Sunday, May 17, 2009

ஜெயமோகனின் கடிதம்...



நம்மில் இருக்கும் நமக்குப் பிடிக்காமல் இருக்கும் ஓர் அம்சத்தை இன்னொருவரில் கண்டால்கூட அவரை நாம் வெறுக்கிறோம். வெறுப்பின் ஊற்றுமுகங்கள் மிகமிக ஆழமானவை.”

- ஜெயமோகன்.

Dear J,

உண்மை.
இளம்பிள்ளைவாதம் என்னைத் தாக்கிய போது, என் வயது இரண்டரை. இப்போது, முப்பத்து எட்டு. கர்நாடக இசையில் அறியப்பட்ட, ஒரு மிருதங்க வித்வான். மூன்று சக்கரங்கள் பொருத்திய கைனடிக் ஹோண்டாவில் சென்னையின் நீள அகலங்களைக் கச்சேரிகளுக்காய் கடக்கையில், சிக்னலில் காண நேர்கின்ற சக ஊனமுற்றவர்கள் முகம் திருப்பி எங்கேயோ பார்க்கிறார்கள்.
பழகுதற்கினியனாய் விளங்கும் என்னியல்பு வெகு சுலபமாக தோற்றுவிடும் இடங்களில் இதுவும் ஒன்று. People who are physically sound, mingles very easily with me than people with disabilities do.
முட்டாள்கள் - முட்டாள்களையும், குடிகாரர்கள் - குடிகாரர்களையும் நேசிப்பதில் கூட தடையேதும் இல்லை. ஆனால், உடற்குறைபாடு கொண்டவர் பாடு சற்று திண்டாட்டம் தான். வாழ்வின் கீழ்நிலைகளில் சார்ந்து வாழ்தல் தவிர்க்க இயலாத நிலையில் தான் வெறுப்பின்றி பழகுகிறார்கள்; சங்கங்கள் இயங்குகின்றன. இங்கே பலரும் இப்படித்தான் என்ற எண்ணமே அவர்களை சகஜமாக்கி விடுகிறது. இருவர் மட்டும் differently abled, மற்றவர்கள் சாதாரணர்கள் எனும் போது ஒரு இறுக்கம் வந்துவிடுகிறது.
கொஞ்சம் மேலே வந்து விட்டவர்கள் கூட, தன்னைக் குறித்த உயர் எண்ணப் பிழையாலேயே (superiority illusions), மனதின் ஆழத்தில் தேக்கிய தாழ்வு மனப்பான்மையால், தங்கள் மீதே வெறுப்புற்று, தன் பிம்பமாக ஒன்றைக் கண்டதும், முகம் திருப்பிக்கொள்கிறார்கள்.
அது, ஆரம்ப நிலை தயக்கமாக இருக்கலாம் என்று இன்னும் கொஞ்சம் சிரித்தோ, நட்பாகப் பார்த்தோ செய்தால், “எங்க ஏரியா, உள்ள வராதே” என்று title card போடுகிறார்கள்.
ஈரோடு நாகராஜன்.

wishes,
Erode Nagaraj.

அன்புள்ள ஈரோடு நாகராஜன்

தங்கள் கடிதம். உண்மை. மனித மனங்களின் வகைகளைந் ஆம் நம் வாழ்க்கை மூலம் அள்ளவே முடியாது. எளிய சூத்திரங்களுக்குள் அவை அடங்காது. பிறரை புரிந்துகொள்வது என்பது நுட்பமாக நோக்கினால் நம்மை புரிந்துகொள்வதே. பிறரைப் புரிந்துகொள்ள தன்னை நோக்குபவன், தன் வாழ்க்கையை தன்னை மட்டும் சார்ந்தே அமைத்துக் கொள்பவன் மட்டுமே மகிழ்ச்சியை அடைய முடியும். பிறர் என்பது நம்மைச்சுற்றி உள்ள இயற்கை என்னும் ஆடியில் பிரதிபலிக்கும் நம்முடைய பிம்பங்களே

ஜெ

Wednesday, May 13, 2009

கமல்ஹாசனும் நானும்...







யாராவது இந்த வருடம் ம்யூசிக் அகாடமியில் கச்சேரி இல்லை என்று வருத்தப்பட்டால், இதை இப்படியே வெளியே சொல்லாதே, "நானும் பீம்சென் ஜோஷியும் இந்த முறை அகாடமியில் பாடவில்லை" என்று சமாளி என்போம்.

மூன்று மணி அளவில், வாக்காளர் அடையாள அட்டையுடன் தி.நகர் சென்ற என்னையும் லிஸ்டில் பெயர் இல்லையென்று திருப்பியனுப்பி விட்டார்கள். ராமநாதன் தெருவிலுள்ள பள்ளியில் எனக்கு வாக்கு இருப்பதாக அறிந்து, அருண் குமாரை 'கிளப்பி' அழைத்துச் சென்றேன்.

காலையிலேயே சுறுசுறுப்பாக வாக்களித்துச் சென்றிருப்பார்கள் என எண்ணினேன். எல்லோரும் இப்படியே நினைத்து, மதியம் கூட்டமாக இருக்கும் என்று அருண் சொல்லிக்கொண்டிருந்தான்.

