BSNL-ம் அற்புத ‘சுக’மும்.
இரண்டாவது ‘சுக’ அனுபவம் இது.
[சுக=சும்மாவே கடுப்பேற்றுவது. முதல் கடுப்பு இங்கே: ஊருக்குப் பழி நேர்ந்தால்உனக்கின்றி எனக்கில்லை]
BSNL குறித்து இரு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். இந்தக் கவிதைக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தம் இல்லை. எனினும், ’கம்பியிலா அகண்ட அலைவரிசை’ இல்லையெனில் சற்று சிரமம் தான்.
இணையத்-தொடல்"
அருகில் இருந்தால் மட்டுமா..
'நினை விட்டுவிட்டுப்
பல லீலைகள் செய்து - நின்
மேனி தனை விடலின்றி'?
நினைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு - பல
கதைகளும் பேசி - நின்
"இணையத்-தொடல்" விடலின்றி...
படித்துத் தான் பாரேன் - நேற்று
பேசிக்கொண்ட மின்பேச்சுகள்
மொத்தமும்..
கூடிக் களித்த இரண்டாயிரத்து
நானூற்று அறுபத்தி ஆறு வரிகளையு ம்
கூட்டிக் கழித்துப் பார்க்கையி ல்,
நூறுக்கு மேல் தேறவில்லை
சரி, கெளம்பறேன்... இரு...
என்றவற்றை விடுத்து.
-----------------------------------------------------
A) இரண்டு மூன்று நாட்களாகவே இணையத் தொடர்பு சிறு கள்ளி-குற வள்ளி என, விட்டுவிட்டுப் பல லீலைகள் செய்தபடி இருந்தது. இழுத்துக்கொண்டிருந்த அது இன்று காலை (11.11.11) முற்றிலும் ‘லோகோஸி’ ஆகிவிட்டபடியால், புகாரைப் பதிவு செய்யவேண்டி வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தேன். அது ஸ்பெக்ட்ரம் பணம் போல ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு வழிந்தோடி கடைசி முகவரியில் அப்படி ஒரு நிறுவனமே இல்லையெனுமாப்போல் முடிந்தது. மீண்டும் சேவை மையத்தை அழைத்து, இது பற்றிச் சொன்னேன். எனக்குத் தெரிந்த ஒரு JTO-வை கேட்டதில், அவர் சொன்னது:
- ஒரு மோடத்தின் செயல்திறனுக்கான உத்தரவாதம் இரண்டு ஆண்டுகள் தான்.
- BSNL-லிடம் மாற்றித் தருவதற்கான புதிய மோடங்கள் கையிருப்பு இல்லை.
- வாடிக்கையாளார் சேவை மையத்தை அணுகி, ரூ.1000 விலையில் புதிய மோடம் பெற்றுக்கொள்ளலாம். அவர்களே நிறுவித்தருவார்கள்.
1. எண்களை சுழற்றி (ஒற்றி) அலைந்ததையும், எனக்கும் சேவை மைய உதவியாளருக்குமான உரையாடலையும் பதிவு செய்தேன். கேட்டுப் பாருங்கள். ஸ்வாரஸ்யமான, சில நிமிடங்கள் அவை.
B) சிக்னல் இல்லை என்ற வழக்கமான பிலாக்கணம் இல்லை; இது Value Added Service என்ற பெயரில் நடக்கும் கொள்ளையால். என்னிடம் WiFi இருக்கிறது. வீட்டிலிருக்கும் சமயங்களில் என் iPhone-ல் இருந்து WiFi-ல் கனெக்ட் செய்து மின்னஞ்சல் பார்ப்பதற்கு என் அக்கவுண்ட்டில் இருந்து பணம் ஸ்வாஹா ஆகிக்கொண்டிருந்தது. இது பற்றி பல உயரதிகாரிகளிடம் சொல்லியும் அவர்கள், இது ’மதிப்புக் கூட்டுச் சேவை’ என்றும் அதை நிறுத்த முடியாது என்றும் சொன்னார்கள். தெருவில் போகிறவன் சட்டைப் பையில் கைவிட்டுப் பணத்தைக் கொள்ளையடிப்பது போல இருக்கிறது என்றும் கூறினேன்.
