Thursday, June 18, 2009

நாகர்கோயில் பயணம் - 2


google image of the broken bridge, maNakkudi.

மீட்டெடுக்கவியலா
மனிதர்களின்
மரண ஓலம்,

அலைகளின் பேரிரைச்சலில்

மௌனமாகவே கொள்ளப்பட்டிருக்கும்.

அழுவான் என்று
நம்பியிருந்த உறவுகள் கூட,
வயிற்றுக்குள் மண்ணடைத்து,
வருந்துதற்கு ஆளின்றி

வந்துசேர்ந்த அதிர்ச்சியில்
மாண்டதே மறந்து போகும்;
மறுஜன்மம் வெறுத்துப் போகும்.


பாலங்கள் தாங்கிக்கொண்டிருந்தாலும் மனம் கனத்தது. War Memorial -கள் நினைவில் ஆடின. கூடை கூடையாய் கோயம்பேடு மார்க்கெட்டில் அழுகிவிடும் காய்கறிகள் போல, கொத்து கொத்தாய் உணர்வின்றி மனிதர்கள் மரித்துப் போனது துக்கமாயிருந்தது

காதுகளை வெளிமுகமாய்த் திருப்பிய காலம் தான் மனிதன் உள்ளுணர்வைத் தொலைத்ததின் ஆரம்பமாய் இருந்திருக்கும் எனத் தோன்றியது.
உள்ளே ஏற்படும் நுண்ணிய சலனங்களை, உணர்வுகளை அறியாமல் போன க்ஷணத்தை மனிதன் உணராமல் இருந்திருக்க வேண்டும்.




"போற வழியில தொட்டிப்பாலம் இருக்கு, பாக்கலாமா", என்றார் டிரைவர் சுதர்சன்.

தொட்டிப்பாலம் ஒரு தொங்கும் பாலம் என்று ரவி சொன்னார், ஆசியாவின் மிகப்பெரிய என்று சேர்த்து. ஆனால் அது தொங்கும் பாலம் அல்ல - "அதனுயரக் கால்கள்" அதைத் தாங்கிக்கொண்டிருந்தன என்று அங்கே போனதும் தெரிந்தது. (ஆளுயர என்றால் மாலை; வானுயர என்றால் மிகை! இது சௌகர்யம், உண்மையும் கூட :) )


வீல் சேர் செல்லுமளவு அகலம்,
ஒரு கிலோ மீட்டர் நீளம், இரு மருங்கும் அடர்ந்த பசுமை ஆகிய காரணங்கள் போதுமானதாக இருந்தன, நான் அதைக் கண்டதும் காதல் கொள்ள.

"அருண், இந்த canal மேல இருக்கற குறுக்குக் கட்டைல கால வெச்சு, அந்த ஓரம் போயி, அந்த மரத்துல இருக்கற காயையோ எலையையோ நீ தொடறா மாதிரி ஒரு ஃபோட்டோ எடுக்கலாமா", என்று நான் கேட்டபோது, பாலத்தின் மறுமுனையில் இருந்தோம்.

"ம்ஹும்... வழீல கார்ல தூங்கீண்டே வந்ததுனால தூங்கு மூஞ்சியா இருக்கு" என்றான்.


விதவிதமான வேடங்களில் வந்தாலும் கொண்டையை மறைக்காது, மாட்டிக்கொள்ளும் வடிவேலு போல, மரங்கள் சூழ்ந்து, சற்று தூரத்தில் மறைந்து போன ஆற்றின் பாதையை தென்னை மரங்களின் உச்சிகள் காட்டிக் கொடுத்தபடியிருந்தன. ஆற்றின் கரையில் ஆனை படுத்தாற்போல பெரியதொரு பாறை இருந்தது. அருகே போனால் ஒன்பதாம் வகுப்பில் மூன்று வருடம் தங்கிய ஏதோ ஒரு
பெண்ணை, எத்தனை பேர் காதலித்தார்கள் என்ற கல்வெட்டுகள் கண்ணில் படக்கூடும்! கரையில், முன்குளியலாய் துணி அலசிய இருபெண்களின் பின்னால், இயற்கையாய்ச் செதுக்கிய நீர் நிறைந்த பள்ளங்களில் முகங்களாய்த் தெரிந்த பாறைகள்...












