'Can you pl translate the poem, written by Minmus, the poetic pig about the Boar Neppoleon?' asked my aNNaa, P.V.ராமஸ்வாமி.
Friend of fatherless! Fountain of happiness! Lord of the swill-bucket! Oh, how my soul is on Fire when I gaze at thy Calm and commanding eye, Like the sun in the sky, Comrade Napoleon! Thou are the giver of All that thy creatures love, Full belly twice a day, clean straw to roll upon; Every beast great or small Sleeps at peace in his stall, Thou watchest over all, Comrade Napoleon! Had I a sucking-pig, Ere he had grown as big Even as a pint bottle or as a rolling-pin, He should have learned to be Faithful and true to thee, Yes, his first squeak should be 'Comrade Napoleon!' |
அந்த வரிகளின் ஊடே பின்னியிருந்த மெலிதான கிண்டல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே,
தோப்பனை அறியாற்குத் தோழனே
தோன்றுமென் ஆனந்த ஊற்றே
அழுக்குகளை அலசும்
அகன்றதொரு வாளியின்
அரசனே! அண்ணனே - உன்
கண் கண்ட பொழுதெல்லாம்
ஆதவனாய் சூரியனாய்
ஆட்கொண்டும்
அமைதி 'நிலவியும்' - என்
ஆன்மாவை அணைக்கிறதே
அக்கினியின் நாக்குகள் - அந்த
வான் 'வெளிச் சத்தியமே'
தோழனே! நெப்போலியனே!!
அன்பு கொள்ளும் பண்டமெல்லாம்
அளவிடாது ஈந்து ஈந்து
அருஞ்சுவை தீண்டியதும்
அறி நாவின் நுனியிலிருந்து
ஆங்கு சற்றே வீங்கிக்கொண்ட
அடி வயிற்று ஓரம் வரை
தின்னவும் கொடுத்தவனே
தினம் உருள திண்டு போல்
வைதலற்ற இனியதான
வார்த்தைகளைப் போலிருக்கும்
வைக்கோலும் தந்தவனே
வையகமே அமைதி கொள்ள
வகைவகையாய்க் கொடுத்தவனே
நண்பனே நீ தான்
நல்கிடுவாய் அனைத்துமே
தோழனே! நெப்போலியனே!!
ஆமோதிக்கவியலாத
அருவருப்பான பன்றியே எனினும்
முன்னரே பிறந்துவிட்டு
முகம் முற்றிய பிறப்பெனினும் அரைக்காலே நிரம்பிய
அறிவு மயக்கும் குப்பியோ
அரைத்ததையே அமுக்கி நீவும்
சப்பாத்திக் குழவியோ...
கல்வியும் கலை சூழ்ந்த
உயிர்திணையோ - அஃதன்றி
கல்லோ கனிமரமோ உணர்விலா
அஃறிணையோ...
எப்படித்தான் உதித்தென்ன
எதுவாகப் பிறந்தாலும் - அதன்
வாய் உதிர்க்கும் முதல் முத்து,
தோன்றிடும் முதல் ஓசை...
தோப்பனை அறியாற்குத்
தோழனே - தோன்றுமென்
ஆனந்த ஊற்றே! ஆரமுதே!!
தோழனே - நெப்
'போலியனே...'
:)) :D
Bravo!
ReplyDeletekAl naDaip paNNaiyin(Animal Farm)kavidaich chittiramum adan tamizh vaDivum azhagu!
Superb.
ReplyDeletethank you aNNaa and arsai :)
ReplyDeletethank you
ReplyDelete