'அம்மா.. கேஸ்' என்று வாசலில் குரல் கேட்டது. சிலிண்டரைப் பொருத்தியதும் 'எவ்ளோப்பா கேஸ்', என்றேன்.
'365 ரூபா சார்'. அம்மா, ரூ.500 கொடுக்க, 135 மீதி கொடுத்தான்.
'எவ்ளோ வெலம்மா கேஸ்'?
'பில்லப் பாரேண்டா..'
ரூ.352.35 காசுகள்!
டெலிவரி பாய் இதற்குள் விடுவிடுவென வாசலுக்குச் சென்றுவிட்டான். அம்மா பின் தொடர்ந்து போய், 'க்ரவுண்ட் ஃப்ளோர் தானப்பா.. அஞ்சு ரூபா தான் எப்பவும் தருவேன். மீதியக்குடு' எனறாள். எதிர் வீட்டு இரண்டாம் மாடியிலிருந்து, 'மாமீ.. நாங்க எப்பவும் பத்து ரூபா குடுக்கறோம்' என்று குரல் வந்தது.
'நீங்க மாடில இருக்கேள்;நாங்க கீழேயே தான இருக்கோம்?'
அதற்குள், 'அய்ய.. இந்த எக்ஸ்ட்ரா பணத்துக்கு தான் இந்த வேல பாக்கறதே' என்று சொல்லியபடியே வண்டியைச் செலுத்தியபடி ஆள் எஸ்கேப்.
இதை status message-ஆக facebook-ல் போட்டதும் ராஜு அண்ணா (cousin) 'இது ரொம்ப தப்பு தம்பி, அந்த ஆளை விடாதே' என்றார். நண்பர் தினகர் இராஜாராம், 'அந்த 352.35 என்பதே, டெலிவரிக்கான ரூ.15 சேவைக் கட்டனன்மும் சேர்ந்தேதான். நான் எப்போதும் அதற்கு மேல் தருவதில்லை. உபரித் தொகை தராவிடில் டெலிவரி செய்ய மாட்டேன் என்று அவர்கள் சொல்ல முடியாது, மேலும் முகவரின் கிடங்கிலிருந்து நாமே எடுத்துக்கொண்டால் அந்த பதினைந்து ரூபாயையும் கூடத் தரவேண்டிய அவசியமில்லை என்றார்.
இது விஷயமாகப் புகார் செய்யலாம் என்று சில நிமிடங்கள் யோசித்தேன். ஆனால் முதலில் பில்லைப் பார்த்துவிட்டு, பிறகு ஸக்தி அனுசாரம் காசு கொடுப்பது தான் உசிதம் என்று முடிவு செய்துவிட்டேன்.
- உடனே, புகார் செய்யலாம் என்று ஏஜென்சி நம்பரை எத்தனை முறை அழைத்தாலும் அது betrothal betrothal என்றதால், சிந்திக்கக் கிடைத்த அவகாசம்.
- முன்பு ஒரு முறை round figure syndrome அல்லது சில்லறைத் தட்டுப்பாடு போன்ற காரணத்தினால் ஒரு டெலிவரி பாய் அதிகமாகக் கேட்ட தொகையை அம்மா தராததால், அவன் சிலிண்டரை வாசலுக்கு எடுத்துச் செல்லுவதற்குள் இரண்டு இடங்களில், ரகசியப் புன்னகையுடன் தடேர் தடேர் எனப் போட்டு, சேதப்படுத்திய தரை ஞாபகம் வந்தது.
- முகவர் உரிமம் எடுப்பவர் டாஸ்மாக் பானம் அருந்திவிட்டு ஹாயாக டிவி பார்க்கிறார். அவருக்கு, ஒரு சிலிண்டருக்கு பதினைந்து ரூபாய் வந்துவிடுவதால் டெலிவரி ஆட்களுக்கு, இந்த சில்லறை தான் சம்பளமாம், பல இடங்களில். எனவே, முகவரிடம் புகார் அளிப்பது ஊழலை எதிர்த்து சோனியா, கருணா எல்லாம் அறிக்கை விடுவது போல ஆகிவிடும்.