தெருக்கள் சற்று வெறிச்சோடி இருந்தன. பூத்திலும் ஜனங்களைக் காணோம். Ramp-ன் வழியில் ஒரு விளம்பரமும் ஒரு TVS 50-யும் நிறுத்தி வழியை அடைத்திருந்தார்கள். 'You Tube புகழ்' விஜய்யின் குருவி - வில்லு படங்கள் ஓடும் தியேட்டர் போல காற்று வாங்கியபடி இருந்தது அவ்விடம்.

"
இங்க இல்ல சார், பக்கத்து ரூம்பு"

பக்கத்து ரூமில் நிறைய காகிதங்களைக் கிழித்துப் போட்ட குப்பைகளுக்கு நடுவே மூவரும், எதிரே ஐவரும் அமர்ந்திருந்தனர்.

"
சார்... இங்க வா சார்... பூத்து சிலிப்பு இருக்கா?"

"
இல்ல..."

"
இரு சார்... பாக்கறோம்..."

ஐவரும் தத்தம் புத்தகங்களில் என் பெயரோ படமோ இருக்கிறதா என்று தேடிக்கொண்டேயிருக்கும்போது நாலு பேராக வந்த ஒரு குடும்பம் கண்டு, ஸஃபாரியில் ஒருவர் சிரித்தபடி, "நீங்க போயிட்டு வாங்க... அடுத்த Election- போடலாம்" என்றார். Presiding Officer அங்கே அமர்ந்து, இதற்கு வழி சொல்ல்லாமல் மௌனம் காத்தார்.

அவர் கவலை அவருக்கு. அதற்கான படிவத்தை நிரப்பி, முத்திரையிட்டு, கையெழுத்து வாங்கி, கவரை ஒட்டி என்ற அலுவல்களில் அலுப்பு கொண்டு பேசாதிருந்தார் என்று பிறகு அப்பா சொல்லத் தெரிந்துகொண்டேன். "இதுக்கு தான் ஒட்டு போட எல்லாம் வரவேணாம்னு சொன்னேன்" என்றான் அருண்.

மீண்டும் கைனடிக்கில் ஏறும் போது, வாசலில் உட்கார்ந்திருந்த சிலர் யாரிடமோ, இப்போது வேண்டாம், பிறகு என்று ரகசியமாய்க் கை காட்டிக் கொண்டிருந்தனர்.

வழியில் அயோத்யா மண்டபம் தாண்டி SBI - ATM வாசலில், கூட்டமாக சில பெண்கள் அமர்ந்து வோட்டு போட முடியவில்லை என்று அங்கலாய்த்தபடி அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்த ஒருவனின் பரம்பரையையே வார்த்தைகளால் மோக்ஷத்துக்கு அனுப்ப முயன்று கொண்டிருந்தார்கள்.

மூன்றிலிருந்து ஐந்து மணிக்குள் தான் கள்ள ஓட்டுகள் பதிவாகும் நேரம் என்று காற்று வாக்கில் காதில் விழுந்தது. Blog-ல் எழுதுவதற்கும் "வாக்கு" வன்மைக்கும் சம்பந்தம் இல்லை தான்.

எப்படியோ, என்னுடைய "WALK"-கினை எப்போதும் போலவே இன்றும் என்னால் பதிவு செய்ய முடியாமல் இயற்கையுடனான என் போராட்டம் தொடர்கிறது.

விஷயம் என்னவென்றால், கமல்ஹாசனும் நானும் ஒட்டு போட முடியவில்லை!


Monday, May 11, 2009

தி.நகர் Bus Stand மிகவும் பரபரப்பாக ரத்தத்தின் ரத்தங்களின் தாயை அன்னையர் தினத்தில் வரவேற்க அங்குமிங்கும் அலைந்தவண்ணம் இருந்தது. அப்போதும், ரங்கநாதன் தெருவில் மக்கள் சளைக்காமல் signal-களை மதிக்காமல் சென்று கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு நாள் காலை, அந்தத் தெருவின் இருபுறங்களும் கட்டிடங்களே இல்லாமல் வெறுமையாய் இருந்தால்....

நேற்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு B.T. இரங்கராஜனுடன் கச்சேரிக்குச் சென்றேன்.
Election meeting என்று எங்கும் தொண்டர்கள் "தெளிவாக" அலைந்து கொண்டிருப்பதால், முன்னதாகச் சென்றிருந்தோம். அமைந்தகரை ஏகாம்ரேஸ்வரர் கோயிலில் கச்சேரி.



அதில் சட்டென்று எம்.எஸ் .சுப்புலக்ஷ்மியின் குரலில் விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிபெருக்கியின் வழியே எங்களை ஆச்சிரியப்படுத்தியது.

பார்த்தால்
, சிவ சிவ என்ற கோபுர வாசல் வழியே, சன்னிதானத்தின் பின்சுவற்றுக்கு மிக அருகில், பெரியதொரு கோபுரம்-அதில் அழகிய நாமம்.

