Sunday, April 4, 2010

செய்திகளும் (expiry date முடியாத) 'syrup'pu-பார்வைகளும்...

காலாவதியான மருந்துகளைப் பற்றி துப்பு குடுக்கலாம் - காவல்துறை அறிவிப்பு.

மருந்துகள் என்றதும், ஆர்குட்டில் போட்டிருந்த பழைய காமெடி நினைவிற்கு வந்தது.


1. என் வீட்டின் அருகிலிருந்த மெடிக்கல் ஷாப்பில், "இதுல எக்ஸ்பைரி டேட் DEC 2011-ன்னு போட்டிருக்கே, அப்படீன்னா?" என்றேன்.

"நீங்க அதுவரைக்கும் இந்த டானிக்க குடிக்கலாம்"


"எப்படிங்க, அம்பது மில்லி டானிக்க ரெண்டு வருஷம் குடிக்கறது, எனக்கு வேணாம்" என்று கலாய்த்துவிட்டுக்  கிளம்பினேன்.


2. மற்ற கடவுள் பெயர்களை வெறுமே சொல்லும்போது, முருகனை மட்டும் ஏன் பழனி  

   ஆண்டவர், தணிகை ஆண்டவர் என்று சொல்கிறோம்? 
 
  ஏனெனில் அவர் குன்றுதோராடும் குமரன்.... மலை, அதன் மீது கோபுரம் என்று 
   இருப்பவர்... ஆகையால்.... 
   தணிகை "on tower"
   செந்தில் "on tower" 
   பழனி  "on tower"...... :D  

உங்கள் வீட்டில் பழைய மருந்துகள் இருந்தால் கொடுக்கலாம், எதிர் (அ) பக்கத்து வீட்டில் இருந்ததாக! காலாவதியான மருந்து என்பதால்,   காலாவதியான ஒரு அரசியல்வாதியின் ஆசி பெற்ற காலாவதியான நீதிபதி விசாரிப்பார். புஷ்பவதியான மருந்துகள் உண்டா என்கிறார் குறும்பு
குணசேகர். இதற்கிடையில், என் வீட்டருகே உள்ள மருந்தகம் இந்த ரெய்டு தகவல் வந்த நாளிலிருந்து ஐந்து நாட்கள் விடுமுறை! நல்ல வேலையாக அவனிடம் வாங்கியதில்லை. 


*************************************************

மார்கபந்து-மொத சந்து = கருப்பசாமி - கணக்க காமி

மற்றவர்களுக்காக பரீட்சை எழுதி, ஏகப்பட்ட பேரை பாஸ் செய்யவா வைத்திருக்கிறார், ஆப்பக்கூடல் கருப்பசாமி. இ-'தில்' நிறைய அரசு அலுவலர்களும் அடக்கம். அவர்களின் பதவி உயர்விற்கான தேர்வுகளையும் இவர் எழுதியிருக்கிறார். என்னிடம் கூட, சில கல்வியாளர்களின் நண்பர்கள் டிகிரி வேணுமா என்று கேட்டிருக்கிறார்கள்... நான் இப்பவே M.A.Rhythmology படிக்கிறவாளுக்கெல்லாம் கிளாஸ் எடுத்திருக்கேன்... எனக்கு அது போதும் என்று மறுத்துவிடுவேன். அண்ணாமலைப் பல்கலையில் B.A. மிருதங்கப் பாடமிருக்கிறது. ஆனால் அங்கே போய் இருக்க வேண்டும். ஏற்கனவே உங்களுக்கு தெரிந்தவற்றை சோதனை செய்து, கணக்கில் கொண்டு நேரடியாக இறுதியாண்டிலோ, இரண்டாமாண்டிலோ சேர்த்துக் கொள்ளவும் மாட்டார்கள்!
 

*************************************************

 அழகிகள் ஆட்டம் - ஆவிகள் நோட்டம்

கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லை என்பார்கள். ஆனால், winter-ல் தான்,  தலையிலே கங்கை, பனிமலையில் பிறந்த மனைவி, குளிர் இரத்தப் பிராணி உடலெங்கும் ஊறும் சிவனுக்கு, விடியற்காலையில் மார்கழிக் குளிரில் சந்தனக் காப்பு வேறு! [எனவே, winter to the core கண்ட "தில்லை"] இத்தனை சீதளத்திற்கு இன்னொருத்தரானால் குளிர் நடுக்கி, சளி பிடித்து என்னென்னவோ ஆகியிருக்கும். ஆனால் பக்தர்கள் இதயத்தில் குடி கொண்டிருக்கும் ஈசனே, அவ்விதயங்களின் தாபச் சூட்டைத் தாங்க, உனக்கு இவ்வளவு குளிரும் பத்தாது... என்பது போன்ற பொருளில் "மௌலௌ கங்கா சஷாங்க..." என்ற ஸ்லோகம் வரும்.


மணிகர்ணிகா சுடுகாட்டில், இடு-கட்டில் நங்கையர் autom அளவு ஆடைகளுடன் ஆட்டம். பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றனவாம்!


"Autom" துள்ளலாக இருந்தால் "Spring."
சுற்றி எரியும் பின நெருப்பே "Summer."
வேடிக்கை பார்க்கும் சாதுக்கள் "Fall."

ஹ்ம்ம்... விண்டரவர் கண்டதில்லை போலும்!

நல்லவேளை, இதை சன் நியூசில் காட்டியிருந்தால், "இன்னாமே... குளிர்ல(winter) உனக்கு?" என்று உஷார் செய்ய முயன்றிருப்பார் Kwater Koyindhu. செல்வராகவன்களும் மேகமொன்பதுகளும் சிவப்புச்சூரியன்களும் தங்கள் படம் படு வெற்றி பெறவேண்டி, ஆஸ்தான ஆட்ட நடிகைகளை அங்கே அனுப்பலாம்.  நமது கதாநாயகர்கள் full suit-ல் கழுத்தில் woolen muffler சுற்றிக்கொண்டு நடை பயில, நடிகைகள் மட்டும் குறைந்தபட்ச ஆடைகளுடன் டிப் பாடும் அவலத்திற்கு மாற்றாக இருக்கும்.



*************************************************

  கோடை தணிக்க கொடை நாட்டு more...

தாபத்ரய வெயிலற, மக்களுக்கு நீர் மோர் வழங்குமாறு செல்வி செயலலிதா தொண்டர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் சந்தி தான் வித்யாசம் (மலையாளிகள் மன்னிக்கவும்)


வாக்காளர்களுக்கு....

  பணம் கொடு தாயே -  பணம் கொடுத்தாயே!
தொண்டர்களுக்கு...
  பேட்டி கொடு தாயே - பேட்டி கொடுத்தாயே!

அடிப்பொடிகளுக்கு...
    பதவி கொடு தாயே - பதவி கொடுத்தாயே!

இப்படியே பட்டியல் பெருகும். இப்போதைக்கு இது போதும், இன்னொரு முறை சந்திப்போம்.

1 comment: