Friday, March 12, 2010

தெருவ மறிச்சு கோவில் கட்டி...

என் தோழி: ஏன் அண்ணா இப்படி எல்லாம் ஆகறது.. :( 


"மக்களின் பேராசை... ஞானத்திற்கான தேடலின் முடிவு தான் குரு என்பதை ஒதுக்கி, தேவைகள் தீர்தலின் ஆரம்பமே அவர் என்ற அரிப்பினால், அது போன்ற தோற்றம் உள்ளவர்களிடம் தங்களை இழக்கிறார்கள்..உன் பதிலைச் சொல்.. எத்தனை முறைகள் ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய் உன் குருவிடம்?


சிஷ்யனின் அம்மா: ஏன் நாகராஜ் சார், இப்படி அர்ச்சகர் சாமியார் எல்லாம் தப்பு பண்றாளே...

ஊருக்கு ஒரு கோவில், ஒரு மடம், ஒரு குருன்னு ஏன் வெச்சிருக்கா... ஏன்னா, 1000 பேர் இருந்தா, அதுல 200 பேர் நல்லவாளா இருப்பா... அந்த இருநூற்றுல ஒருத்தர் ரெண்டு பேர் தான் Qualityயோட  இருப்பா... ஐம்பதாயிரம் மான்களுக்கு அம்பது புலி தான் இருக்கு காட்டுல... அந்த மாதிரி, இதுல ஒரு ecological balance இருக்கு... இந்தியா எவ்ளோ பெரிய தேசம்.. , காஞ்சிபுரத்துல தான் உக்காந்துண்டு, மீதி மொத்த தேசத்துக்கும் நாலே நாலு எடத்துல மடங்கள் போறும்னு வெச்சாரே ஆதி சங்கரர், அது இந்த quality-ய  maintain பண்றதுக்கு தான்... இத்தனை கோடி ஜனங்களுக்கு ஒரு ரெண்டாயிரம் மடங்களாவது வெச்சிருக்கலாமே! 

நீ தெருவுக்கு தெரு கோயில், ஊருக்கு அறுவது மடம் வெச்சேன்னா, இப்படி தான் ஆகும்... வேற ஆள் கெடைக்காம, தகுதி கொறச்சலா இருக்கறவா, தகுதியே இல்லாதவா எல்லாரும் வந்து சேருவா... ஞானத்தக் கேக்கலைன்னாலும், பேராசையால அது வேணும் இது வேணும், என் புள்ள immediate-ஆ வேலைக்கு சேர்ந்த அடுத்த வருஷம் CEO ஆயிடணும், என் பொண்ணு கால்ல அவ மாமனார் மாமியார், நாத்தனார் எல்லாரும் விழணும் இப்படியெல்லாம் ஆரம்பிச்சு, விஜய் படம் நன்னா ஓடணும்னு இவா வேண்டிக்கறது வரைக்கும் அவஸ்யமா? வெளிப்படையா சொல்லிக்க முடியாத ஆசைகளோட ஜனங்கள், அத தீர்த்து வெக்கறவான்னு சில பேரைத் தேடிண்டு போனா,
எங்கயானும் காசு வரும்னு தெருவ மறிச்சு கோவில் கட்டி பொழப்பு பண்றவாள்கிட்ட தான் கூச்சமில்லாம போய்க் கேக்கத்தோணும்... 

மொதல்ல, ஒரு மனசா ஒரே  மார்கமா இல்லாம, வீட்டு சொவர் பூரா ஆணி அடிச்சு, விதம் விதமா இருவத்தஞ்சு படம் மாட்டி வெச்சு, அதுல ஓரத்துல எழுதீர்க்கற செந்தில் ஸ்டூடியோ, haaji moosa frame works, நாதன் பிரதர்ஸ்-க்கும் சேர்த்து கற்பூரம் காட்டறத நிறுத்து... அங்க தான் ஆரம்பிக்கிறது  ஆசைகளும் 
compromise-ம்....


8 comments:

  1. // வீட்டு சொவர் பூரா ஆணி அடிச்சு, விதம் விதமா இருவத்தஞ்சு படம் மாட்டி வெச்சு, அதுல ஓரத்துல எழுதீர்க்கற செந்தில் ஸ்டூடியோ, haaji moosa frame works, நாதன் பிரதர்ஸ்-க்கும் சேர்த்து கற்பூரம் காட்டறத நிறுத்து... அங்க தான் ஆரம்பிக்கிறது ஆசைகளும்
    compromise-ம்.... //

    வெல் செட்.

    சாமியை தேடாமல் ஆசாமியைத் தேடினால் இதுதான் கதி.

    ReplyDelete
  2. என்ன சொல்லறதுனே தெரில, எதையும் நம்பவும்முடியல, அவா அவாளுக்கு வேணும்கறத பாத்துண்டு Qualitya இருந்தாலேபோதும்

    ReplyDelete
  3. நாமே ஒழுங்காகக் கேட்டு, நன்றாக பார்த்து - எதை யார் ஏன் சொல்கிறார்கள் என்பதை ஆராய்ந்து நம்பினோம் என்றால் - நல்லது. அதை விட்டு - அவர் சொல்கிறார், இவர் நம்புகிறார் என்று குருட்டு நம்பிக்கை கொண்டால், அந்த நம்பிக்கை நாசம்தான். நாகராஜ் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. Well said.

    - Law of Averages rules in Roulets in Casinos
    - Difference between Need & Greed not known to many; they alone encourage MLHs, 34% vattis & anti social activities whether from Politicians or Education Institutions or even Kittakkave Saamiyaar

    ReplyDelete
  5. மூட நம்பிக்கைகளை challenge பண்ண கூடிய எண்ணங்களையே பகுத்தறிவு என்கிறோம். ஆனால் பகுத்தறிவு என்றால் atheism என்று ஆக்கிவிட்டார்கள் அரசியல்வாதிகள். இது ஒரு பக்கம் இருக்க, நீங்கள் சொல்வது போல், மக்கள் தாம் நம்பக்கூடிய தெய்வங்களையே broker-களாகவும், agent-களாகவும் மாற்றி....தம் ஆசைகளுக்கும், பேராசைகளுக்கும் இறைவனை use பண்ண முயற்சிப்பதால் தான் இந்த வேடிக்கைகள் நடக்கின்றன.

    ReplyDelete
  6. Nagaraj Erode: பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து தந்ததில் ஆரம்பித்ததோ?!


    Rk Kuppurao: மூட நம்பிக்கையை சொல்கிறீரா, பேராசையை சொல்கிறீரா? எனக்கென்னவோ நான்கும் கலந்து தந்ததில் "மப்பு" ஆகிவிட்டதாக தெரிகிறது!


    Nagaraj Erode: இரண்டுமே அல்ல. எளிமையான நான்கு பொருட்களைத் தந்து பெறுகின்ற உயர்ந்த நற்றமிழ் எனும் போது, how come, this rock bottom offers occur என்ற கேள்வியை எழுப்பி, விடையாக, கண்ணே... நீ கொடுக்கும் பொருள் பெற்றுத் தரவில்லை அதை, உன் தூய பக்தியினால் பெறவேண்டியது அது என்று சொல்லிக் கொடுக்க மறந்த ஆ"சிறியர்களால்"....

    ReplyDelete
  7. போலிச் சாமியாரும் வேண்டாம்; நல்ல சாமியாரும் வேண்டாம்

    http://simulationpadaippugal.blogspot.com/2010/03/blog-post_14.html

    ReplyDelete