அந்தக் காவலர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் சஹஜமாக கடமையைச் செய்தார்கள். அவர்கள் கைகளில் இருந்த நவீன ஆயுதங்கள் அதை மௌனமாகப் பார்த்துப் பழகியிருந்தன. சிறுமைப்படுத்தப்படும் எந்த ஒரு சமூஹமும் தனியே ஒருவன் கிடைத்தாலோ அல்லது அவர்கள் கூட்டமாக இருக்க நேர்ந்தாலோ அச்சம் தவிர்த்து வன்முறையில் இறங்கும். ஆனால், இந்தியர்களுக்கு வேறொரு அபிப்ராயம் இருந்தது.
"அவா எல்லாம் basic -ஆவே, lazy people... அதுனால தான் கொள்ளையடிக்கறா..." என்றபோது கண்மூடித்தனமாக அப்படியே நம்ப முடியவில்லை. இருந்த சில நாட்கள் பார்த்ததில், அதீதம் அவர்கள் இயல்பாயிருந்தது. பணிவு, முரட்டுத்தனம், புரிந்துகொள்ள முடியாமை, மாற மறுத்தல் எதுவுமே மிகையாக இருந்தது. இந்தியாவின் எந்தப் பிரிவினரும் ஆளுமை எண்ணங்களை மறைத்து, தங்களுக்குள் அதிக வித்யாசங்களின்றி பழகிக்கொண்டிருந்தார்கள். அதற்கு வலுவான இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று ஷீரடி இன்னொன்று ஒவ்வொரு இந்தியனும் இரண்டோ மூன்றோ நைஜீரியர்களை ஆண்டு கொண்டிருந்தான். வீடுகளிலும் ஆங்கிலேய மரபுகள் பேணப்பட்டன, வேலைக்காரர்கள் நம்மிடம் பழகும் விதத்திலும், நாம் அவர்களை நடத்தும் விதத்திலும்.
நீண்ட காத்திருப்பிற்கு பிறகு கன்வேயர் பெல்ட்டில் பெட்டிகள் வந்தன; பெட்டிகள் மட்டும் வந்தன. வீல் சேர் வரவேயில்லை. எமிரேட்ஸ் அதற்கு எந்த பதற்றமும் கொள்ளாது, ஒரு காகிதத்தைக் கொடுத்து நிரப்பச் சொன்னது. படம் மட்டும் வரையவிலையே தவிர, பாகங்களைக் குறித்தேன். கார்கோவிற்கே சென்று பார்க்கிறேன் என்று போய், சில மணித்துளிகள் சென்ற பின் வெறுங்கையுடன் வந்தான் எமிரேட்ஸ் எனக்களித்த தாற்காலிக உதவியாளன். துபாயில் ஏற்ற மறந்திருப்பார்கள்... இன்றிரவோ நாளையோ வந்துவிடும் என்றனர்.
(ஒருமுறை, வரச்சொல்லியிருந்த சிஷ்யன் வரவில்லை; பதிலாகத் தொல்லைபேசினான். "சார்... நாலு மணிக்கு வரச்சொல்லீருந்தேள்.. நான் கெளம்பீட்டேன், இன்னும் அரை மணி கழிச்சு வந்துடறேன் சார்.."
"ஏண்டா.. இப்பவே மணி நாலு; நீ இன்னும் வரல... இதுல அர மணி கழிச்சா, மூணு முப்பதுக்கெல்லாம் எப்படி வருவே?" :) அதன் பிறகு சில மணித்துளிகள் கழிந்த பின் என்று நானும் சொல்வதில்லை).
"Connecting flight miss ஆனாலோ இரு பயணங்களுக்கு இடையே அதிக நேரமிருந்தாலோ பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொண்டு தங்குமிடம் உணவு தருகிறீர்களே... என் வீல் சேர் வரும் வரை இதை வைத்துக்கொள்ளட்டுமா", என்று அமர்ந்திருந்த சக்கர நாற்காலியைக் காட்டிக் கேட்டேன். அப்படி எந்த ஏற்பாடும் எங்களால் செய்ய இயலாது என்று விநோதமாகப் பார்த்தபடி பதில் சொன்னார்கள்! அங்கிருந்து வெளியே வந்து pajero போன்ற ஒரு காரில் ஏறினோம். காண்கிற இடங்களிலெல்லாம் நைஜீரியர்கள் பளீரென்ற வண்ணங்களில் ஆடையுடுத்தி நடந்து கொண்டிருந்தார்கள். கருப்பு, கருப்பர்கள் என்று காலகாலமாய்ச் சொல்லிச்சொல்லி, நூற்றாண்டுகளாய் கிளர்ந்திருந்த தாழ்வுணர்ச்சி அவர்களுக்கே உள்ளுணர்வில் கலந்திருந்தது, ஹிந்து மதம் பிற்போக்கானது என்று சொல்லிச்சொல்லி ஹிந்துக்களுக்கே தங்களைப் பற்றி கேவலமாய்த் தோற்றம் காட்டியதைப் போல...
