
தெருவோரம் ஒரு டயர் மேல் அமர்ந்து முடி வெட்டுதலும் பார்த்தேன். வண்ணங்களைக் கொண்டாடுவதைப் போலவே, கருப்பின் மீதுள்ள வெறுப்பினாலோ என்னமோ, முடியைப் பாடு படுத்திக்கொண்டிருந்தனர்.


மறுநாள் எல்லோரும் அங்கிருக்கும் ஷீரடி கோவிலுக்குச் சென்றனர். நான் காலடி எண்ணிக் களிப்புறுபவன் என்பதால் வாழ்க சீரடியாரெல்லாம் என்று இருந்துவிட்டேன். வீல் சேர் வராதது ஒரு காரணம். ஆலிஸ், குழந்தைகள் படிக்கின்றன, நான் பள்ளிக் கல்வி கற்றேன் என்றாள். ரெகே ம்யூசிக் தான் அவர்களின் இசை என்றாள். எனக்கு பாடிக்காட்டுகிறாயா என்றதும் முகம் சிவந்தாள். வீல் சேர் பதினொரு மணிக்கு மேல் வந்தது. அதற்குள் கோவிலில் இருந்து அனைவரும் திரும்பியிருந்தார்கள். அங்கிருந்து கிளம்பிச் சென்று அவ்வூரின் அடையாளமாக (yoruba) mask வாங்கிவரலாம் என்று கிளம்பினோம்.
"இங்க, EKO -ன்னு ஹோட்டல் இருக்கு, அது உள்ளேயே shops இருக்கு... நாம mask எல்லாம் வாங்கீடலாம்... முந்தா நாள் நல்ல மழை பேஞ்சு, லேக்கி மார்கெட் எல்லாம் சொத சொதன்னு இருக்கும்... சின்ன சந்து மாதிரி தான் இருக்கும், போறதுக்கு. அப்புறம், முத்து-பவழம் எல்லாம் இங்க பிரசித்தம்... நம்ப அபார்ட்மென்ட் மாடில தான் சிங்கர் சித்ராவோட ப்ரதர் இருக்கார். போன வருஷம் சித்ராவ இன்வைட் பண்ணீருந்தோம். நல்ல கூட்டம், ரொம்ப நன்னா பாடினா.. அடுத்த நாள், ஹரிஹரன் ப்ரோக்ராம் வேற இருந்துது...சித்ராக்கு, இந்த ஊர் முத்து ரொம்பப் பிடிக்கும்.. கிலோ கணக்குல தான் வாங்குவா... எங்க மேலயெல்லாம் ரொம்ப ப்ரியம்... என்னோட பொண்ணு மாதிரி தான் அவள்..." என்றார் ஆங்கிலத்தில். அவருக்கு ஊர் திருவனந்தபுரம். மலையாளமும் ஆங்கிலமும் நன்றாக வரும், not much thamizh என்றார்.
ஏதோ ஜயித்துப் பெற்ற trophy போல, முகமுடிகளைக் கையில் ஏந்தி, அங்கிருந்த மரத்தடியில் படமெடுத்துக்கொண்டோம். அந்த மரம், தூசி தட்டும் கருவிகளைச் செருகி வைத்த stand போல இருந்தது.
"நேரே வீட்டுக்குப் போகலாம்... அங்கே ஹாஜியை வரச் சொல்லியிருக்கிறேன்.. ஹாஜி யாரு தெரியுமோ? முத்து வியாபாரி..." என்றார் சிவராமன். Black pearls,coral, dull finish என்று முத்து மாலைகள் இறைந்து கிடந்தன ஹாஜியின் பையில். தரமான முத்துகள். சிறியதாய் சில மாலைகள் வாங்கினேன். அவைகள் என் பரிசாக இருக்கட்டும் என்றார் சிவராமன்.
மதிய உணவை முடித்து சற்று கண்ணயர்வதற்குள், அங்கே இருந்த ஐயப்பன் கோவிலுக்குச் கிளம்பும் சமயம் ஆனது. கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நம்பூதிரியின் பூஜையும் அன்பர்கள் பஜனையுமாக அந்தக் கோவில் உள்ளே நுழைந்ததும் KK நகர் போல இருந்தது. நடந்துகொண்டிருந்த பஜனையில் தமிழ் பாடல்கள் பாடிக்கொண்டிருக்க, ஒரு ஆப்ரிக்கர் டோல்கி வாசித்துக் கொண்டிருந்தார். அது நிறைந்ததும், ஒரு அரை மணி நேரம் பாடினோம். ஒரு வெங்கடாசலபதி சந்நிதி, அதன் எதிரே கூப்பிய கரங்களுடன் சிவந்த ஆஞ்சநேயர். அருகில் பிள்ளையார் - முருகன், நடுவில் ஐயப்பன் அதற்கடுத்து தனி ஹாலில் சகல சிலைகளும். அங்கு தான் மங்கள ஆரத்தி நடந்தது. மரத்தடியில் ஒரு சிவன் தவித்துக் கொண்டிருந்தார்.
