Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

Saturday, July 4, 2009

ஒரு சுவாரஸ்ய கடிதம்...

ஜெயமோகனின் "மீசை" படித்துவிட்டு அவருக்கு எழுதியிருந்தேன்.

Dear J,


ஒரு நாள், என்னுடைய குரு, உமையாள்புரம் சிவராமன் சார், “ஏண்டா… எதுக்கு மீசை… அதை எடுத்துடேன்”, என்றார். மறுநாள் சரஸ்வதி பூஜை. இன்னிக்கு மீசையை எடுத்துட்டு, நாளைக்கு விஜயதசமிக்குப் போய் மீசை இல்லாம ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கணும் என்று, எடுத்துவிட்டேன்.

“இப்போ தான் ஒரு ஜீனியஸ் லுக் இருக்கு”
“இன்டெலெக்சுவல் களை”
“மொழு மொழுன்னு இருக்கேள்”… என்று பலவிதமாய் காம்ப்ளிமெண்டுகள் காற்றில் பறந்தன.

மீசை, உடல் உழைப்பின்-வாசிப்பின் சின்னச்சின்ன சிரமங்களை ரகசியப்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது சாதாரணமாக வாசித்தாலும் எவரேனும் வநது, உடம்பு சரியில்லையா என்று கேட்டார்கள். முடியும் வெட்டிக்கொண்ட தினத்தில், டாக்டர் ஸ்ரீனிவாசன் “அப்பா சௌக்கியமா இருக்காரோன்னோ..” என்றார்.
மூன்று மாதத்தில் மீண்டும் மீசையிடம் சரண் புகுந்தேன்!
ஈரோடு நாகராஜன்.
இதுதான் வித்தியாசம். என்னிடம் எல்லாரும் மீசை எடுத்தபின் ”என்ன சார் சீரியஸா ஏதாவது யோசிக்கிறிங்களா’ என்றுதான் கேட்கிறார்கள்.
ஜெ (ஜெயமோகன்)

Sunday, May 17, 2009

ஜெயமோகனின் கடிதம்...



“நம்மில் இருக்கும் நமக்குப் பிடிக்காமல் இருக்கும் ஓர் அம்சத்தை இன்னொருவரில் கண்டால்கூட அவரை நாம் வெறுக்கிறோம். வெறுப்பின் ஊற்றுமுகங்கள் மிகமிக ஆழமானவை.”

- ஜெயமோகன்.

Dear J,

உண்மை.
இளம்பிள்ளைவாதம் என்னைத் தாக்கிய போது, என் வயது இரண்டரை. இப்போது, முப்பத்து எட்டு. கர்நாடக இசையில் அறியப்பட்ட, ஒரு மிருதங்க வித்வான். மூன்று சக்கரங்கள் பொருத்திய கைனடிக் ஹோண்டாவில் சென்னையின் நீள அகலங்களைக் கச்சேரிகளுக்காய் கடக்கையில், சிக்னலில் காண நேர்கின்ற சக ஊனமுற்றவர்கள் முகம் திருப்பி எங்கேயோ பார்க்கிறார்கள்.
பழகுதற்கினியனாய் விளங்கும் என்னியல்பு வெகு சுலபமாக தோற்றுவிடும் இடங்களில் இதுவும் ஒன்று. People who are physically sound, mingles very easily with me than people with disabilities do.
முட்டாள்கள் - முட்டாள்களையும், குடிகாரர்கள் - குடிகாரர்களையும் நேசிப்பதில் கூட தடையேதும் இல்லை. ஆனால், உடற்குறைபாடு கொண்டவர் பாடு சற்று திண்டாட்டம் தான். வாழ்வின் கீழ்நிலைகளில் சார்ந்து வாழ்தல் தவிர்க்க இயலாத நிலையில் தான் வெறுப்பின்றி பழகுகிறார்கள்; சங்கங்கள் இயங்குகின்றன. இங்கே பலரும் இப்படித்தான் என்ற எண்ணமே அவர்களை சகஜமாக்கி விடுகிறது. இருவர் மட்டும் differently abled, மற்றவர்கள் சாதாரணர்கள் எனும் போது ஒரு இறுக்கம் வந்துவிடுகிறது.
கொஞ்சம் மேலே வந்து விட்டவர்கள் கூட, தன்னைக் குறித்த உயர் எண்ணப் பிழையாலேயே (superiority illusions), மனதின் ஆழத்தில் தேக்கிய தாழ்வு மனப்பான்மையால், தங்கள் மீதே வெறுப்புற்று, தன் பிம்பமாக ஒன்றைக் கண்டதும், முகம் திருப்பிக்கொள்கிறார்கள்.
அது, ஆரம்ப நிலை தயக்கமாக இருக்கலாம் என்று இன்னும் கொஞ்சம் சிரித்தோ, நட்பாகப் பார்த்தோ செய்தால், “எங்க ஏரியா, உள்ள வராதே” என்று title card போடுகிறார்கள்.
ஈரோடு நாகராஜன்.
–
wishes,
Erode Nagaraj.

அன்புள்ள ஈரோடு நாகராஜன்

தங்கள் கடிதம். உண்மை. மனித மனங்களின் வகைகளைந் ஆம் நம் வாழ்க்கை மூலம் அள்ளவே முடியாது. எளிய சூத்திரங்களுக்குள் அவை அடங்காது. பிறரை புரிந்துகொள்வது என்பது நுட்பமாக நோக்கினால் நம்மை புரிந்துகொள்வதே. பிறரைப் புரிந்துகொள்ள தன்னை நோக்குபவன், தன் வாழ்க்கையை தன்னை மட்டும் சார்ந்தே அமைத்துக் கொள்பவன் மட்டுமே மகிழ்ச்சியை அடைய முடியும். பிறர் என்பது நம்மைச்சுற்றி உள்ள இயற்கை என்னும் ஆடியில் பிரதிபலிக்கும் நம்முடைய பிம்பங்களே

ஜெ