வழியில் பார்த்த கார்களெல்லாம் ஏதோ ஒரு இடத்தில் சிதைந்திருந்தன... மஞ்சள் வர்ணத்தில் கும்பலாய் ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ போல வேன்கள் விரைந்தன. மூன்றாம் உலக நாடு எனினும், லேகோஸ் நிறைய flyover-களுடன் மக்கள் 'இடம்' பெயர்ந்து 'வலம்' வர உதவியபடியிருந்தது. INFAS -ன் chairman சிவராமன் மாமா வீட்டில் தங்கினோம். நிறைய காவலுடன் கூடிய பத்தடுக்கு மாடி. ஆனால், முதல் மாடியிலேயே இருந்தார்.
நிம்மதி, நம்ம ஊர்ல மடிப்பாக்கம், இந்த ஊர்ல மாடி பக்கம் என்று நினைத்தேன். அங்கே சமையல் செய்யவும் வீடு வேலைக்கும் இரண்டு பெண்மணிகள் இருந்தனர். முதல் நாள் பார்த்தவளின் பெயர் ஆலிஸ். சென்றதும் பெரிய கோப்பை நிறைய தேநீர் உப'சரித்தாள்'. ஆலிசுக்கு உதவியாக இருந்த சின்னவளின் பெயர் கேட்டதும், அந்த பெயரை மெலிதாய் முனகினாள். மீண்டும் கேட்டதும், ஆலிஸ் சற்று உரக்கச் சொன்ன பெயர் "கம்ஃ போர்ட்". அவள் அதைச் சொன்ன த்வனி, சினிமாவின் சண்டைக்காட்சிகளில் வரும் கும்-ஹய்.. (Gum -hai) என்ற குத்தொலி போன்றிருந்தது.
நாகராஜ்! கட்டுரை சூடு பிடிக்கிறது! அதுவும் நான் அறுபதுகளில் அடிக்கடி லாகோஸ் போய் வந்தவன் என்ற முறையில் தனி இன்ட்ரெஸ்ட். 45 ஆண்டுகளுக்குமுன் அங்கே Escalator, Flyover எல்லாம் மூச்! இடி அமீன் படத்தில் வரும் Entebbe Airpot போலிருக்கும். மக்கள் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். உன் எழுத்துநடை பிரமாதம்! வாழ்த்துகள். தொடரட்டும்!
ReplyDeleteபாரதி மணி
thank you mama... with all your good wishes...
ReplyDeleteபெட்டிகள் மட்டும் வந்தன. வீல் சேர் வரவேயில்லை.//
ReplyDeleteஎன்னவோ போங்க, எது முக்கியமோ அது வரலை! :(
//ஹிந்து மதம் பிற்போக்கானது என்று சொல்லிச்சொல்லி ஹிந்துக்களுக்கே தங்களைப் பற்றி கேவலமாய்த் தோற்றம் காட்டியதைப் போல... //
ReplyDeleteஇன்னமும் அப்படித் தானே இருக்கு! மாறலையே! :(((((
சின்ன வேண்டுகோள், எழுத்து ஃபாண்ட் கொஞ்சம் பெரிசாய் இருக்கலாமோ??? வேர்ட் டாகுமெண்டில் இருந்து போட்டால் நோட்பேடில் காப்பி, பேஸ்ட் பண்ணிட்டுப் போடலாம், இல்லாட்டி பதிவு வெளியிடுமுன், ஃபாண்டை நார்மல் கொண்டு வந்துட்டுப் போடலாம். படிக்கக் கொஞ்சம் சிரமமா இருக்கு! :)))))) (கண்ணாடி போட்டும்! :D)
ReplyDeletedone... :)
ReplyDeleteஅப்பாடா, இது சரியா இருக்கு, ரொம்ப நன்றி. :))))))
ReplyDeleteஈ நா - சுவைபட எழுதியிருக்கிறீர்கள். பாரதி மணி சார் சொன்னதை ஆமோதிக்கிறேன்.
ReplyDeleteபடங்களும், உங்க பகிர்வு பாணியும் பிரமாதமாக உள்ளது. வாழ்த்துக்கள்.