Thursday, August 12, 2010

from orkut - mahA periyavA community


Saturday, June 28, 2008

1. அம்மாவும் அப்பாவும் கல்யாண நாளை முன்னிட்டு (30-3-08) தேனம்பாக்கம் பாடசாலை, காஞ்சிபுரம் அதிஷ்டானம் மற்றும் ஒரிக்கை மணி மண்டபம் ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று வந்தனர். ம்யூசிக் அகாடெமி annual exam இருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை.

வந்ததும், பிரசாதமாக ரோஜா இதழ்களும் துளசியும் வில்வ இலைகளும் சாப்பிட்டேன். பின்பு, பெரியவா படத்திற்கு ஹாரத்தி பண்ணும்போது... சற்று மேலே கை உயரும்போது பெரியவாளின் படம், நான் இதுவரை அறிந்திராத ஒன்றை ஸ்புரிக்கச் செய்தது...

சிவலிங்கம் அருகில் பெரியவா... அப்போதுதான் புரிந்தது....

தேனம்பாக்கத்தை சிவாஸ்தானம் என்று கூறுவர். அங்கு ஸ்வாமிக்கு வேதபுரீஸ்வரர் என்று பெயர். தக்ஷிணாமூர்த்தியும் உண்டு. பெரியவாள் 70 களில் தேனம்பாக்கத்தில் தவமியற்றி அருள்பாலித்ததை விவரிக்கையில், "பெரியவா சிவாஸ்தானத்தில் இருந்தபோது..." என்று தான் சொல்வார்கள்.

சிவ - என்றால் ஈசன். சிவா - என்றால் அம்பாள். ஈசன் ஆட்சி புரியும் தேனம்பாக்கத்தில், சிவா - அம்பாள் ஸ்தானத்தில் பெரியவா.

சென்ற முறை காயத்ரி வெங்கட்ராகவனுக்கு வாசிக்க காஞ்சிபுரம் சென்றிருந்தபோது, அன்னதான சத்திரத்தில் இருந்து முதலில் காமாக்ஷி கோயிலுக்கு அழைத்துச் சென்றார் ஸ்ரீ T.V.S. சாரி மாமா. வீல் சேர் கொண்டு போயிருந்ததால் நானும் சென்றேன். அனேகமாக எல்லோருமே, "நாகராஜன்.. இவ்ளோ தடவை மஹா பெரியவாளை தரிசனம் பண்ணீருக்கேள்... காமாஷியை வந்து தரிசனம் பண்ணினதில்லையா?" என்று ஆச்சிரியமாய்க் கேட்டார்கள்.

ஒரு நிலைக்கு மேல் வீல்ச்சேரில் செல்ல இயலவில்லை. அங்கிருந்து தவழ்ந்து உள்ளே சென்று அருகில் அம்பாளை தரிசித்துவிட்டு, பின்பு அதிஷ்டானத்தில் கச்சேரி வாசித்தேன்.
நிகழ்ச்சி முடிந்ததும், அதிஷ்டானத்தில் பிரசாதம் கொடுக்கும்போது, சந்திரமௌலி, பெரியவாளிடம் இருந்து எல்லோருக்கும் படம் கொடுத்தார்.
அது....

பெரியவாள் சிரித்தபடி அமர்ந்திருக்கும் படம்.
கையில் கரும்பு மற்றும் காமாக்ஷியின் ஆபரணங்களுடன்...

3/11/09
delete

invisible Erode Nagaraj... 

2. "சக மனிதனாக இருந்த ஸ்வாமிநாதன்....."

இன்று காலை, பெரியவாள் பல்லக்கைத் திறந்ததும் மனதில் இந்த வரி தான் ஓடியது.

காரணங்கள் ஏதுமின்றி,
எண்ணக் குவியல்களை திடுமென எதுவோ கிளறி,
மேலெழுந்து ஆர்ப்பரிக்கும்....
தோன்றித் தோன்றி மறையும்....
வினாடிகளில் வாழ்ந்து மடியும் ஒற்றை வரிகள்.

யோசிக்கையில், பொருத்தங்களை மனது அமைத்துக்கொண்டது.

அத்வைதம் சொல்லுகின்ற, அடியார்க்கருளுபவன், பள்ளியிலே பயின்றதுவும் இரண்டிலா இன்பம் தான். ஒன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாவதிற்கு, "அஞ்சிலே ஒன்றைத் தாவியவன், இந்த "ஸ க ம நி த ஸ்(வாமிநாதன்)".

ஒன்றைத் தாவியதால், ஐந்தையும் கடந்தவன்- கடுந்தவன்.

(பஞ்ச பூதங்கள் ஐந்திலே, ஒன்று நீர். ஒட்டும் தன்மையுடையது. நெருப்பை அணைத்தாலும், ஒட்டுதலால் பற்றிக் கொள்ளும். அதனால் தான், தாமரையிலைத் தண்ணீர் போல எனக்கூறுகிறோம். பற்றற்ற தன்மையால், ஐம்புலன்களையும் வெல்லுதல்).