- அதற்கும் மேலிடத்தைக் கண்டுபிடித்து, புகார் செய்து நடவடிக்கை எடுக்கக் கோரலாம் என்றால், இரண்டு விஷயங்கள் கவனிக்க வேண்டும். (முன்பொரு முறை, கோவை சென்று இரயில்வே நிலையத்தில் lift வேலை செய்யாமல் சிரமப்பட்டு, பல புகார்களும் அனுப்பியிருந்தேன்.(http://
erodenagaraj.blogspot.com/ search/label/disability இந்த உறலியில் ஆறாவது பதிவு) இந்த விடுமுறையில் கோவை சென்று 20 நாட்கள் தங்கினேன். புதியதாகப் பல குப்பைகள் சேர்ந்துள்ளதைத் தவிர lift அப்படியே தான் இருக்கிறது. அது தானியங்கி. அதை நீங்களோ நானோ இயக்க முடியாது). - வந்தவரே வருவதில்லை பெரும்பாலும். பணி இட மாற்றம் என்பது வேறு இடத்தில் ஊழல் செய்து கொள்ள அனுமதியே தவிர, தண்டனை அல்ல. மேலும், வேலையாட்களுக்கு இடையே உள்ள நல்லுணர்வு-தொடர்பு காரணமாக அடுத்த முறை சிலிண்டர் நம் வீட்டிற்கு வருவதற்கு முன்பு, இரண்டு நாட்கள் ஏதோவொரு டீக்கடையிலோ இட்லி-வடை சாப்பிடும் இடத்திலோ டயட் செய்துவிட்டே வரும்.
- ஏற்கனவே, இலவச கேஸ் அடுப்பு திட்டத்தில் அளிக்கப்பட்ட சிலிண்டர்கள் தீர்ந்ததும், அணுகவே முடியாத அதன் விலையால், அதன் தலையில் தான் ஒரு பலகையைப் போட்டு அதில் இலவச டிவியை வைத்திருக்கிறார்கள். இவர்கள் மீண்டும் பதியாததால், வீடுகளிலேயே தேங்கிவிட்ட சிலிண்டர்களால் ஏற்கனவே கிளப்பிவிடப்பட்டுள்ள பற்றாக்குறை.
- பல வருடங்களுக்கு முன், செய்தித்தாள் போடும் முகவர் ஒவ்வொரு மாதமும் தினத்திற்கு தினம் வேறுபடும் அதன் விலையை யார் சரிபார்க்கப் போகிறார்கள் என்று, ஞாபகமாக round figure-ஆக இல்லாமல் பதினேழு நாற்பத்தைந்து, பதினெட்டு முப்பத்தைந்து என்று கூட்டிப் போடுவதை அப்பா letters to the editor-க்கு எழுதிப்போட்டு, அதை ஹிந்து நாளிதழ் உறுதி செய்து கொண்டு, முகவரையே மாற்றியது. இங்கே அப்படி ஏதும் நடந்தால், நம் முகவரியையே மாற்றிவிடுவார்கள்.
- கிஷ்மு ஒரு படத்தில், 'தொப்புளுக்கு மேல கஞ்சி' என்று வசதியானவர்களைச் சொல்லுவார். இப்போது தொப்புளுக்கு மேல் குடி. முன்பெல்லாம் தொழிலதிபர், முதலாளி, மாத வரும்படி, வாரச் சம்பளம், தினக்கூலி என்றிருந்த standard of living -ஐக் குறிப்பிடும் சொற்கள் தற்போது தினம் குடிப்பவர், வாரமிருமுறை, மாதம் ஒரு முறை, மனைவியில்லாத போதெல்லாம், புது ஜட்டி தொலைந்த ட்ரீட் என்று மாறிவிட்டிருக்கிறது. ஆகையால் பலருக்கும் மேலே எதாவது கிடைத்தால் பரவாயில்லை எனத் தோன்றுகிறது. பள்ளி நாட்களிலிருந்தே பதின்பருவத்தினரை இப்படியே பழக்குகின்றன அரசும் சினிமா போன்ற ஊடகங்களும்.
