http://www.youtube.com/wat ch?v=C21G2OkHEYo
(u fill up my senses, like a night in a forest...)
கானகத்தில் கலந்து நிற்கும்
காற்றாகிக் காரிருளும் போல...
வருடுகின்ற வசந்தத்தை
வாங்கிக்கொள்ளும் மலைகளென,
மழை நாளின் மகிழ்வானதொரு
மாலைக் காற்றில் நடையாக...
மணற்துகளை மலையாய்க் குவித்து
மூச்சடைக்கும் பாலைப் புயலென,
நீண்டு கிடந்து நீலமாய்,
நீங்காத அலைகளின்றி
நீள் விழிகள் இமை மூடிக்
கண்ணயர்ந்த கடலாக...
நீ நிறைக்கிறாய்; நீரிறைக்கிறாய்.
வா...
வந்து நிரப்பிவிடு - என்
ஜீவக் கலயங்களை
மற்றொரு முறை கூட,
மீண்டும் மீண்டும் சுவாசம் போல்
மீளாது காதல் செய்ய.
(u fill up my senses, like a night in a forest...)
கானகத்தில் கலந்து நிற்கும்
காற்றாகிக் காரிருளும் போல...
வருடுகின்ற வசந்தத்தை
வாங்கிக்கொள்ளும் மலைகளென,
மழை நாளின் மகிழ்வானதொரு
மாலைக் காற்றில் நடையாக...
மணற்துகளை மலையாய்க் குவித்து
மூச்சடைக்கும் பாலைப் புயலென,
நீண்டு கிடந்து நீலமாய்,
நீங்காத அலைகளின்றி
நீள் விழிகள் இமை மூடிக்
கண்ணயர்ந்த கடலாக...
நீ நிறைக்கிறாய்; நீரிறைக்கிறாய்.
வா...
வந்து நிரப்பிவிடு - என்
ஜீவக் கலயங்களை
மற்றொரு முறை கூட,
மீண்டும் மீண்டும் சுவாசம் போல்
மீளாது காதல் செய்ய.