சட்டென்று ஒரு பார்வைக்கு, கோயிலின் ஒரு புறம் சிவனும் மறுபுறம் விஷ்ணுவுமாக சைவ-வைணவ அபேதம் சித்தியாகிவிட்டதைப் போன்றிருந்தது. இந்தக் கோவிலின் மதில்சுவருக்கு அப்பால் சின்ன தெரு, அதன் அக்கரையில் பெருமாள்
கோவில். அங்கிருந்துதான் சர்வதர்சீ விமுக்தாத்மா...


This time, there were two ramps on the sides of the entrance,
just like the two elevated platforms one can see in service centers for car wash. But, they were not broader enough to use the wheel chair. They have been designed to fit the wheels of the temple chariot. The temple guy said that they have wooden plates to fill the gap, but, they were used to set the stage for the concert!


இதீதம் கீர்த்தனீயஸ்ய என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, இங்கிருந்து பெருங்குரலில், ஹர ஹரசிவனே.. அண்ணாமலையே.. ஹர ஓம் நமசிவாய... என்று எஸ்.பி.பாலு commenced his account for the evening. "சார்.. இந்தப் பாட்டும் அந்த "ஸ்ரீ வேங்கடேசம் மனசா ஸ்மராமி" ரெண்டும் ஆரம்பிச்சா முடியவே முடியாது" என்று en (erode nagaragj!) சிஷ்யன் கிஷ்ண பிரசாத் சொன்னான்.

"கிருஷ்ணா, ஏய்... ஓராயிரம்-னு ஒரு பாட்டு இருக்கு கேட்டிருக்கியோ..."

இல்ல சார்...

"மீண்டும் கோகிலால வரும்", பாடிக் காண்பித்தேன். "அத நாங்க, ஏய்... ஓராயிரம்.. ஏய்... ரெண்டாயிரம்... ஏய்... மூவாயிரம்னு நிறுத்தாம பாடி ப்ராணன வாங்குவோம் எங்க class-ல. அது மாதிரி இந்தப் பாட்டெல்லாம்... முடியாது..."

நாங்கள்
பிராகாரத்தை சுற்றி மறுபக்கம் போனோம். ஒலிபெருக்கிகளின் நேர் பார்வை மறைந்ததால், சப்தம் குறைந்திருந்தது.

இரண்டு தெருக்கள் தள்ளி, ஜெயலலிதா தேர்தல் பொதுக்கூட்டம். சிவன்கோயிலும் பிரச்சாரமும் சேர்ந்து பார்க்கும் போது, "மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே" என்று ஞாபகம் வந்தது!

"ஹும்... பக்கத்துல இத வேற வெச்சுண்டு எப்படி தான் கச்சேரி பண்றதோ" said the vocalist.

"கவலைப்படாதே... அங்க கை தட்டினா உன் பாட்டுக்கு தானோன்னு நெனச்சுப்பா, வெளீலேந்து கேக்கறவா எல்லாம்"

"கிண்டல் பண்ணாதீங்கோ..."

"ச்சே..ச்சே.. உன்ன கிண்டல் பண்ணல.. ஒரு நாளானும் அவா எல்லாம் நல்லவிஷயத்துக்கு கை தட்டினதா இருக்கட்டுமே" என்றேன்.

Wednesday, May 6, 2009

இட்லிவடையில் என் கட்டுரை...


Wednesday, May 06, 2009

இளைய சமுதாயத்துக்கு ஓர் இசைக் கலைஞனின் கடிதம்!

Unrated


யூத்ஃபுல் விகடனில் வந்த - மிருதங்க கலைஞர் - ஈரோடு நாகராஜின் இந்த கடித்ததை சிறந்த கட்டுரையாக இட்லிவடையில்..

அன்பு இளைஞர்/இளைஞிகளே...

படிக்கட்டுகளைப் பார்க்கும்போது, பயந்ததுண்டா நீங்கள்?

படிக்கட்டின் உயரத்தைக் கண்களால் அளந்து, தவழ்ந்து சென்று அதை நெருங்கி, இத்தனை படிகளென்று மனதில் குறித்து, கைப்பிடி இருக்கிறதா... அது தாங்குமா... அது இடது புறம் இருந்தால் எப்படி ஏறவேண்டும், வலது புறம் இருந்தால் எப்படிச் சமாளிக்க வேண்டுமென எண்ணியபடி, இரண்டு கைகளால் உடல் முழுவதும் தூக்கி இழுத்து, நகர்ந்து சென்று...

அரங்கின் வெளி முனையில் ஏறி உள்ளே பார்த்து, எதிர்ப் பக்க ஓரத்திலிருக்கும் மேடை வரை ஊர்ந்து, மூச்சிழுத்து... சக்தியைத் திரட்டி... மீண்டும் சில படிகளை ஏறி...

ஸ்வாசத்தை நிதானம் செய்து, உடலின் அயற்சியை மழுப்பியபடி சிரித்து, ஸ்ருதி கூட்டித் தொடங்கும் என் பெரும்பாலான கச்சேரிகள்.

கோடைக் காலப் படிகள் காய்ந்திருக்கும்; கடந்து விடுவேன் கையுறைகளுடன்.

மழை பெய்தால்?

சேற்றை மிதிக்கச் செருப்பணியும் நாகரீகம், நாங்கள் நகரும் நாலு கால் நடையை நினைப்பதுண்டோ என்றேனும்?