ஹிந்தோளத்தின் ஸ்வரம் இது. இரண்டாவது (த்வைதம்) ஸ்வரமான 'ரி' இல்லை. க்ரமமான ஐந்தில்(ஸ்வரங்களில்) ம த நி என்பதில், 'ம'வில் இருந்து ஒன்றைத் தாவி, 'ம நி த'னானவன் - நான்-அவன்" (தத்வமஸி) என்றானவன்.
இரு கால்கள் கொண்டதால், ஸ்வாமிநாதன். முக்காலும் உணர்ந்ததால் "ஸ்வாமி-நா-தான்."

"அஹம் பிரம்மாஸ்மி" என்றறிந்தவன் - ஆதலால், அருந்தவன்.
அருந்தவன் ஆனதால் பருகுதற்கினியவன்.
தருவதற்கினியென்ன
தஞ்சம் அடைந்த பின்...
தருணங்கள் தேவையில்லை,
தருமூலன் தயை வேண்ட.

Mar 12
delete

invisible Erode Nagaraj... 

காஞ்சி மஹா பெரியவாள் ஒரு முறை, தரிசனத்துக்கு வந்தவாளை பாத்து.....

"இப்போ இங்கேந்து போறானே, அவன் பேர் என்ன தெரியுமோ ? ஸ்ரீ கண்டன். ஆனா, அப்படிச் சொன்னா, சர்க்காருக்கு விரோதமா ஆயிடும்.....

ஏன்னா, இனிமே "ஸ்ரீ"ன்னு சொல்லபடாது, "திரு"ன்னு தான் சொல்லணும்னு சர்க்கார் உத்தரவு.....

ஸ்ரீன்னா, லக்ஷ்மி-ன்னு மட்டும் நெனச்சுண்டு, அத திருன்னு மாத்தறா....ஆனா, பாம்புன்னு ஒரு அர்த்தம் உண்டு, அதனால தான் ஸ்ரீகண்டன் ன்னு பேரு...

ஸ்ரீகண்டன்னா, லக்ஷ்மிய மார்ல வெச்சுண்டிருக்கற பெருமாள் இல்ல.... அத கழுத்துல போட்டுண்டு இருக்கும் சிவன் தான் ...அது தெரியாம, ஸ்ரீன்னாலே லக்ஷ்மி தான்னு மாத்தீருக்கா...."

சற்று அமைதிக்குப் பின், சிரித்தபடி.....

"இவன் ஸ்ரீ கண்டனோ .... திருக்கண்டனோ தெரியாது....
ஆனா இவன் திருடன்....."

சற்று இடைவெளி விட்டு.....

"இவன் மட்டுமில்லே, நீங்க எல்லாருமே திருடர்கள்.... [ ]

ஸ்ரீமான் ஸ்ரீநிவாசன் இப்படி எல்லாத்தையுமே, சீமான் சீனுவாசன்னு தானே தமிழ்ல சொல்றோம்? அப்போ, ஸ்ரீ - சி எல்லாம் ஒண்ணு தானே? அதனாலே நீங்கள்ளாம், என் சீடர்கள்..... அதாவது, திருடர்கள்....."

Mar 12
delete

invisible Erode Nagaraj... 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சம்ஸ்க்ருதப் பண்டிதர் ஒருவர் எனது நெருங்கிய நண்பர். சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் எழுதும் வல்லமை பெற்றவர். அவர் சொன்ன ஒரு நிகழ்ச்சி:

வெகு நாட்களுக்கு முன், தஞ்சாவூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் பெரியவாள் முகாமிட்டிருந்த சமயம். சந்த்ரமௌலீஸ்வரர் சன்னதியில் தீப நமஸ்காரங்கள் முடிந்ததும் அங்கு குழுமியிருந்த மாணவர்களை ராம நாமத்தையும், சிவ நாமத்தையும் சொல்லச் சொன்னார் பெரியவர். குறிப்பாக அவர் ஒரு மாணவனை அழைத்து 'ராம ராமா' 'சிவ சிவா' என்று சொல்லச் சொன்னபோது, சுற்றி இருந்தவர்கள் அப்பையனை பிறவி ஊமை என்றனர். ' அதனாலென்ன? பையன் சொல்லட்டும்' என்று பெரியவாள் சொல்ல, பையன் ராம நாமத்தை சொல்ல ஆரம்பித்துவிட்டான் .

இதைக் கண்ட என் ஆந்திர நண்பர். " எந்த மகானை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாதோ, எந்த மகானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ அந்த சந்திரிகா மௌலீ ஆன என் குருநாதனை நமஸ்கரிக்கிறேன்" என்று சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் எழுதினார். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், அதுவரை அவர் சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகமே எழுதியதில்லையாம். 