ஏற்கனவே, broadband சேவையைப் பெறுவதற்காக பணம் தான் மாதா மாதம் செலுத்துகிறேனே, இது என்ன முறையற்ற வழி? யாருக்கு வேண்டுமோ அவர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அந்த வசதியைப் பணம் செலுத்தி (அவர்கள் கணக்கின் இருப்பிலிருந்தே) பெற்றுக்கொள்ளுமாறு தானே இருக்கவேண்டும் என்றும் கேட்டேன். ப்ரயோஜனமில்லை.
MNP-யில் ஏர்டெல்லுக்கு மாறிவிட்டேன். அங்கும் இதே கதை நடந்தது. திருப்பதி கச்சேரிக்காக ஒரு நாள் வெளியூர் பயணம். எனவே, ஐந்து ரூபாய்-இரண்டு நாட்கள் அல்லது ஐம்பது MB browsing என்ற சேவையை *555*2# டயல் செய்து பெற்றுக்கொண்டேன். ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகும் என் இருப்பிலிருந்து பணம் எடுத்துக் கொண்டேயிருந்தார்கள். அதே WiFi கதை தான். சேவை மையத்தை அழைத்து, நான் பணம் கட்டியது இரண்டு நாட்களுக்குத் தான், ஆனால் அதற்கும் அதிகமாக ரூ.45 என் கணக்கில் நாளதுவரை (29 அக்டோபரிலிருந்து 7 நவம்பர் வரை) எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்ததும், அந்தப் பணத்தை மீண்டும் என் கணக்கில் வரவு வைத்தார்கள். சொன்னால் கவனிக்கிறார்கள் என்று சந்தோஷப்பட முடியவில்லை. நான் வேலைப் பளுவில் இதையெல்லாம் கவனித்திருக்காவிடில், இது எனக்கு அனாவசிய நஷ்டம்; அவர்களுக்கு இலவசக் கொள்ளை தானே?
சென்ற வாரம் மைசூர்-பெங்களூரு சென்ற போதும், இதே கதை நடந்து, ரூ.100க்கு இரண்டு முறைகள் recharge செய்யவேண்டி வந்தது. அந்த எண்ணுக்கு வந்த incoming அழப்புகளே மூன்று தான்; அதுவும் மொத்தம் ஐந்தே நிமிடங்கள்! என்னுடைய இருப்பு ரூ.4.20 என்று காண்பித்தது. மீண்டும் சேவை மையத்தை அழத்துப் பேசிய’தில்’, அது இரண்டு மேலதிகாரிகளைத் தாண்டிச் சென்று, ரூ.130 என் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
அவர்கள் சொன்னது:
1. ஐந்து ரூபாய் இண்ட்ர்நெட் ஒரு நாளைக்குத் தான் வரும். அந்த இரண்டு நாள் offer மாறிவிட்டது. (இல்லை, பார்க்க படம்)
2. அது முடிந்ததும் அதுவாகவே deactivate ஆகிவிடும். (ஆகவில்லை)
1. ஐந்து ரூபாய் இண்ட்ர்நெட் ஒரு நாளைக்குத் தான் வரும். அந்த இரண்டு நாள் offer மாறிவிட்டது. (இல்லை, பார்க்க படம்)
2. அது முடிந்ததும் அதுவாகவே deactivate ஆகிவிடும். (ஆகவில்லை)
3.உங்கள் விஷயத்தில் அப்படி ஆகாமல், GPRS planக்கு மாறிவிட்டது. இனி ஆகாமல் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் *222# டயல் செய்து இனிமேல் இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்களும் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஈரோடு நாகராஜ்.
ஹும், எங்கே போனாலும் இதேகதை தான். டாடாவோடு பட்ட கஷ்டத்துக்கு இது பரவாயில்லையோ?? இப்போ பிஎஸ் என் எல்லுகு மாறியாச்சு. கொஞ்சம் பரவாயில்லை ரகம். ஆனால் மேற்சொன்ன காரணங்களுக்காகவே மொபைலில் இணைய இணைப்புப் பெற்றுக்கொள்ளவில்லை. பலருக்கும் இதே அநுபவம். எல்லா சேவைதாரர்களும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான். :P
ReplyDelete