இரா.கணபதி ஒரு முறை மஹா பெரியவாளிடம் (அவர் வார்த்தைகளிலேயே...),
//....தவிக்க என்ற வார்த்தையை பெரியவாள் சொல்லக்கேட்டதும், அது பற்றி என் கண்டுபிடிப்பைச் சொல்ல வேண்டுமென்று தவிப்பு ஏற்பட்டது. அதைப் பறிந்து கொண்ட சைகாலஜிஸ்ட், "என்னமாவது சொல்லணுமா" என்றார்.
"தவிக்கிறது-ன்ன தவம் செய்யறதுன்னு அர்த்தமோன்னு தோணறது. ஜபம் பண்றது ஜபிக்கறது; அதே மாதிரி தவம் பண்றது தவிக்கிரதுன்னு இருக்குமோன்னு.."
"ஸரியாத்தான் படறது... ஆனா, 'தபஸ்' னா நேர் அர்த்தம் சூட்டுல வறுத்தி எடுக்கறதுதான். ஒரே சிந்தனையா இறுக்கினா அப்படித்தான் ஒரு சூடு பொறக்கும். அப்போ, மனஸ் அசையாம நிக்கறதுதான் தபோ நிஷ்டை. 'தவிக்கறது' - ங்கறச்சையோ, மனஸ் நெலை கொள்ளாம இருக்கும். நெல கொள்ளாம தவிச்சேன்னு சொல்றோமோன்னோ? இப்படி மனஸ் நெலை கொள்ளாட்டாலும் ஏதோ ஒரு விஷயத்துலேயே அது உள்ளூர ஒரே ஈடுபாடா இருக்கறதாலேதான் அதை அடையறதுக்காக நெலை கொள்ளாம ஓடறது. ஆகையினாலே, ஒன் (சிரித்து) நூதன வியாக்யானமும் ஒரு தினுசுலே ஸரிதான்."//
அன்றிரவு சிவாவின் வீட்டில் விருந்து. மினி பீட்சா, கராபரா என்று களை கட்டியது. நரேன், நான், கோவை சந்திரன், சிவா, பவதாரிணி, விக்னேஷ், சிவராமன், பூர்ணஸ்ரீ எல்லோரும் பேசி மகிழ்ந்தோம்.
அடுத்த நாள் Bankers Hall -ல் கச்சேரி.
இரசித்துப் படித்தேன். படங்களும், வர்ணனைகளும், சம்பவக் கோர்வைகளும் அருமை.
ReplyDeleteHi
ReplyDeleteReally nice one.
I just feel like I was also there with you. Your writing is so homely
ReplyDeletecmlover
I feel like I was also there with you! Thanks for tking me along...
ReplyDelete//"ஸரியாத்தான் படறது... ஆனா, 'தபஸ்' னா நேர் அர்த்தம் சூட்டுல வறுத்தி எடுக்கறதுதான். ஒரே சிந்தனையா இறுக்கினா அப்படித்தான் ஒரு சூடு பொறக்கும். அப்போ, மனஸ் அசையாம நிக்கறதுதான் தபோ நிஷ்டை. 'தவிக்கறது' - ங்கறச்சையோ, மனஸ் நெலை கொள்ளாம இருக்கும். நெல கொள்ளாம தவிச்சேன்னு சொல்றோமோன்னோ? இப்படி மனஸ் நெலை கொள்ளாட்டாலும் ஏதோ ஒரு விஷயத்துலேயே அது உள்ளூர ஒரே ஈடுபாடா இருக்கறதாலேதான் அதை அடையறதுக்காக நெலை கொள்ளாம ஓடறது. ஆகையினாலே, ஒன் (சிரித்து) நூதன வியாக்யானமும் ஒரு தினுசுலே ஸரிதான்."//
ReplyDeleteநல்ல விளக்கம்!! பரமாசாரியாரையும் நடுவிலே அருமையான இடத்திலே கொண்டு வந்துட்டீங்க.நல்லா இருக்கு வர்ணனை, அந்த முத்துமாலைகளையும் படம் எடுத்துப் போட்டிருக்கலாமோ?? கண்ணாலாவது பார்த்திருப்பேன்! எனக்கு ஆசையெல்லாம் ஒண்ணும் இல்லை! சும்ம்ம்ம்ம்ம்மா! :)))))))))))))
சம்பவங்களையெல்லாம் சொன்னவிதம் உன் கூடவே
ReplyDeleteநாங்களும் இருக்கும் உணர்வுகள்...
'தவிப்பு' தபஸ்' அழகான அருமையான விளக்கம்!
வாழ்த்துகள் அன்பு நாகராஜ்!
அன்புடன்,
தங்கமணி.