Wednesday, June 17, 2009

நாகர்கோயில் பயணம் - 1

ஒரு கல்யாணக் கச்சேரிக்காக நாகர்கோயில் சென்று வந்தேன். வள்ளியூர், ஆரல்வாய்மொழி என்ற பெயர்கள் எல்லாம் கேட்பதற்கும் இனிமையாகத்தான் இருக்கின்றன. என்னுடைய பார்வை உள்ளீடானதல்ல. வீல் சேரின் விளிம்பில் அமர்ந்து, ஜன்னலின் வழியே கடந்து செல்பவரைக் கணக்கெடுத்தால் போல விளிம்பு நிலை கொண்டதுதான்.

தென் தமிழகம் அழகாயிருந்தது; பயப்படாமல் பார்த்தேன்.

சமீப காலமாக நெல்லைச் சீமை ரவுடிகள் தேசமாக சித்தரிக்கப் பட்டாலும், இயற்கை அழகும் இலக்கியச் செறிவும் கொண்டபூமி அது. அங்கே நீர் வீழும்;நிலை கொள்ளும். காற்று வருடியும் துளைத்தும் போகும்.

அனந்தபுரி எங்களை நாகர்கோயில் சந்திப்பில் நழுவ விட்டபோது ஒன்பது மணியாகியிருந்தது. Collectorate (என்ன ஒரு வார்த்தை... கலெக்டர்-Ate! Secretary-Ate! Minister-Ate) எதிரில் வசந்த் கிருஷ்ணாவில் தங்கினோம். சாயங்காலம் ஐந்து மணிக்கே கச்சேரி.



அங்கே ரிசப்ஷனுக்கு டீ பார்ட்டி என்று தான் பெயர்... நாலரை மணிக்கெல்லாம் ஆரம்பித்துவிடும், ஒரு வாழைப் பழம் - tea or coffee - sweet -snack இது தான் வழக்கம், ஆனால், இப்போது சென்னை போல இரவு வரை reception and dinner என்று பழக்கம் மாறிவருவதாகச் சொன்னார்கள். பா...வின் பொன்.இராதாகிருஷ்ணன், .தி.மு..வின் நயினார் நாகேந்திரன் எல்லாம் வந்திருந்தார்கள். "காலைல அஞ்சு மணிக்கெல்லாம் ரெடியா இருங்க.. கார் அனுப்பறேன், கன்யாகுமரி எல்லாம் போயிட்டு வந்திருங்க" என்றார் Dr. தாணப்பன்.


வசுதாவுடன் அவள் அப்பாவும் (இரவி) என்னுடன் அருணும் (nephew) வந்திருந்தனர். இருவரும்
உடல் மண்ணுக்கு; உயிர் 20/20-க்கு என்று விடிய விடிய கிரிக்கெட் பார்த்து, கன்யாகுமரி போனபோது சூர்யோதயம் ஆகி 3 நிமிடங்கள் ஆகியிருந்தது. வழியில் ஜெப வீடுகளின் வாசல்களில் பிலோமினாக்கள் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.




விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை எல்லாம் கிட்டே போய் காலடி தேடாமல் கரையில் இருந்தபடி முழுதாகப் பார்த்தால் போதும் என்று சொல்லிவிட்டேன். அந்தக் கரையின் வளைவுகள் அழகாய் இருந்தன. விசாகப்பட்டினத்தின் பெரிய பாறைகளில் மோதும் அலைகள் இங்கே சிறிய பாறைகளின் இடுக்குகளில் சீறிக்கொண்டிருந்தன. அலைகளின் நீட்சி தான் மேகம் என்று கடல் பாஷையில் கதைத்தன.