- டாக்டர்.ஆர்.வீழிநாதன் (மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் - ஆறாம் தொகுதியிலிருந்து )


Mar 12
delete

invisible Erode Nagaraj... 

பார்ப்பதற்கு ரொம்ப நல்ல பாட்டியாகத்தான் தென்பட்டாள். வெள்ளை வெளேரென்று புடவை. நெற்றி நிறைய திருநீறு. கழுத்து கொள்ளாமல் ருத்ராக்ஷ, ஸ்படிக மாலைகள். பெரியவாளை வெகு வினயமாகப் பணிந்து எழுந்தாள்.

பெரியவாள், ஒரு தொண்டரிடம் சமையல்கட்டிலிருந்து நூறு எலுமிச்சம்பழம் கொண்டுவரச் சொன்னார்கள். ஒரு தட்டில் அவைகள் வந்தன.

"அந்தப் பாட்டிகிட்ட குடு"

பாட்டிக்குத் திகைப்பு. பிரசாதம் என்றால், ஓரிரு பழங்கள் போதுமே.... நூறு எதற்கு? 'எனக்கு ஏன் இத்தனை பழங்கள்?' என்கிரார்ப்போல் பார்த்தாள் பாட்டி.

"நீ... நிறைய எலுமிச்சம்பழம் காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு... துர்தேவதையை ஆவாஹனம் பண்ணி, பல பேர் வீட்டிலே வைத்து, அவர்கள் குடியைக் கெடுக்க வேண்டியிருக்கு.. இந்தப் பழத்தை அள்ளீண்டு போ... உனக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும்..." என்று பொரிந்து தள்ளினார் பெரியவா. அவளோ, தான் ஒரு பில்லி-சூனியக்காரி என்று பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது என்று திடுக்கிட்டுப் போனாள்.

அழுதுகொண்டே நமஸ்காரம் செய்தால்; மன்னிப்பு கேட்டாள்.

"உனக்குத் தெரிந்த துர்தேவதை மந்திரங்களை, ஒரு பசு மாட்டின் காதில் சொல்லிவிட்டு, மறந்துவிடு. இனிமேல் பில்லி-சூன்யம் வேண்டாம். அதனால் வருகிற பணமும் வேண்டாம். பகவன் நாமா சொல்லீண்டிரு..."

பின்னர் பாட்டிக்கு விபூதிப் பிரசாதம் மட்டும் கொடுத்தார்.



(மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் - ஆறாம் தொகுதியிலிருந்து )

8 comments:

  1. ஹிந்தோளத்தின் ஸ்வரம் இது. இரண்டாவது (த்வைதம்) ஸ்வரமான 'ரி' இல்லை. க்ரமமான ஐந்தில்(ஸ்வரங்களில்) ம த நி என்பதில், 'ம'வில் இருந்து ஒன்றைத் தாவி, 'ம நி த'னானவன் - நான்-அவன்" (தத்வமஸி) என்றானவன்.
    இரு கால்கள் கொண்டதால், ஸ்வாமிநாதன். முக்காலும் உணர்ந்ததால் "ஸ்வாமி-நா-தான்."//

    aaaaahaa enna arumaiyana vilakkam. kanneer vanthu vitathu. romba nala kanomenu ninaichen. muthu kulichirukinga! muthu apurvama thane kidaikkum. ithu nal muththu. Thanks a lot.

    ReplyDelete
  2. sorry for thanglish. this is windows 7 and e kalappai is not working. downloaded google transliterater ime but it also did not working. will check it.

    ReplyDelete
  3. சரியாயிடுச்சு. தமிழ் வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்

    ReplyDelete
  4. மிகுந்த மகிழ்ச்சி....

    ReplyDelete
  5. 2
    நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த "பெரியவா படத்தை" நாங்களும் தரிசிக்க எதுவாக ,இங்கு பிரசுரிக்க வேண்டுகிறேன்
    நன்றிகள் கோடி

    ReplyDelete
  6. அன்புள்ள நாகராஜா!
    தாமதத்திற்கு மன்னித்துவிடு!
    காமாட்சி அம்மனோட பெரியவா தரிசனம்
    கொடுக்கிற படம்! மறக்கமுடியுமா?
    உன்னோட அழகான,இயல்பான,பாந்தமான
    எழுத்தை நன்னா ரசிக்கிறேன்.
    சொல்லுக்குள் வித்தை காட்டறவன் நீ!
    நிதானமா படிச்சு பார்க்கணும் உன் வலைப்பூவை!
    படிச்சூட்டு இன்னும் எழுதறேன்.ரொம்ப நன்றி ப்பா.

    அன்புடன்,
    தங்கமணி(பாட்டி)

    ReplyDelete
  7. நல்ல அனுபவக் கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. Maha Periyava Thiruvadiye Saranam
    Kaliyuga Deivame Saranam

    ReplyDelete