Tuesday, May 31, 2011

அவலாஞ்சி ரோடு - 2

அடி மரத்தில் இருவர் நிற்குமளவிற்கு இடமிருந்தது. அங்கிருந்து வேர்களின் மேல் நடந்தால் விழுது தொங்கல் எளிதானது. அதற்கு மேல் என்னால் செல்ல முடியவில்லை. குறுக்கே சிறு வாய்க்கால்கள் வழியெங்கும் குறுக்கிட்டன. மேலே மூன்றடி அகலக் கல் இருந்திருந்தால்... இல்லை. நான் அங்கேயே இருப்பதாகச் சொல்லி அருணையும் ராம்கியையும் அனுப்பிவிட்டேன்.

சட்டென ஒரு யானையோ, கரடியோ at least, பற்களைக் காட்டியபடி ஒரு  நாயோ வந்திருந்தால் கூட முதல் பாகத்திலேயே எழுதித் தொடரும் போட்டிருக்கலாம். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. 

திரும்பி வரும்போது ராம்கியின் கையில் ஒரு பெரிய பப்ளிமாஸ் இருந்தது. முதலில் அது அபூர்வமாக விளையும் பெரிய சாத்துக்குடி என்று நினைத்தேன்.
அங்கிருந்து கிளம்பி, கொண்டை ஊசி வளைவுகளில் ஏற ஆரம்பித்தோம். அட்டகட்டியில் இருந்தபோது, வால்பாறையில் பதினாறு வளைவுகள் உண்டு. பள்ளியில் இருந்து திரும்புகையில் குறுக்கே குதித்து குதித்து கடந்து விடுவார்கள், அண்ணா அக்கா எல்லோரும். நல்ல ஊர் அது. இரவில் கரடி வந்து குழந்தை அழுவது போல் சப்தமிட்டு, கதவைச் சுரண்டும். நெல்லி மரங்கள், கோண புளியங்கா, மாலையானதும் வரிசையாய் வருகை தரும் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள், வெட்டி வைத்த மரங்களைத் தூக்க அழைத்து வரப்படும் யானைகள்... Why do tamarind trees live long? புளியங்கா இருப்பதால் என்று ஆர்குட்டில் கடித்தது ஞாபகம் வந்தது.

இனிமையான நாட்கள். 

கீழிருந்து மேலே செல்வபவர்களுக்கு, திருப்பங்களில்,  மேலிருந்து இறங்குபவர்கள் ஒதுங்கி வழிவிடவேண்டும் என்று Right of Way பற்றி இரவி சொல்லிக்கொண்டிருக்கும்போதே பின்னால் பாரமேற்றி வந்த லாரி திரும்பும் நேரத்தில் பேருந்தைக் குறுக்கே பாய்ச்சினார் அதன் ஓட்டுனர். 

Kun x 100. 

மேலே ஏற ஏற சில்லென்ற காற்று படர்ந்தது. மலையரசி மக்கள் நெருக்கத்தால் திணறிக்கொண்டிருந்தாள். வளைந்து வளைந்து மேலேறிய எறும்புகள் போல அங்குமிங்கும் அலைந்தவண்ணம் மக்கள். அரசு, அரசிக்கு வேறொரு முகம் தந்திருந்தது. அந்த முகமூடியும் அங்கியும் இல்லாது அவளை நேசிப்பவர்கள் அங்கேயே இருந்தனர். வந்து செல்பவருக்கான பூச்சுகளுடன் வரவேது செலவேதென, zuzu-வைக்கடந்து அவலாஞ்சி சாலையில் விரைந்தோம். குதிரைகள் மேட்டில் மேய்ந்துகொண்டிருந்தன. பசும்புல் போர்வையில் மூடிக்கொண்டு கதகதப்பாக ஒரு மலை அக்குபங்க்ச்சர் ஊசிகளைச் செருகிக்கொண்டு ஓய்வாக சூரியக்குளியல் நடத்திக் கொண்டிருந்தது. கண்களை மூடியபடி அதிர்வுகளை உள்வாங்கி இன்றைக்கு எத்தனை பேர் கடந்தனர் என்று அது கணக்குப் போட்டுக்கொண்டிருக்கக் கூடும். நமக்கென்ன என்று எல்லோரும் சோம்பலாக விரைந்தோம்.

ஆறாவது கிலோமீட்டரில் சாலைக்கு இருபுறமும் Krishnaja Retreat. அழகான குடியிருப்பு. அத்ருஷ்டவசமாக நாங்கள் தங்கியது வலது மூலையில் மேல் வரிசையில். முன்னும் பின்னும் விரிந்த காட்சிகளிலிருந்து கண்ணெடுத்து உட்புகவே நேரமாகியது. வெறும் தரையில் கால்வைத்தாலே, மானஸரோவரில் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கவேண்டுமென்று எண்ணினார்கள் போலும், பளிங்குக் கல் தரை! எட்டு மணி ஆனதும் இன்னும் குளிர் ஏறியதால், பசும்புல் போர்வை போதாமல் இருட்டையும் போத்திக்கொண்டன மலைகள். அவற்றிற்கு நடுவே வெளிச்சம் சூழ்ந்த வீடுகளும் அறைகளும் ஆடையற்றாற்போல் இருந்தன. 