இயற்கையும் செயற்கையும்... இரண்டுமே அழகுதான். இரண்டிலுமே, அந்தத் தருணத்திற்காய் காத்திருத்தல், தருணத்தை விட மிக அதிகம். அங்கிருந்து செல்லும்போது கீழ் மணக்குடி - மேல் மணக்குடி இரண்டு ஊர்களையும் இணைக்கும் பாலத்தைப் பார்த்தோம். இராணுவம் கட்டியிருக்கிறது. அதற்கு ஒரு வருடம் முன்னால் தான் சுமார் பத்து கோடிசெலவில் புதிய பாலத்தை அரசு கட்டியிருக்கிறது. சுனாமி வந்தபோது அதைமூன்றாய் உடைத்து வீசிவிட்டது.





அது, பழையாறு கடலுடன் கடக்கும் இடம். அங்கே தடுப்பதற்கு யாருமற்ற சுதந்திரத்தில் உள்ளே புகுந்து புரட்டிப் போட்டிருக்கிறது ஆழிப் பேரலை. ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் உன்னடிமை பாழில் திரிவதென்ன பாவம் பராபமே என்ற தாயுமானவரின் வரிகள் நினைவுக்கு வந்தன.
மாங்குரோவ் காடுகள் வளர்ப்பு திட்டம் என்று எழுதியிருந்த பாலத் துண்டுகள் பழையாற்றில் ஊறிக்கொண்டிருந்தன.






Thursday, June 11, 2009

Concert of Gayathri Venkataraghavan on mahA periyavA’s 116th jayanthi.

(shrI chandhrasEkarEndhra sarasvthy baktha jana sabha trust, ayOdhyA maNdapam on 7-6-09 at 7pm).
Vocal: Gayathri Venkataraghavan
Violin: Mysore Shrikanth
Mrudangam: Erode Nagaraj
Ghatam: H. Sivaramakrishnan.

Ayodhya Mandapam is a place where rasikas still have a well balanced resistance to fight against TV serials and a passion towards nama sankeerthanam, concerts and upanyasams. Nevertheless the chronic quotes of the noises owing to terrific traffic do disturb the tonic notes of the performers, the artistes and rasikas are least bothered as they have been immunized to such things for decades.
It is high time that proper measures are to be taken to convert the auditorium to a closed and air conditioned one, but the funds needed to build one such and the hOmams that occur there continually may be a reason for the trustee’s taking required time to decide on this.
Gayathri was in a divine mood throughout the concert as she herself is a devotee of periyava and made everyone sail in her boat. She began the concert with gopala Krishna bharathy’s siva lOka nAthanaik kaNdu in mAyAmALavagowLa (rUpaka chApu) with some interesting swaras like ma pa ma gA, dhA pa ma gA, nI dha pa ma gA….
She rendered a beautiful sketch of keervANi and sang Periyasamy Thooran’s puNNiyam oru kOti (Adhi). Shrikanth played well too. An unhurried rendition of the krithi with niraval and swaram in “annai kAmAkshi pOlE anbE vadivAi vandhAr” it was. The sancharas based on mEl sthAyi rishabam both in lower speed and middle speed were note worthy.
I always feel that “chathusruthi rishabam” conveys one’s intensity in doing something, following or in expressing your thoughts or your consenting to what is said in a particular line of the krithi. Doing upAsanA of nandhi may be a reason for loving rishabam!
Whenever gayathri was giving a sustain in thAra shadjam, all pallavans passed by, proved their honking are perfectly tuned to two points lower to kAkali nishAdham!
That reminded me of the joke, “If a pallavan bus is on road, where would you find yourself safer?
a)Inside your car?
b)On the platform?
c)Roof top of shops nearby?

