Sunday, May 17, 2009

ஜெயமோகனின் கடிதம்...



நம்மில் இருக்கும் நமக்குப் பிடிக்காமல் இருக்கும் ஓர் அம்சத்தை இன்னொருவரில் கண்டால்கூட அவரை நாம் வெறுக்கிறோம். வெறுப்பின் ஊற்றுமுகங்கள் மிகமிக ஆழமானவை.”

- ஜெயமோகன்.

Dear J,

உண்மை.
இளம்பிள்ளைவாதம் என்னைத் தாக்கிய போது, என் வயது இரண்டரை. இப்போது, முப்பத்து எட்டு. கர்நாடக இசையில் அறியப்பட்ட, ஒரு மிருதங்க வித்வான். மூன்று சக்கரங்கள் பொருத்திய கைனடிக் ஹோண்டாவில் சென்னையின் நீள அகலங்களைக் கச்சேரிகளுக்காய் கடக்கையில், சிக்னலில் காண நேர்கின்ற சக ஊனமுற்றவர்கள் முகம் திருப்பி எங்கேயோ பார்க்கிறார்கள்.
பழகுதற்கினியனாய் விளங்கும் என்னியல்பு வெகு சுலபமாக தோற்றுவிடும் இடங்களில் இதுவும் ஒன்று. People who are physically sound, mingles very easily with me than people with disabilities do.
முட்டாள்கள் - முட்டாள்களையும், குடிகாரர்கள் - குடிகாரர்களையும் நேசிப்பதில் கூட தடையேதும் இல்லை. ஆனால், உடற்குறைபாடு கொண்டவர் பாடு சற்று திண்டாட்டம் தான். வாழ்வின் கீழ்நிலைகளில் சார்ந்து வாழ்தல் தவிர்க்க இயலாத நிலையில் தான் வெறுப்பின்றி பழகுகிறார்கள்; சங்கங்கள் இயங்குகின்றன. இங்கே பலரும் இப்படித்தான் என்ற எண்ணமே அவர்களை சகஜமாக்கி விடுகிறது. இருவர் மட்டும் differently abled, மற்றவர்கள் சாதாரணர்கள் எனும் போது ஒரு இறுக்கம் வந்துவிடுகிறது.
கொஞ்சம் மேலே வந்து விட்டவர்கள் கூட, தன்னைக் குறித்த உயர் எண்ணப் பிழையாலேயே (superiority illusions), மனதின் ஆழத்தில் தேக்கிய தாழ்வு மனப்பான்மையால், தங்கள் மீதே வெறுப்புற்று, தன் பிம்பமாக ஒன்றைக் கண்டதும், முகம் திருப்பிக்கொள்கிறார்கள்.
அது, ஆரம்ப நிலை தயக்கமாக இருக்கலாம் என்று இன்னும் கொஞ்சம் சிரித்தோ, நட்பாகப் பார்த்தோ செய்தால், “எங்க ஏரியா, உள்ள வராதே” என்று title card போடுகிறார்கள்.
ஈரோடு நாகராஜன்.

wishes,
Erode Nagaraj.

அன்புள்ள ஈரோடு நாகராஜன்

தங்கள் கடிதம். உண்மை. மனித மனங்களின் வகைகளைந் ஆம் நம் வாழ்க்கை மூலம் அள்ளவே முடியாது. எளிய சூத்திரங்களுக்குள் அவை அடங்காது. பிறரை புரிந்துகொள்வது என்பது நுட்பமாக நோக்கினால் நம்மை புரிந்துகொள்வதே. பிறரைப் புரிந்துகொள்ள தன்னை நோக்குபவன், தன் வாழ்க்கையை தன்னை மட்டும் சார்ந்தே அமைத்துக் கொள்பவன் மட்டுமே மகிழ்ச்சியை அடைய முடியும். பிறர் என்பது நம்மைச்சுற்றி உள்ள இயற்கை என்னும் ஆடியில் பிரதிபலிக்கும் நம்முடைய பிம்பங்களே

ஜெ

1 comment:

  1. //சிக்னலில் காண நேர்கின்ற சக ஊனமுற்றவர்கள் முகம் திருப்பி எங்கேயோ பார்க்கிறார்கள்.//

    புதிய செய்தி. பொதுவாய் சமூகத்தில் இருந்து தாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாய் உணர்கின்றார்கள் என்றே நினைத்தேன். :(((((((((( Anyway Bless You All. Hats Off to your Braveness.

    ReplyDelete