காய்ந்த தரையின் சிறு மண் துகளோ, கல்லோ குத்திய காயங்களை உங்கள் உள்ளங்கைகளோ, முழங்காலோ உணர்ந்ததுண்டா என்றேனும்?

கணவனை இழந்த கதையையோ, பிள்ளையைப் பறிகொடுத்த துக்கத்தையோ, எங்கோ எவரிடமோ ஏமாந்த சோகத்தையோ மறக்க எண்ணும் மனதை, கிளறுவதும் அந்த இரணத்தின் அடிவேர் துளைத்து நினைவூட்டுவதும் மனித நேயமற்ற காரியம் எனில், அது, நாகரீகத்தில் சேராதெனில்...

ஒவ்வொருமுறையும் என் ஊனத்தை, என் இயலாமையை நினைவுறுத்தி, என் பயணத்தில் படர்ந்த பேரிடராய், என் தயக்கங்களை மட்டுமே ஊக்குவிக்கும் தடையாய், என் சமூஹத்தை மூச்சிரைக்க வைக்கும் மூல காரணமாய் முளைத்து நிற்கும் படிகள், சக்கர நாற்காலி வைத்துக் கொண்டும் சமாளிக்க முடியாத நம் அரங்குகளின் கட்டமைப்புகள், ஊனமுற்றவர்களை - அவர்கள் ஆவலாய்ப் பங்கேற்க விரும்பும் விஷயங்களில் இருந்தும் தள்ளி வைப்பது... இன்றைய வளர்ந்துவிட்ட விஞ்ஞான உலகின் வெட்கம் தரும் வேதனைகளில் ஒன்று..!

உங்களுக்குத் தெரியுமா?

Lift இல்லாத மாடிகளின் எண்ணிக்கயைப் போலவே, lift-ஐ அடைவதற்கே ramp இல்லாமல், பல படிகள் ஏற வேண்டிய நிலையில் தான் அரங்குகளும், பொது இடங்களும், கழிவறைகளும் உள்ளன. அதிலும் சில இடங்களில் ramp-கள், ஒருபுறம் சரிவாகவும் மறுபுறம் படிக்கட்டுகளுடனும் இருக்கின்றன!

சாலையின் இருபுறமும் இருக்கும் நடைபாதை கூட ramp இல்லாமலும், பாதையின் நடுவே, கடக்க முடியாத விளக்குக் கம்பங்களும் கொண்டவைகளாகத்தான் இருக்கின்றன.

எண்ணிக்கையில் குறைந்தவர்கள், பெரும்பான்மை இல்லை என்ற எங்களின் நிலையோடு இந்த சங்கீதக் கலையைக் கேட்டு ஆதரிக்கும், பாடிப் பங்களிக்கும் வயதானவர்களையும் எண்ணிப் பாருங்கள்...

அரங்கத்தையோ மேடையையோ அணுக முடியாத கவலைகளில் எத்தனை நாட்கள் எல்லாவற்றிலிருந்தும் தள்ளி இருப்போம்?

எத்தனை நாட்கள் தான் உடல் பலத்தின் உறுதியை நம்பி பொறுத்துக்கொள்வோம்?

துஷ்டனைக் கண்டால் தூர விலகலாம்; துயரங்களை?

எங்களின் ஊனத்தினால் நாங்கள் மேற்கொள்ளும் துயரங்களுக்கு, பரிதாபப் பார்வைகள் பலனளிக்காது.

"If you are not part of the solution then you are the problem"

Please, provide us ramps and make the places user friendly for the physically challenged.

இன்றைய இளைய சமுதாயத்துக்குப் புரிதல் ஏற்படவே இக்கடிதம்!

வாழ்த்துகளுடன்,

ஈரோடு நாகராஜ் - மிருதங்க கலைஞர்

என்னைப் பற்றி மேலும் அறிய...

http://ramsabode.wordpress.com/2006/10/07/erode-nagaraj/
http://www.chennaionline.com/chennaicitizen/2004/02nagarajan.asp
http://www.nscottrobinson.com/southindiaperc.php

( நன்றி: யூத்ஃபுல் விகடன் )