Ans: None of the above… only if I am inside pallavan” big_smile (We were not inside sad )
shrI shankara guruvaram(nAgaswarAvaLi – rUpaka chApu – maha vaidhyanatha sivan), a must in all celebrations related to adhi shankara and periyava took its share before the main. It added flavour too, as all the songs were sung with graceful nidhAnam.
“enna perunthavam yAn seidhadhaRiyEnE (sahAnA - Adhi)” followed keervANi. The viruththam in sahAnA contained simple but effective words that speak about the quality of periyava. My memories travelled to my days at Erode during 1985, when there was a special announcement in AIR, "Listeners can hear periyasamy thooran’s song on kAnchi periyavA, sung by Smt. M.S.Subbulakshmi today after the news at 12-40pm and this will be relayed in all stations".
I got too excited and been ready with my little Philips and recorded the song with usual karakarA sounds offered freely by Coimbatore station!
Playing for it after 24 years was really great for me.

In the viruththam line “arumaRai thEn pozhi mukilE,” she sang mukilE.. mukilE… twice and prevented dhwithIya vignam for the mon,soon. (Concert was on Sunday and it started pouring on Monday!)
dhIkshithar’s kAmAkshi kAmakOti pIta vAsini in sumadhyuthi-rUpaka chApu came next.
She took N.S.Ramachandran’s “shrI chandhrasEkara yatheendhram (shankarAbharaNam-kaNda jAthi thruputai) for main. That was a suswaram embedded traditional shankarAbharaNam. Niraval and swaram were in adhvaithAm (arai edam). Shrikanth reminded MSG in certain sangathis.
We played chathusra and thisra gathis with kuRaippu for 18, 9, 4.5 beats and switched to varieties of 3 instead of doing sankeerNam phrases for 9 aksharAs heading towards a rare mOrA of sAkkOttai shrI rangu iyengAr followed by a kOrvai of UKS sir.
UKS sir plays this mOrA in kaNda thruputai and also performs this in higher speed with his razor sharp clarity and precision in thisra gathi of rUpaka chApu too. Thinking of this, I, before playing it in ordinary chathusra gathi madhyama kAlam, did a mAnaseeka namskAram to my revered guru, as I usually do.
Thanks to GV for giving me three cheers… a song on periyava, a thani in kaNda thruputa and for making me remember my guru and parama guru!
The post main songs were:
kAnchi nagar vAzhum karuNAlayamE – kAnadA – Adhi – Aravarasan
brUhi mukundhEthi – kurinji – Adhi – Sadhasiva Brahmendrar
kAmakOti aruLirundhAl – kApi – Adhi – Rukmani Ramni
pAl ninaindhoottum – viruththam – mANikka vAsagar – mOhanam and shanmukha priyA followed by thEnena inikkum thiruvarut kadalE – Vallalar ArutpA.
By the time she finished viruththam, periyavA’s idol was taken in a well decorated chariot for procession. The story of the vigraham appeared in shakthi vikatan recently.
maithreem bajatha – yaman kalyANi – Adhi – Maha Periyava
mangaLam – sowrAshtram – Adhi – Thyagaraja.
There were banners in the maNdapam sounding like some punch dialogues of recent trend in films! That would have been avoided and quotes form periyavA’s dheivaththin kural in words of His holiness might have been appropriate. But this is my personal view only.
We were given hOma rakshai too along with other prasAdhams. Especially, my sishya Krishna Prasadh and Jophan, a student of Thanjavur Shri Vaidhyanatha Iyer School For Percussion, The Music Academy, enjoyed the suNdal, kEsari and hot pongal a lot.
The efforts of mEchEri shrI pattu sAsthrigaL and mambalamites are great that the celebrations were well organized with hitham, santhOsham and bakthi.
smile cool smile

[actually i noticed later only, that i have talked about pongal and all that and, the review ends with Hitham,Santhosham & Bakthi - HSB!
i think this review has one more place, "hilarity in concert reviews" big_smile
I shall upload the song and lyrics as soon as I get a clear recording.]
Do you think parents are not initaiting their children to learn Vedam like official studies?

