ஹரிகேசநல்லூர் ஸ்ரீ முத்தையா பாகவதர் இயற்றி வழங்கி, மதுரை ஸ்ரீ மணி ஐயர் அவர்களால் மிகவும் ப்ரபலமடைந்த இங்க்லிஷ் நோட் எனும் ஸ்வரக்கோவை கேட்டிருப்பீர்கள். உமையாள்புரம் சிவராமன் சார் என்னை அதற்கு ஸாஹித்யம் எழுதுமாறு சொன்னார். அது இம்மாதம் ஸ்ரீ க்ருஷ்ணகான சபாவில் Athmaa Speaks எனும் நிகழ்ச்சியில் அரங்கேறியது. அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். குறைகளை மன்னிக்கவேண்டும்.
நீ அருள்புரி ஸ,த,தம், நானிலம் ம,கி,ழட்,டும்,
தேனெனவரும் தெள்ளமுதமே வா
நீ அருள்புரி ஸததம் நானிலம் மகிழட்,டும்,
தேனெனவரும் தெளியமுதமே வா
நீ,,,, ல, மலையில் கை லாஸ சிகரத்தில்
நீ,ல கண்,ட னே ஸ்ரீ, சிதம்பர நடராஜனே
மஹேஸா - உனை உணர்ந்து
அத்வைத ஆனந்தம் சித்திக்க ஈசனே சரண,டைந்தேன் ஸர்வேஸா – நினை சரண, டைந்தேன் ஸர்வேஸா
நீ,ல கண்,ட னே ஸ்ரீ, சிதம்பர நடராஜனே
மஹேஸா - உனை உணர்ந்து
அத்வைத ஆனந்தம் சித்திக்க ஈசனே சரண,டைந்தேன் ஸர்வேஸா – நினை சரண, டைந்தேன் ஸர்வேஸா
தாமரைமலர் அணி பரமனே வா – செந்
தாமரைமலர் அணி பரமனே வா
நீ வருகையில் நிலம் குளிர்ந்தது வான் பொழிந்தது
வளம் செழித்தது தாமரைமலர் அணி பரமனே வா
மா….னொரு மழுவும் கை யே,,,,ந்தி டமருகமும்
சூலம் வன்புலித் தோலும் அசைத்து
குமரன்தன் தந்தையே வா கனி வென்றிட்ட
மோதக ஹஸ்த ஸாமர கர்ண கண ப, தி, யு, ட, னே, வா,, - கனிகழைநுகர் கண ப, தி, யு, ட, னே, வா,,
அன்னை உமையும் அருகில் இருக்க
கஜமுகனுடன் குஹனும் திகழ
நந்தி த்வனிக்கும் நாதங்களில் - தரிதகஜம் கிடதகணம்
என நடனம்புரிவாயே
சூலம் வன்புலித் தோலும் அசைத்து
குமரன்தன் தந்தையே வா கனி வென்றிட்ட
மோதக ஹஸ்த ஸாமர கர்ண கண ப, தி, யு, ட, னே, வா,, - கனிகழைநுகர் கண ப, தி, யு, ட, னே, வா,,
அன்னை உமையும் அருகில் இருக்க
கஜமுகனுடன் குஹனும் திகழ
நந்தி த்வனிக்கும் நாதங்களில் - தரிதகஜம் கிடதகணம்
என நடனம்புரிவாயே
முனிபுங்கவரும்.. ஜய ஸங்கரரும்.. தினம் நினைந்தவரும்..
தலை வணங்கிவரும்
முனிபுங்கவரும் - மாமுனி ஸங்கரரும் – அனுதினம் நினைந்தவரும்… தலை வணங்கிவரும்
முனிபுங்கவரும் மஹனியகுரு சங்கரரும் அனுதினமுன்னை நினைந்தவரும்
அருளிறையெனவணங்கிவரும் ,, பார்
,வதிபர மே,ஸ்வராகரம் குவித் துனைப் பணிந்தேன் ,, நாரணன் ஸோதரி
பார் ,வதிபர மே,ஸ்வராகரம்குவித் துனைப் பணிந்தேன்..
ஞானசம்பந்தர் ஸுந்தரர் அப்பர்
வாசகம் சொன்ன மாணிக்கமென
அருளிறையெனவணங்கிவரும் ,, பார்
,வதிபர மே,ஸ்வராகரம் குவித் துனைப் பணிந்தேன் ,, நாரணன் ஸோதரி
பார் ,வதிபர மே,ஸ்வராகரம்குவித் துனைப் பணிந்தேன்..
ஞானசம்பந்தர் ஸுந்தரர் அப்பர்
வாசகம் சொன்ன மாணிக்கமென
நால்வ ரும்,து திக்,கும் ஹரனே நாயகனே, நம் ப்ரம்மனெனும்
நான் முகன்ஸதி ஸோதரனே ஈசன் மாலயனே நேசன்
அன்பினிலே நீந்திவரும் - நெஞ்சிலுறை நாமம் மறவேன்
நாளும் சிவமே நாதனே நமஸிவாயனே
நான்மறை ஓதும் நல்,லறிவே,,,
ஞானத்தின் மோனப் பொருளே நன்மையை நல்கிடும் – அக்
காரிகையுமைகரமுடையனே வா
கா,,,ரெனுமக்ஞானம் தீ,,,,ருமே இந்நேரம்
காரிகையுமைகரமுடையனே வா
ஞானத்தின் மோனப் பொருளே நன்மையை நல்கிடும் – அக்
காரிகையுமைகரமுடையனே வா
கா,,,ரெனுமக்ஞானம் தீ,,,,ருமே இந்நேரம்
காரிகையுமைகரமுடையனே வா
வான்… நதி கங்,கை,யும், சூ,,டிய நி,ல,வொ,டும் காக்கும் வெண்பனிக் கைலாஸ வாஸனே கதியெ,ன, வந்தடைந்தேன் - அஜபா நடனத் தாரூர் ஐயனே ஆதி சிவனே
ஆனந்தம் நிலவட்டுமே – எங்கும்
ஆனந்தம் நிலவட்டுமே - அகிலம் எங்கும்
ஆனந்தம் நிலவட்டுமே.
ஆனந்தம் நிலவட்டுமே – எங்கும்
ஆனந்தம் நிலவட்டுமே - அகிலம் எங்கும்
ஆனந்தம் நிலவட்டுமே.