16 Comments:

Erode Nagaraj... said...
aahaa... enna ore inba adhirchi!! ikkaruththu makkalai sendradaivadhil idly-vadaiyum pangukondadhu... thank you... thanks a lot...
மானஸ்தன் said...
ஆஹா! அருமையான கலைஞர். (மு.க. அல்ல). பல (நல்ல) முகங்களைக் கொண்டவர்! (தமிழ்குடிதாங்கி அல்ல) நல்ல நண்பர்! (திருமா அல்ல!)...நல்ல சிந்தனைகளைத் தூண்டும், சிரிக்க வைக்கும் செந்தமிழன்! கடின உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் முன்மாதிரியான ஒரு உதாரண "புருஷன்" - பேச்சு ஆளர்! (bachelor)!)! மொத்தத்தில் எனக்கு ஒரு நல்ல அண்ணா! (மு.க. வின் அண்ணா அல்ல!)...
UMA said...
உடல் ஊனமுற்றோரை கவனித்து அவர்களுக்கு பொருத்தமாக கட்டுமானங்கள் செய்யப்படவில்லை என்பதை அழுத்தமாக எழுதிஉள்ளார். இப்போது கட்டப்படும் வீடுகளில் வீட்டுக்குள் நிலைகள் , படிகள் இல்லாமல் ஒரே சமதளத்தில் அறைகள் உள்ளன. அதே போல் வெளிநாடுகளிலும் சாலையிலிருந்து கடைகளுக்குள் செல்லவும் வேறு கட்டிடங்களுக்குள் செல்லவும் படிகள் இல்லாமல் ஸ்லோப் ஆக பாதைகள் இருப்பது போல் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். அது வயதானவர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும்.
vinoth kumar said...
really good one
Anonymous said...
I have been in US and UK for a long time and visited lot of places in these countries. Any physically challanged persons can go anywhere without anyone's help. Right from the apartment to the main road and to any shoping area there entry and exit point pathway will have a slope where the wheelchair can operate smoothly. In fact no one in these countries care about or help or feel sympathy about physically challanged people(as they dont like it) but the govt has made all the arrangements to facilitate their movements. There is separate parking slots for the PC people and you can see it empty even if all other slots(general slot) are full because you will be fined and imprisoned for any violation. Everytime I see old people and PC persons climbing the tall staricases in railway stations my heart will shed tears as I could not help them anyway. - Kamal.
Erode Nagaraj... said...
//உடல் ஊனமுற்றோரை கவனித்து அவர்களுக்கு பொருத்தமாக கட்டுமானங்கள் செய்யப்படவில்லை என்பதை அழுத்தமாக எழுதிஉள்ளார்.// Dear Uma, I am an orhopaedically handicapped guy and that is my personal experience. Most of the halls - weeding, shopping, concert etc. cares least for the disabled and old people. I went to Michigan(USA)and the priority and facilities that the differently abled are enjoying is really great. The right to live your life is balanced. As an artiste surrounded by great friends and well wishers and a guru for many, I do my travels in and around the state, measuring the length and breadth of the city on a kinetic honda 3 wheeler and living a peaceful life. But, there are many people who are not able to discover their ability and there are people who know their mettle but, opportunities denied to prove themselves. The society need to do something for them. Access denied is Avenues blocked.
Swami said...
Idly vadai .. thanks for bringing this article to limelight.. sick and tierd of reading political news..
Krish said...
நல்ல கட்டுரை நாகராஜன்! வளர்ந்த நாடுகளில் இருக்கும் வசதியைப் பார்த்தால் அதுபோல் ஏன் இங்கு இல்லை என்ற அதன்கமே ஏற்படுகிறது.
Chandrasekharan said...
First of all, I would like to thank the blog owner for posting this. I live in the U.S and the facilities for the physically challenged is simply awesome. Right from providing slopes to automated doors, they can lead a close-to-normal life. Nagaraj anna is an inspiration for everyone, who is complaining about their lives.
Anonymous said...
Very well written Nagaraj Sir.
Inba said...
திரு. நாகராஜ், புரிதலோடு, தன்னம்பிகையும் எற்படுகிறது உங்கள் கடிதம் படித்தவுடன். துயரங்களை தூசிகளாக்கி மேன்மலும் தாங்கள் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் அன்புடன் இன்பா
Ravi said...
Very well put, Nagaraj. I wonder if there something similar to US' Americans with Disabilities Act in our constitution. If not, we need something like that, which will prohibit discrimination based on disability. I think that act also forced ramps construction and other special facilities for disabled people in public places in US. How much extra does it really take to construct a ramp when they are spending crores in the building projects?
Kannan.S said...
- It is one of the best post from idlyvadai... - It is all of us to understand that we have to make arrangements for those Physically challenged people...
லவ்டேல் மேடி said...
நெம்ப அருமையான வெளிப்பாடு.....!! இந்த மாதிர் விசியங்கள் .... எடுத்து சொல்ல ஆளில்லாம போச்சு....!! உங்ககிட்ட இருக்குற தன்னம்ம்பிக்கை கூட .... என்கிட்ட இல்ல....!! உங்க கட்டுரை நெம்ப அருமையா இருக்குதுங்கண்ணா...!!! நன்றிங்கோ...!!!!
தமிழ்ப்பிரியா said...
"If you are not part of the solution then you are the problem" - கன்னத்துல பளிச்சுன்னு அரைஞ்ச மாதிரி இருக்குது...
Guru said...
Put your self in other's shoe என்பார்களே, அதைத்தான் உணர்ந்தேன். எத்தனை அழுத்தமான உண்மைகள். தடைகளை தாண்டுவது மட்டுமல்ல தடைகளை எதிர்த்து குரல்கொடுக்கவும் ஓர் வைராக்யமும் பிடிப்பும் வேண்டும். காரனம் செல்லி காலத்தை கடத்தும் என் எண்ணங்களுக்கு சவுக்கடியாக அமைந்தது உங்கள் பதிவு, நன்றி.

Tuesday, May 5, 2009

ஆறல்ல எட்டு...

இ.வ.வலைப்பூவில் இவ்விரு படங்களையும் போட்டு, ஆறு வித்தியாசங்கள் கண்டு பிடிக்க வேண்டாம் என வேண்டுகோளும் விடுத்திருந்தார்கள்... எனவே, உடனே கண்டுபிடித்தோம், நல்லுறக்கம் வேண்டி...