Erode Nagaraj:
Yes. Though people like all these slokas; respect all vedhas; be devotee of saints, when it comes to personal life, they never encourage such things. Everyone wants his/her kid to be an engineer(civil or criminal :P), an IT guy (they really become "it" from being he or she or prefers to prefix she to IT :D)

they will do namaskaram irrespective of place and floor conditions, but they can never see their kid become a sanyasi!

Horribly, sometimes they feel proud to say, for he had to attend his friend's b'day (read carefully - not peeday :P) i told him to skip sandhyavandhanam and vedha class (or paatu, violin, mrudangam etc.)... you see, parties are part of their life... he may need to attend a lot of parties, be members of clubs in future, no...?"

Monday, June 8, 2009


1. கரிய முண்டா துணை சபாநாயகர் ஆனதில், பா.ஜ.கா.விற்கு ஏதேனும் காரியமுண்டா?


2. A330-ஐ கூட்டினால் ஏழு வருவதற்கும் 216+12 பேர் இறந்ததற்கும் நியூமராலஜி தில்லாலங்கடிகள் என்ன சொல்லுவார்கள்?

3. உர விலையைக் குறைப்பேன் என்று மதுரை அண்ணன் சூளுரைத்ததால் இந்நேரம் எதிர்பார்த்த "நியாயமான" collections, தொழிலதிபர்களிடமிருந்து வசூலாயிருக்குமா?


4. மம்தா வந்த பிறகாவது, இரயில்களில் இணைக்கப்பட்ட இடைச்செருகல் - பாடாவதி extra fitting berth-கள் நீக்கப்படுமா?


5. எது முதலில் வரும்?

அ. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே
பொதுவான சட்டம் ...

ஆ. பொது சிவில் சட்டம்...

இ. பெண்களுக்கான 33%...


6. இந்தியப் பயணிகளை அவமதித்த ஃப்ரான்சு விமானப் போக்குவரத்து நிறுவனம் விஷயத்தில் இந்தியா தனது மானப் பிரச்சனையாக பார்க்குமா (அ) அவரவர் சுயமரியாதை என்று வாளாவிருக்குமா?

7. சூப்பர் சிங்கர் ஜூனியராவது 2011-க்குள் முடிந்துவிடுமா?
.......

Sunday, June 7, 2009

ஜகத்குரு பாமாலை...



........................................................

ஜய ஜய சங்கர .................................................ஹர ஹர சங்கர


.............................................ஜகத்குரு பாமாலை

......................(இயற்றியவர் - திரு. சு. கிருஷ்ணமுர்த்தி)


கணபதிக்கோர்
காப்பிசைதுன் மலர்பதமே போற்றவந்தோம்
குரு
சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!
ஜயவருடம்
வைகாசி அனுஷமதில் அவதரித்தாய்
ஜகம்புகழும்
ஜகத்குருவாய் ஜயமுடனே திகழ்கின்றாய்
பாலகனாய்ப்
பதின்மூன்றாம் ஆண்டினிலே பட்டமுற்றாய்
குரு
சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!

'பட்டவிழா' 'பராபவத்து' மாசியிலே நாலாம் நாள்
'பவழவிழா' 'துன்மதியின்' மாசி பதினாலாம் நாள்
அகிலமெல்லாம்
போற்றிடுமோர் அருங்குருவாம் சங்கரனே
அறுபத்து
எட்டாகும் பீடமதில் அமர்ந்தவனே
தென்னாடு
உடையோனே 'பெரியவாள்' எம்பிரானே
எந்நாடும்
'இறைவ'னெனப் போற்றும் சிவபெருமானே
எல்லையிலாப்
பெருங்கருணை பொழிந்தெமையே காப்பவனே
தொல்லையெலாம்
களைந்தெமக்கே அருள் வழங்கும் கற்பகமே
குரு
சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!