- உண்ணாவிரதம் இருக்கலாம் என்றால், ஒன்று, கௌரவமாக இருக்கும் என்னையும் ராம்தேவ் list-ல் சேர்த்து விடுவார்கள் அல்லது கங்கைக்கரை போல, ஆனால், கூவக்கரையில் யாரும் கண்டு கொள்ளாமல் பத்தே நாட்களில் பரலோகம் வாய்த்துவிடும்.
அவன் எடுத்துக்கொண்டு போன அந்த பதிமூன்று ரூபாயைப் பெட்ரோல் விலையேற்றம் போல ஏற்றுக்கொண்டு, வேறு நடவடிக்கைகள் எடுக்காமல், பகிர்தலிலேயே திருப்தியடைந்து விடும் மனோநிலை வந்ததில் வருத்தமே எனினும் பெரும்பாலான நண்பர்கள் 'திருந்தீட்டயா! இனிமே லைஃப் ஸ்மூத்தா இருக்கும் பாரு' என்கிறார்கள்.
ஈரோடு நாகராஜ்.
நீங்கள் புகார் அளித்தால் அடுத்து கொண்டு வரும்போது 'கதவு பூட்டியிருந்தது' என்று குறிப்பு போட்டு வேறு யாருக்காவது போட்டு விட்டு சென்று விடுவார்கள்.
ReplyDeleteநன்றி.
உங்களுக்கு நடந்த விஷயம் நாடு முழுக்கவும் நடக்கிறது. அப்பாவுக்கும் இந்த காஸ் காரரிடம் எப்போதும் சண்டைதான். அவர்கள் நிறுவனத்தில் புகார் செய்தாலும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
ReplyDeleteஉங்களுக்கு காஸ் வந்தாலும் கொடுக்காமல் இரண்டு மூன்று நாள் தள்ளிப்போட்டுக் கொண்டே போவார்.
இந்த ஜென்மங்கள் எல்லாம் அவர்களாகத் திருந்தினால் தான் உண்டு.
ஆம், வருகைக்கு நன்றி திரு. ரத்தினவேல் அய்யா.
ReplyDeleteஉண்மை நடராஜன். அது தான் வலைப்பகிர்வு மட்டும். :) இங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
அது betrothal betrothal என்றதால், சிந்திக்கக் கிடைத்த அவகாசம்.//
ReplyDeleteindane gas என்றால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் புகார் கொடுக்கலாம். மற்ற கம்பெனி காஸ் எனில் அந்த அந்தக் கம்பெனியில் புகார் கொடுக்க வேண்டும். இந்தியன் ஆயில் கம்பெனியில் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். நாங்கள் மாற்றலில் குஜராத்தில் இருந்து வந்த போது இப்படித் தான் மாற்றல் ஆன பதிவுக்கு ஒரு சிலிண்டருக்கு ஐம்பது ரூபாய் கேட்டார் டெலிவரி செய்தவர். நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்லவும் சிலிண்டரைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார். பின்னர் டியுசிஎஸ்ஸில் புகார் கொடுத்ததும் சிலிண்டர் கிடைத்தது. ஆனாலும் அறிவுரைகளுடன். பணம் இரண்டு சிலிண்டருக்கும் சேர்த்து நூறுக்குப் பதில் எழுபத்தைந்தாவது வேண்டும் எனக் கேட்டு வாங்கிக் கொண்டார். அவர், பெயர், விலாசம், செர்விஸ் எல்லாம் கேட்டு வைத்துக்கொண்டு பணத்தையும் கொடுத்துவிட்டுப் புகாரையும் அளித்தோம். மறு மாதம் சிலிண்டர் பதிந்தும் வரவே இல்லை.
மறுபடியும் இந்தியன் ஆயிலுக்குப் போய்ப் புகார் கொடுத்ததில் சிலிண்டர் இரவு ஒன்பது மணிக்கு வந்தது. அதன் பின்னர் அவரை அங்கே இருந்து மாற்றிவிட்டார்கள்.
தபால் துறையிலும் இம்மாதிரி அநுபவம் உண்டு.