Thursday, August 13, 2009

நேற்றைய பதிவிற்கு ஒரு பின்னூட்டம்...

நான்கு சக்கரங்கள்
இயக்குபவை இரு கரங்கள்
சக்கரங்கள் கூறிவிடும்
சமூகத்தின் (வி)சம நிலைகள்.

சக்கர வண்டிகள் ஒவ்வொன்றும்
சந்தோஷத்தின் சின்னங்கள்
குந்தியிருக்கும் குழந்தைகளுக்கும்
குதித்தேற முடிந்தவர்களுக்கும்.

சீரான அளவின்றி
சிறியதும் பெரியதுமாய்
முன்னும் பின்னும் வெவ்வேறாய்
முடைந்து வைத்த சக்கரங்கள்.

முன்னிரண்டு சக்கரங்கள்
முக அளவில் சிறியவைகள்.
பின்னிரண்டு உள்ளவையோ
பிஞ்சல்ல, மா மரங்கள்.

ஏதேனும் குறைவு
எங்கேயோ மிக அதிகம்
இந்தவொரு விகிதம் தான்
இன்றளவும் இதன் நிலைகள்.

ஆஸ்த்மா வந்துவிட்ட ஆரோக்யசாமிகள்
தகரத்துக்கே தடுமாறும் தங்கப்பொண்ணுகள்
பிச்சையெடுத்து வாழுகின்ற லக்ஷ்மிபதிகள்
மண்டுகளாய்க் காலந்தள்ளும் மதியழகன்கள்
இருட்டினாலே பதுங்கிவிடும் வீரமணிகள்
தமிழைக் கொலை செய்யும் தேன்மொழிகள்
ஒட்டிய வயிற்றுடன் ஓதுகின்ற கனபாடிகள்

பெயர்களில் உள்ளதெல்லாம்
வாஸ்தவத்தில் இல்லாதிருக்க,
சக்கர வண்டிகள் மட்டும்
விதிவிலக்காய் இனித்திடுமா...


(இதற்குப் பிறகும் எழுதினால், விஷயம் முடிஞ்ச பிறகும் பேசீண்டே இருக்கற மாதிரி இருக்கும்...)

2 comments:

  1. ஈரோட் நாகராஜ் சார்...

    ரொம்ப நல்லா எழுதறீங்க.....

    அதிலும் இவ்வரிகள் வைரவரிகள் அய்யா, வைரவரிகள்

    ஆஸ்த்மா வந்துவிட்ட ஆரோக்யசாமிகள்
    தகரத்துக்கே தடுமாறும் தங்கப்பொண்ணுகள்
    பிச்சையெடுத்து வாழுகின்ற லக்ஷ்மிபதிகள்
    மண்டுகளாய்க் காலந்தள்ளும் மதியழகன்கள்
    இருட்டினாலே பதுங்கிவிடும் வீரமணிகள்
    தமிழைக் கொலை செய்யும் தேன்மொழிகள்
    ஒட்டிய வயிற்றுடன் ஓதுகின்ற கனபாடிகள்

    வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  2. நண்பர் கோபியை நான் வழி மொழிகின்றேன்.
    மிகவும் நன்றாக அமைந்து விட்டன அவ்வரிகள்.
    சபாஷ் நாகராஜ்.

    ReplyDelete