கயிலைபதி
ஈஸ்வரனே கலியில் குரு ஆனவனே
கருணைமிகு
சங்கரனே அருணைசிவ சோதியனே
பித்தனென
பேயனென சுந்தரன் சொல் கேட்டவனே
அத்தனென
ஐயனென அடியவர் சொல் கேட்டவனே
பொன்னான
மேனியனே கொன்றை மிளிர் சடையோனே
கண்ணான
கண்மணியே மங்களமே சங்கரனே
ஐயாறு
அகலாத செம்பொன்னாம் சோதியனே
தேர்ஊரும்
ஆரூரா தென்பாண்டி நாட்டானே
குரு
சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!

மாசில்லாத்
தங்கமென உனைச்சிலபேர் ஏத்திடுவார்
மனிதரிலே
மாணிக்கம் எனச் சிலபேர் ஏத்திடுவார்
மனிதரிலே
தெய்வமென உனைச் சிலபேர் ஏத்திடுவார்
முக்காலும்
அறிந்தகுரு எனச் சிலபேர் ஏத்திடுவார்
மாத்தவம்
செய் மாமுனிவர் எனச் சிலபேர் ஏத்திடுவார்
மாமோனத்
தவமுனிவர் எனச் சிலபேர் ஏத்திடுவார்
நீபேசும்
தெய்வமென நயமுடனே ஏத்திடுவார்
நடமாடும்
தெய்வமென நயந்துனையே ஏத்திடுவார்
எங்கும்
நிறை ப்ரம்மமென பகுத்தறிந்தோர் ஏத்திடுவார்
மங்களம்
சேர் சங்கரன் நீஎனத் தெளிந்தார் ஏத்திடுவார்
குரு
சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!

திருவானைக்
காவிற்கு திக்விஜயம் செய்தவனே
தேவியற்குத்
திருக்கரத்தால் தாடங்கம் பதித்தவனே
சிதம்பரமாம்
கூத்தனவன் திருத்தலமே வந்தவனே
நடமிடுவான்
பதமலர்க்குக் குஞ்சிதமே கொடுத்தவனே
வடதிசைக்கோர்
சிதம்பரமே நிர்மாணம் செய்தவனே
குடமுழுக்கு
காண 'சதா ராப்' பகலாய் நினைத்தவனே

காமாட்சி
குடமுழுக்கு காஞ்சியிலே செய்தவனே
தாயாட்சி
செய்வதற்கே தங்கரதம் அமைத்தவனே
அரங்கத்தான்
கோபுரத்தை நிறைவு பெறச் செய்தவனே
குருவாயூர்க்
கண்ணனுக்கோர் லட்சதீபம் கொடுத்தவனே
சங்கரர்க்கோர்
'ஸ்தூபி' தனைக் காலடியில் அமைத்தவனே
காமகோடி
ஆலயமே காசியிலே அமைத்தவனே
குருபதமே
பாரதமாம் தேசமெங்கும் பதித்தவனே
குருநாதர்
ஆலயமோ எங்கெங்கும் அமைத்தவனே
ஆலயங்கள்
எல்லாமே புதுமையுறச் செய்தவனே
அனுதினமும்
பூஜைசெய நிதிவகைகள் வகுத்தவனே
தூர்ந்துவிட்ட
கிணறு குளம் தூய்மை பெறச் செய்தவனே
தொன்றுதொட்டு
வரும் மறைகள் தினம் ஒலிக்க வைத்தவனே
அருச்சனைகள்
லட்சமொடு கோடிசெய வைத்தவனே
அகிலமெல்லாம்
உய்யபல வேள்விசெயச் செய்தவனே
புண்ணிய
நல் பாரதமே பாதவலம் வந்தவனே
புண்ணியனுன்
திருவருளால் வான் பொழியச் செய்தவனே
குரு
சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!

