Monday, June 8, 2009


1. கரிய முண்டா துணை சபாநாயகர் ஆனதில், பா.ஜ.கா.விற்கு ஏதேனும் காரியமுண்டா?


2. A330-ஐ கூட்டினால் ஏழு வருவதற்கும் 216+12 பேர் இறந்ததற்கும் நியூமராலஜி தில்லாலங்கடிகள் என்ன சொல்லுவார்கள்?

3. உர விலையைக் குறைப்பேன் என்று மதுரை அண்ணன் சூளுரைத்ததால் இந்நேரம் எதிர்பார்த்த "நியாயமான" collections, தொழிலதிபர்களிடமிருந்து வசூலாயிருக்குமா?


4. மம்தா வந்த பிறகாவது, இரயில்களில் இணைக்கப்பட்ட இடைச்செருகல் - பாடாவதி extra fitting berth-கள் நீக்கப்படுமா?


5. எது முதலில் வரும்?

அ. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே
பொதுவான சட்டம் ...

ஆ. பொது சிவில் சட்டம்...

இ. பெண்களுக்கான 33%...


6. இந்தியப் பயணிகளை அவமதித்த ஃப்ரான்சு விமானப் போக்குவரத்து நிறுவனம் விஷயத்தில் இந்தியா தனது மானப் பிரச்சனையாக பார்க்குமா (அ) அவரவர் சுயமரியாதை என்று வாளாவிருக்குமா?

7. சூப்பர் சிங்கர் ஜூனியராவது 2011-க்குள் முடிந்துவிடுமா?
.......

No comments:

Post a Comment