Monday, May 4, 2009

பாலகுமாரன் என்ற இனியவர்...

9.9.2003 - 11.45 pm

நேற்று, ஓணம் முடிந்து, இரவு உணவுக்குப் பின் சக்ரவாஹம் கதையின் பின்னே, ஸ்ரீயவாளைப் பற்றி பாலகுமாரன் எழுதியிருந்ததை ஹரிஹரனுக்குப் படித்துக் காட்டியது ஆனந்தமாக இருந்தது.

காலையில் மீண்டும் அதை படித்த்துவிட்டு, கண்கள் கேள்வி பதிலை மேய்கையில், "எழுதவேண்டியவற்றை மொட்டை மாடியில் நடந்தபடி வாக் மேனில் பதிவு செய்து...." என்று கூறியிருந்ததை படித்ததும், இதே மாதிரி பெரியவாளைப் பத்தி பேசச்சொல்லி ரெக்கார்ட் பண்ணித் தரச்சொல்லணும்... என்று எண்ணம் ஏற்பட்டது.

வேறு ஒரு பதிலில், தலையணைப் பூக்கள் நாவலில் அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்றும் சூட்சமத்தில் கலந்து விட்ட ஞானியரைப் பற்றி எழுத பயமாயிருக்கிறது எனவும் படித்த ஞாபகம் வந்தது. கூடவே, ஒழுக்கக்கேடு பற்றிய கேள்விக்கு, 20அடி ரோட்டில்,4அடிக்கு குறுக்கே சைக்கிளை நிறுத்துவதற்கு திட்டும்.

எல்லாமே சாயங்காலம் மறு ஒளிபரப்பாகும் என்று அப்போது தெரியவில்லை.

காயத்ரி வெங்கடராகவனுக்கு கல்கி விருது கிடைத்த மனமகிழ்வின் பகிர்தலாய் ஏதேனும் வாங்கிக் கொடுக்க, சுந்தருடன் கபாலீச்வரர் கோவிலருகே தேடும் பொழுது, கற்பகம் ஹோட்டல் அருகே வந்ததும் பாலகுமாரனைப் பாக்கணுமே என்று நினைத்துக் கொண்டேன்.

கேஸட் ஸ்டாண்ட் நன்றாக இருந்தது, ரெண்டாய் வாங்கினேன். RK Mutt road ல், போளி ஸ்டாலில் வடை சாப்பிட்டுக் கையலம்பி, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து, கிளம்பலாம் என வண்டியை ஸ்டார்ட் செய்ய நினைத்தால்... அருகில் வந்து நின்ற வண்டியில் பாலகுமாரன்!

"அடடே! நீயா! ஸௌக்யமா இருக்கியா?"

"இன்னிக்கு காலேலதான் பெரியவாளைப் பத்தி நீங்க எழுதீர்ந்ததப் படிச்சுட்டு, இன்னிக்கு பாத்துடலாமான்னு யோசிச்சுண்டு இருந்தேன்.... ரொம்ப ஸந்தோஷம்.... நீங்க ஏழு வயசுல பெரியவா கிட்ட திருப்புகழ் பாடினது, நீ ஸூர்ய வம்சமான்னு யோகியக் கேட்டது.... எல்லாம்...."

"ஆமாம், என் குருநாதரக் கேட்டார்"

"நீங்க சொல்லீருந்தேளே, ஒரு தடவ... மொட்ட மாடீல நடந்துண்டே வாக் மேனில் பதிவு செய்துன்னு... அது மாரி, பெரியவாளப் பத்தி பேசச் சொல்லி ரெக்கார்ட் பண்ணிக்கணும்னு நெனச்சேன்.

எனக்கு பெரியவா தான் எல்லாம்... எங்காத்துக்கு எதுத்தாத்துல பெரியவா 17வருஷம் போட்டுண்டு இருந்த பாதுகையக் குடுத்திருந்தா... எங்க குல தெய்வம்கோவில் திருவண்ணாமலை பக்கத்துல... அதனால அங்க போனோம். பாதுகைக்கு பூஜை பண்ணீண்டு இருந்த TVS Rao மாமா, யோகி கிட்ட அழச்சுண்டு போனார்.

பெரியவாளப் பாக்கறதுக்கு முன்னாடி யோகியத் தான் பாத்தோம் ஒரு.. காமணி,அரைமணி போல அவர்ட்ட ஒக்காண்டு இருந்தோம். ஒரு ஆப்பிளைக் குடுத்து, "நீ ஸாப்டுன்னார்... "You are from Erode? Convey this beggar's pranams to K.V.Subburathnam Iyer" அப்படீன்னார்...

நமஸ்காரம் பண்ணீட்டு கோவிலுக்கு வந்தோம். அங்க வந்தார். அந்த ப்ராகாரத்த, செகண்ட்ல கடந்து, அந்த பக்கம் போய்ட்டார். நடக்கவேயில்ல; மெதந்துண்டு போனார். அப்புறந்தான், அடுத்த நாள் பெரியவாளண்ட போனோம். ஒரு 13,14 தடவ, எப்பவும் அவாளோட கிட்டக்க வெச்சுண்டா" என்றேன்.