நித்தமொரு
பிடிஅரிசி போடும் திட்டம் வகுத்தளித்தாய்
நிதமதனால்
பசித்தோரின் பிணிதீர்க்கும் பயனளித்தாய்
'பால்' அளிக்கும் பசுகாக்கும் காப்பகங்கள் நிறுவச் செய்தாய்
காய்
பழங்கள் கழிதோல்கள் பசுக்களிக்கப் பரிந்துரைத்தாய் 
குருவேத வ்யாஸருக்கு வருடமொரு பூஜை செய்தாய்
விரதமொரு நாலுதிங்கள் நிலைத்திருந்தே முடித்திடுவாய்
சந்த்ரமௌளி ஈசர் பூஜை ஈடுபாடாய்ச் செய்துவந்தாய்
சந்தனமாம் மேருவினைத் தனியழகாய்ப் பூஜைசெய்தாய்


நாலு
மறை வேதியரை தனிச்சிறப்பாய்ப் போற்றச் செய்தாய்
திருமறை
ஒதிடுவோரைத் தக்கவிதம் ஏற்றம் செய்தாய்
சைவமொடு
வைணவத்தை ஒருங்கிணைக்கப் பாடுபட்டாய்
பாவையொடு
எம்பாவாய் மாநாடு கூட்டி வைத்தாய்
வித்தைமிகத்
தேர்ந்தோர்க்கு பொன்தோடா பரிசளித்தாய்
வித்வத்துச்
சபை கூட்டி அமர்ந்திருந்தே அலங்கரித்தாய்
கலைச்சிறப்பை
கௌரவித்து சால்வை மிகப் போர்த்திடுவாய்
முச்சமயத்
தத்துவங்கள் ஒருசேரும் வகை வகுத்தாய்
அத்வைத
தத்துவத்தை உலகறியப் பணி செய்தாய்
வேதம்
சொல் தர்ம வழிகாட்டி எங்கள் கண் திறந்தாய்
அருள்வாக்காய்
பொழிந்தெமக்கே பொருள் விளக்கம் தந்திட்டாய்
இருள்
நீக்கி ஒளிசேர்க்கும் இன்பநிலை தெரிய வைத்தாய்
திரிகாலம்
தெரிந்தெமக்கே உய்யும்வகை செய்திடுவாய்
வருபவைகள்
அறிந்தெமக்கே வழிவகைகள் காட்டிடுவாய்
கொடிய
புயல் வந்திடுமுன் சேது வந்து தங்கிவிட்டாய்
தந்திடுங்கள்
தானியங்கள் எனக்குவித்து உணவளித்தாய்
விளங்காதோர்
கிராமத்தில் வந்தொருநாள் தங்கிநின்றாய்
அளந்தாளா
படி அம்பாள் எனவியப்பில் ஆழ்த்தி நின்றாய்
குரு
சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!

திருஞானசம்பந்தன்
பதிகத்தைப் பாட வைத்தாய்
கோள்கள்
செயும் தீமைகள் தகர்ந்திடவே செய்திட்டாய்
பகைவர்
பயம் நீங்க துர்க்கா பஞ்சரத்னம் பாடச் சொன்னாய்
போர்
முனையில் வெற்றி தந்து பாரதத்தைக் காத்து நின்றாய்
சத்ரபதி ஆண்ட சதாரா நகரில் நீயிருந்தாய்
நிலமகளால்
கொண்டதொரு நடுக்கத்தை நீ அடக்கி நின்றாய்
அண்டை
மாநிலம் கடந்து ஹம்பி எனும் ஊர் வந்தாய்
கல்வெட்டைக்
காட்டி வித்யாரண்யர் புகழ் விளக்கி நின்றாய்

எல்லையில்லா
நின்கருணைதனைப் பேச வார்த்தையில்லை
இல்லை
இனி எமக்கிங்கு உனையின்றி ஒரு தெய்வம்
அருள்
செய்வோர் அவதாரம் இதுவெனவே அருளுகின்றாய்
அருள்
கரத்தால் புன்னகையால் பிறவிதுயர் அகற்றிடுவாய்
குறைவிலா
நிறைவும் நீ! அழிவில்லா பிரம்மம் நீ!
ஒருகோடி
ஆண்டில்லை என்றும் நிறை ஸத்யம் நீ!
நின்பாதமலர்
நினைந்தேனுன் திருவடியில் எமைச் சேர்ப்பாய்!
குரு
சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!