வெறுப்பை உமிழ்தலிலும்
வெகுண்டே கத்தலிலும்
உறவுகளைக் கேவலப்படுத்தி
உறுப்பைச் சொல்லித் திட்டிவிட்டு
இருட்டின் தவிப்பிலும்
ஈருடல் தகிப்பிலும்
குறிகளே குறியாய்
குற்றமின்றிச் சுவைத்தல் போல
உன்னதப்படுத்தலின் உச்சமொன்றில்
விளிம்பில்
பசுவென்றும் தாயென்றும் பகட்டாய்
விளித்தபடி
நாளொன்றை நல்கிவிட்டு நரியொன்றின்
தந்திரமாய்
பசுக்களாய் எருமைகளாய் ஆடுகளாய்ப்
பிரித்தாண்டு
இல்லத்தின் உள்ளே இறையென்று
கும்பிட்டும்
இழுத்தே அறுத்துப்பின் இரையென்று
கும்பி நிறைத்தும்
என்ன செய்யப் போகின்றாய்,
எனக்கென்று நாளெதற்கு?
எனக்கென்று நாளெதற்கு?
மிகவும் அருமையான வரிகள்
ReplyDeleteஅது சரி! :((( உண்மைதான். ஆனாலும்.......இது ஒரு மரபாகி விட்டது. இன்றைய நாட்களில் அன்று ஒருநாளாவது மாட்டை நினைக்கிறார்களேனு சந்தோஷப் பட்டுக்கணும்.
ReplyDeleteOMG. It's ஹோலி கௌ.
ReplyDeleteமற்றவர் பேசத் துணியாததைப் பேசிவிட்டாய். :)
ஏதேது, என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் கெட்டுப் போய்டுவாங்க போலருக்கே?
ReplyDeleteகாணும் பொங்கல்: கறி விலை உயர்வு- கிலோ ரூ.450
ReplyDelete