"நாகராஜா... நான் அப்ப மடத்துக்கு போவேன். chain smoker. ஒண்ணு தீர்றதுக்குளே, இன்னொண்ணு பத்த வெச்சுப்பேன். ஒரு நாளைக்கு 10 பாக்கெட் - Filter Wills....

ஸதஸ் நடந்துண்டு இருந்தது...நான் 3வது rowல இருக்கேன். சலம்-அசலம் பத்தி பேசீண்டிருக்கா.. எல்லாம் Sanskrit. தமிழா இருந்தா நாமளும் உள்ள போலாம்..

நான் ரெண்டாவது row க்கு வந்தேன். குண்டா ஒரு மாமா, இந்த வோத்லா ப்ராம்மணன் தான் உண்டே, அது மாதிரி. அப்புறம் ரெண்டு தம்பதி. தம்பதிகளுக்கு குறுக்கே போப்டாதுன்னு நின்னுண்டு இருக்கேன். சிகெரெட் புடிக்கணும் போல இருக்கு.

இது சரிப்படாது. சட்டயக்க் கழட்டீட்டு கையக்கட்டீண்டு நிக்கணும்; வாயப் பொத்தீண்டு பேசறான். அது ரொம்ப ஸூக்ஷமமா பேசீண்டு இருக்கு."

"டக்னு ஒரு எண்ணம். எனக்கு குருவா இருக்கறவரும் சிகெரெட் புடிச்சா எப்படி இருக்கும்னு நெனச்சுண்டேன்... என் சகல விதமான அநாச்சாரங்களையும் பொறுத்துக்கொள்ளும் ஒரு குருவை குடுங்கோன்னு.... விவரமா பத்திரிகைல எழுதல...."

"பெரியவாகிட்ட என்னன்னா, யாராவது நெனச்சிண்டா திரும்பிப் பார்ப்பா... அப்படி பாத்தா என்னை...அடி வயத்துல என்னமோ ஓடறது.. உள்ளல்லாம் கலங்கறது.."

"ஒரு சாத்துக்குடிய உருட்டிவிட்டா... நான் எடுக்கப்போனேன், front row மாமா பாஞ்சு எடுத்துண்டா. எனக்குத்தான்னு, நேக்கு தெரியறது.. இருந்தாலும் சரி, எனக்குத்தான்னா, எனக்குக் குடுத்து தான் ஆகணும்னு நின்னுட்டேன்".

I waited with crossed fingers.

"இங்க வான்னு கையைக் காட்டி கூப்டா.. ஒரு மாம்பழம் அப்படியே கைல போட்டா..
திருவண்ணாமலைக்குப் போ"....... அப்படீன்னு சொன்னா... ந்யாயமா உடனே போயிருக்கணும்..
ஆனா, அடுத்த நாள் வேல.. அது-இதுன்னு நான் போல. உத்யோகத் திமிர்... 6 மாசம் கழிச்சுப் போனேன்.

"NOT NOW" ன்னு குரல் வந்தது.

6,7 மாசமாச்சு அப்புறம்.தொட்டு, தடவி, பார் - கடவுள் பார்னு காமிச்சார்.... நான், நீ, அந்த மரம், பூ, பூச்சி எல்லாம் சாமீன்னு தெரிஞ்சு, நான் என்னயும் அறியாம இப்படி நிக்கறேன்..."

(இடது கை மார்பிலும் வலது கை மேலுயர்த்தியும் நின்று காண்பித்தார், பகவான் ஸ்ரீ இராமக்ருஷ்ணர் அப்படி நிற்பது போன்ற நினைவுக்கு வந்தது. அதையும் சொன்னார்).

இடையில், பெரியவாள் எனக்கு உபதேசம் செய்தது, எலுமிச்சம்பழ மாலையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தால்... பல்லக்கின் கதவைத் திறக்கும்போதே கையை நீட்டி வாங்கிக்கொண்டது,
"இந்தப் பையன் மிருதங்கம் அடிப்பான்" என்றது... எல்லாம் சொன்னேன.

"நானும் யோகியும் ஆளுக்கு 9 cigarette எடுத்துண்டு ஒண்ணொண்ணா புடிப்போம். சிகரெட்டா அது? உள்ள போய் என்னென்னாமோ பண்ணும்.

"நீயா இங்க வரல... யாரோ உன்ன இந்த beggar கிட்ட direct பண்ணீருக்கா" என்பார். பெரியவா அனுப்பிச்சத சொல்லுவேன்.என்னக் கட்டீண்டு படுத்துப்பார். நெஞ்செல்லாம் தடவி விடுவார். 20,25 பேர் இருப்பா; என் கால மடீல வெச்சுண்டு விரல் விரலா அழுத்துவார். எல்லாரும் அய்யய்யோம்பா... அது காலை அது பிடிச்சுக்கறதும்பேன்.. we became one... யார் என்ன சொன்னா என்ன...."

இரவு நேர விரைதல்களால் மைலாப்பூர் இடையறாது கடக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

"குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடைல யாருமேயில்ல.. எனக்கு ஸ்மரணை, நயனமெல்லாம் போறல... உன் ஸ்பர்சம் வேணும்னு பெரியவாளைக் கேக்கறேன்.." என்றேன்.

