சூப்பர் ஸ்டார் பஞ்ச் டயலாக் சொன்னா மட்டும் தான் அதுக்கு ஒரு M.A.Philosophy ரேஞ்சுக்கு விளக்கம் சொல்லணுமா? நாங்களும் விடமாட்டோம்ல.. விஷயத்துக்கு வருவோம்.
காதல் தெரியும். ஒரு தலைக் காதல் கேள்விப்பட்டிருப்போம். தறுதலைக் காதலும் தெரியும். வேற என்னென்ன தலைக் காதல் எல்லாம் இருக்குன்னு அதை அப்படியே கொஞ்சம் டெவெலப் பண்ணலாமா?
- காதல்: எத்தனை தலை என்பது இருக்கட்டும், ஒரு கால் தான் இருக்கு. அத கவனிச்சீங்களா? அதுனால தான் ஒருத்தர ஒருத்தர் சொமந்துகிட்டு திரியறாங்க போல. #காதல்
- ஒரு தலை: ஒரு உறைல ரெண்டு கத்தி not allowed. ஒரு தல தான் இருக்கலாம், ஓகே? #DecisionMaking
- இரு தலை: ஜஸ்ட்டு மிஸ், ஒரு கமா. தல என்ன சொன்னாலும் அந்தம்மா இருன்னு ப்ரேக் போடுவாங்களே அதான் #இரு,தலைக் காதல்.
- முத்தலை: இங்க தான் பிரித்தாளும் சூழ்ச்சி தேவைப்படுது. மூணு பேரு லவ்வு, முக்கோணக்காதல்னு டெண்ட்டு கொட்டாய்ல பாத்த படத்தையோ பாலச்சந்தரையோ நெனச்சு கொழப்பிக்காதீங்க. இது lover loving the kiss of love. இப்போ புரியுதா? #முத்த+லைக்+காதல்.
- நாலுதலை: நான்கு தலைன்னு சில பேர் சொல்லலாம். அப்படிச்சொன்னா, அவங்கள நீ இன்னும் வளரவேயில்ல வயசுக்கே வல்லன்னு காமெடி பண்ணி அனுப்பிச்சிருங்க. குதலைன்னா மழலைன்னு ஒரு அர்த்தம். அதோட, அறிவிலான்னு ஒரு பொருள் இருக்கு. ஆகவே, நான் கடவுள் மாதிரி யாராவது நான் குதலைன்னா இப்போ காதல் தானே, நீ சொல்றது கல்யாணத்துக்கு அப்புறந்தான்னு அந்த அகோரிகளிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிடுங்கள். (உபரி அறிவேற்றல்: ’கேப்’ இருந்தால் தானே ’எஸ்’ ஆக முடியும். அதனால தான் ரெண்டையும் பிரிக்க முடியாம எஸ்கேப்-புனு சேர்ந்தே வருது.) ஆக்சுவலா, ரெண்டு பேர் லவ் பண்ணினாலும் வீட்ல சொல்லாம பீச், பார்க்குன்னு சுத்த முடியாது. ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பாங்க. எட்டு எனக்கு தெரியும்; ஆயிரம் உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க) அதனால, தோழியோட இவளும், தோழனோட அவனும் தனித்தனியா வந்துட்டு, கடற்கரைல தோழனையும் தோழியையும் கைவிட்டுட்டு கைகோத்துப்பாங்க. அவங்க பிக் அப் ஆயிக்கறது அவங்க பாடு. இது தான் #நாலுதலை.
- அஞ்சுதலை: யாராவது பாத்துட்டா என்ன பண்றதுன்னு பைக்ல பின்னாடி ஒரு பொண்ணு உ.கால் to உ.தலை கவர் பண்ணி ட்ராவல் பண்ணுதே, அவள பின்னாடி ஒக்கார வெச்சு முன்னாடி ஒரு முகமூடிக் கொள்ளக்காரன் ஓட்றானே அந்த பயம் கலந்த பரவசக் காதல் தான் இந்த #அஞ்சு(ம்)தலை.
- ஆறுசிரம்: அறு சிரம் இல்லை, கவலை வேண்டாம். ரெண்டு காதல் தோல்வி பார்ட்டிகள் லவ் பண்ணினா அது தான் ஆறுதலைக்காதல். அந்த ஆறுதல் உங்க இருவருக்குமே பிடிச்சிருக்கு. #ஆறுதல், லைக் ஆதல்.
- ஏழ்தலை: ஏழு தலைக்கு என்னடா சொல்லப் போற மாட்டிக்கினியான்னு நீங்க குரூரமா சிரிக்கறது எனக்குத் தெரியுது. ஹாமில்டன் வாராவதி அம்பட்டன் வாராவதி ஆனா மாதிரி, ஒப்பிலி உப்பிலியானாற் போல, எழுதலை தான் உங்களுக்குப் புரியறதுக்காக ஏழ்தலைன்னு இறங்கி அருள் பொழிகிறது. எதை எழுதல? நீ எனக்கு உயிர், நான் உனக்கே உனக்கு… மன குடும்ப்பா மஞ்சி குடும்ப்பா;நூவே நாக்கு ப்ரேமா, ப்யார் கர்த்தி இப்படிப் பல மொழிகள்லயும் யாரோ யாருக்கோ பாட்டெழுதி எவரோ ட்யூன் போட்டு யார் பணத்துலயோ யார் யாரோ ஆடினாங்களே, அந்த பாட்ட இவிங்க ரெண்டு பேரும் பாடினாங்களே, அத எழுதி வெச்சு கையெழுத்து எல்லாம் போடல. பய புள்ளங்க, ரெண்டும் இப்போ வெவ்வேற எடத்துல கண்ணாலம் கட்டிக்கினு பரம சந்தோஷமா இருக்கு. #ஏழுதலைக் காதல்.
- எட்டுதலை: Activity to aim at achievement of Goal – ங்கற Principle of Commerce (kAmA+errs) இருக்கே, அது தான் இந்த எட்டுதல். அது பரவசமா கூட இருக்கலாம்; குறிக்கோளாவும் இருக்கலாம். கை நீளமா இருக்கறவங்களுக்கு பக்கத்து சீட்டுக்கு அடுத்த சீட் கூட எட்டலாம் அதான் #எட்டுதலை விரும்பும் மனது.
- நவதலை: ஒன்பது = நவ. But, நவ = புதிய. மலர் தேடி தேன் பருகி, மலர் விட்டு மலர் தாவும் வண்டே, நீ ’கண்ட’ மலர்களிலும் அருந்துவதை எப்போது நிறுத்திவிட்டு சிங்கிள் புய்ப்பத்தில் சிங்க் ஆகி சிறப்புறுவாய் என்ற ஒலகமெகா Sinதனை சடன் ப்ரேக் போட்டு சம்மட்டியால் அடிப்பது தான் #நைன்லவ். (நயன்+ப்ரபு அல்ல).
- 10Heads: ஒடனே ராவணனன் நெனப்பு வந்தா உங்கள ஒரு பய காப்பாத்த முடியாது. அம்மா ஆட்சி நடக்குது, ஞாபகம் இருக்கட்டும். 10 = பத்து. பத்து = பற்று, பந்தம், பாசம். அதனால, உங்க காதல் மேல பற்றுதலை வையுங்க. வரவு சரியாகும். சௌக்கியமா இருங்க. காதல் = காதலன்/காதலி = #பத்துதலை வை.
(படங்கள் உதவி: இணையம்)
[http://www.katturai.com/?p=2477 ல் சென்ற 14.2.12 அன்று வெளியிடப்பட்டது]
:P:P:P:P
ReplyDelete