும்னு புக் மார்க் பண்ணி வெச்சேன் தெரியுமா? இன்னிக்கு தான் sir நேரம் வர்க் ஔட் ஆயிர்க்கு!
ReplyDelete"செம்ம slang!!!"
Pause கொடுக்க முடியாதபடி எழுதி இருக்கீங்க! டொபக்குனு Part 2-க்கு தாவுறேன்!
welcome bhavani.. :)
ReplyDeleteநான் ரொம்ப லேட். புதிதாக ஒன்றும் பாராட்டி எழுத முடியாது. எனினும், ரசித்துப் படித்தேன் / வியந்தேன் உங்கள் எழுத்துவளம் நினைத்து என்று பதிவு செய்கிறேன். - ஜெகன்னாதன்
ReplyDeletethank you.. engEyAbadhu uLaRiyiruppEn, vidAdheergaL :)
ReplyDelete