"உன் தாபம் எனக்குப் புரியறது நாகராஜா....என் வேலை என்னன்னு யோகியக்க் கேட்டேன்...To destroy No God movement. Take youngsters closer to God" என்றார். எனக்கு இன்னோரு ஜன்மா இருந்துதுன்னா, பாலகுமாரனோட தான் இருப்பேன்னார். நான் எழுதல, என் மூலம அவர் நடத்தீண்டு இருக்கார்.

18 ஆன்மீகப் பத்ரிகை வர்றது இப்போ. I don't claim that I am the reason for this, ஆனா அப்படி ஆச்சு....

ஒரு நாள் காலைலேர்ந்து ஒரே உன்மத்தம்... முதுகுல தட்டி.... எழுப்பி விட்டு.. எங்க பாத்தாலும் சாமி... மத்யானம் கத்தறேன்... "என் குரு எனக்கு ஒரு தநுஸக் குடுத்துருக்கார்..... அத வெச்சுண்டு... I will destroy... tell me what is to be destroyed"....அப்படீன்னு கத்தறேன்".

"புருஷ விரதத்துக்கு அப்புறம் trend ஏ மாறீடுத்துல்ல" என்றேன்.

"ஆமா... ஒன் எழுத்து ரொம்ப long periodக்கு பேசப்படும்னார்".

அப்போது நிஜமாகவே, அவர் scootter பின்ன்னால் ஒருவன் 4 அடி குறுக்காக cycleஐ நிறுத்திவிட்டுப் போனான். "மடைய்யன்..." என்றபடி நகர்த்தி சரியானபடி நிறுத்தினார். காலையில் தான் கேள்வி பதிலில் படித்ததைச் சொன்னேன், சிரித்தோம்.

"எப்பிடி இருந்தேன்..... எப்பிடி மாறீட்டேன்! பெரிய்ய ரவுடி நான். ...பரத்தேவ்டியா மகனே...ன்னு தான் ஆரம்பிப்பேன். ஏகக்கோவம் வந்துரும். அடிக்கப் போவேன். இப்பவும் அந்த ரௌத்ரம் இருக்கு", என்றபடி.. முகத்தில் - உடம்பின் அலைகளில் ஐந்து விநாடிகள் அந்தக் கோபம் மின்னி மறைந்தது... அந்த ரௌத்ரம் பார்த்து சுந்தர் பயந்தான்.

"இருவது வருஷம் முன்னாடி எடுத்த photo, பத்து வருஷம் முன்னாடி எடுத்தத விட இப்பத்தான் முகம் அழகா , நன்னாயிருக்கு....இது தான் லக்ஷணம்... உள்ள மொத்த்மும் மாறீடுத்து..."

"பெரியவா உடனே போன்னு சொன்னதைக் கேக்காததுனால, கிடைக்கவே 6,7 மாசம் ஆயிடுத்து... உடனே போயிருந்தா என்ன நடந்திருக்குமோ தெரியல.... அப்பெல்லாம் புத்தி இல்ல..."

"அப்புறமா ஆத்துக்கு வரேன்"

"ஆத்துக்கு வந்தா பேசமுடியும்னு தோணல... என்னை timeலாம் குடுத்து, இதப் பத்தி பேசுன்னா முடியாது. இப்படிச் சொல்லும்போதே, pocketல போட்டுக்கோ.... நீ தான் மஹா பெரியவாளப் புடிச்சிண்டிருக்கயே...."

"இல்ல... முன்னாடியே நீங்க வரச்சொல்லியிருக்கேள். நான், வந்தாலும், ஒங்களத் தொந்தரவு பண்ணாம, ஓரமா இருக்கேன், பேசாம..."

"நான் இருக்கும் போது வா. என்னோட card குடுத்திருக்கேனா? "

"இல்லயே"

"இந்தா... சௌக்யமா இரு.."

"ரொம்ப சந்தோஷம்.."

அதற்கு பிறகு எங்கேனும் வழியில் சந்தித்துக் கொண்டோம்...

நீண்ட நாட்களுக்குப் பின் இவ்வருட ஆரம்பத்தில் மயிலை ஆஞ்சநேயர் கோவில் வாசலில் பார்த்துக்கொண்டோம். வயது கூடியிருந்தது.. என்னுடன் பேசுவதற்காக மனைவியை "இருடா கண்ணு.... வந்துடறேன்...." என்றுவிட்டு வந்தார்.

உடையார் நாவல் மிக நன்றாக வந்திருந்ததை பாராட்டி சில வார்த்தைகள்.... "சரித்திர நாவல்ங்கற பேர்ல soft porn எழுதீண்டு இருந்தான்... அத ஒடச்சேன்... அது இருந்த இடத்துல இது நிஜமா வந்ததுருக்கு...."

விடை பெற்றுக்கொண்டோம்.

மஞ்சள் அழகிய குதிரையில் வைத்து சவாரியினூடே சடுதியில் புணர்ந்ததை விவரிக்கும் (so called - naval?!? ) சரித்திரக் கதைகளின் இடையில் பாலகுமாரனின் "உடையாரும்", ப்ரபஞ்சனின் "வானம் வசப்படும்" நாவலும் மிகவும் ஆறுதல் தான்....