"சார், குளிர் ஊருக்கப் போறீங்க. டயட் அது இதுன்னு சரியா சாப்டாம இருக்காதீங்க, பசியோட இருந்தா ரொம்ப குளிர் தெரியும்", கிருஷ்ணாவின் குரல் மனதினுள் கேட்டது. சட்டென, பிரியமான சிஷ்யர்கள் சூழ அங்கே வட்டமாய் அமர்ந்து கொள்ளவேண்டும் போல் இருந்தது. "இன்னொரு தடவ சாம்பார் சாதம் சாப்பிடறேன்"

"நேத்திக்கு சரியான மழைங்க. இல்லாட்டி இவ்ளோ குளிராது. காலைல ஒரு ஏழு மணிக்கு டீ கொண்டுவரட்டுங்களா? டிபன் என்ன வேணும்னு அப்போ சொன்னீங்கன்னா போதும். இட்டிலி-தோசை கெடைக்கும்"

பன்னிரண்டு டிகிரி செல்சியஸ் குளிர் இருக்கும், 6000 அடி உயரத்தில் இருக்கிறோம் என்று ரவி சொன்னான். ஃபேஸ்புக்கின் நிலைச் செய்தி தயார் என்று BSNL உபயத்தில் "Krishnaja Retreat, Avalanche, Fernhill. 6000 ft/12•C! Fahrenheit? Faaaaaaaar from heat. :)" என்று எழுதிவிட்டு Warmex -ஐ ஓடவிட்டுப் படுத்தோம். விடியலில் குளிர் நடுக்குமென்பதால்  எழுக்கோ எட்டுக்கோ எழுந்தால் போதும் என்று சொன்னதற்கு மண்டைய மண்டைய ஆட்டிவிட்டு, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு, ஐந்தேகாலுக்கெல்லாம் எழுந்துவிட்டேன்!

புல்லெல்லாம் போட்டபின்பும்
பல்லெல்லாம் தந்திபோல
மேகங்கள் மேலுரச
இழுத்திழுத்து மேலணிந்தாய்.

இருட்டையும் சேர்த்து
இழுத்தே போத்தியதும்
கதகதப்பாய்த் தானே
கடந்திருக்கும் இரவு?

காலையில் புல் மட்டும்
துளித்துளியாய் ஈரம் மேவ,
யாரோடு கூடினாய்
யானறியாது.




zuzu & krithicka

 right of way!



Add caption


accupuncture














indha kadhuvula right thirumbi...

indha vazhiyA mEla pOi

marupadiyum oru right




a

7 comments:

  1. பகிர்வும் படங்கள்ம் அருமை.

    ReplyDelete
  2. சூப்பர் சார்......

    ReplyDelete
  3. பயணத்தை நல்லா ரசிச்சு அனுபவிச்சிருக்கீங்க. //கதகதப்பாக ஒரு மலை அக்குபங்க்ச்சர் ஊசிகளைச் செருகிக்கொண்டு// //மானஸரோவரில் ஸ்நானம் செய்த புண்ணியம்//

    அப்படி எழுதினதால தான், //முதல் பாகத்திலேயே எழுதித் தொடரும் போட்டிருக்கலாம்// என்றெல்லாம் எதிர்பார்க்கலை. உங்க திருப்திக்காக வேண்ணா, போன பகுதியில ஒரு பெரும் சத்தம் கேட்டது...தொடரும் போட்டுட்டு, "என் வயிறு"ன்னு போட்டிருக்கலாம்.

    படங்களும் மிகவே நல்லா வந்திருக்கு. அடுத்தமுறை ஊட்டி பயணம் இருந்தால் கட்டாயம் இந்த ஓட்டலில் ("தங்குமிடத்தில்") தங்கப் பார்க்கிறோம். நன்றி!

    ReplyDelete
  4. பள்ளியில் இருந்து திரும்புகையில் குறுக்கே குதித்து குதித்து கடந்து விடுவார்கள், அண்ணா அக்கா எல்லோரும். நல்ல ஊர் அது. இரவில் கரடி வந்து குழந்தை அழுவது போல் சப்தமிட்டு, கதவைச் சுரண்டும். //

    ஆஹா, நினைக்கவே ஜாலியா இருக்கு. கரடி எதுக்கு வந்தது?? பசியோ?? சாப்பிட ஏதேனும் கொடுத்திருக்கலாம். குழந்தை மாதிரி தானே அழுதிருக்கு? :D

    ReplyDelete
  5. கண்களை மூடியபடி அதிர்வுகளை உள்வாங்கி இன்றைக்கு எத்தனை பேர் கடந்தனர் என்று அது கணக்குப் போட்டுக்கொண்டிருக்கக் கூடும். நமக்கென்ன என்று எல்லோரும் சோம்பலாக விரைந்தோம்.//

    உண்மைதான். சில சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்களைப்பார்க்கையில் என்னுள்ளும் தோன்றும் இந்த மாதிரியான எண்ணங்கள்.

    ReplyDelete
  6. சூப்பர்! ரசித்தேன்! Zuzu பொம்ம கூட அழகா இருந்திச்சு! கண்டிப்பா ஒரு முறை போய் பாக்கணும் ன்னு தோணுது!! :)

    ReplyDelete