சமீபத்தில் கிடைத்த வீடியோ...
http://www.youtube.com/watch_popup?v=qULppTsu_Xc
Wednesday, November 25, 2009
actually it is a korvai...
rhythm video some more fun...
https://youtu.be/KB-KbkNoCtE
will you be there love..
when I need your heart
my... love is eternal, true..
from the roots of my soul....
life is indefinite, dry...
if you say me a no...
let the drizzles flow...
lit the tulips (two lips) glow..
see the life is small..
say "love", make a call...
let us enjoy them all.
தாதரும் மும்பை மயிலும்... 3
நீண்ட பயணங்களின் வெறுமை எல்லோருக்கும் பொதுவானது தான். அதை எப்படி எதிர்கொள்வது என்பதில் தான் மனிதர்கள் ஸ்வாரஸ்யமானவர்களாகி விடுகிறார்கள்.
நிற்கின்ற ஊரிலெல்லாம் விற்கின்றவரைத் தேடும் கண்கள், கைபேசியிலோ கணினியிலோ தங்களைத் தொலைக்க முயன்று, அந்த எட்டு பேரில் யாரைப் பார்த்துச் சிரிப்பது என்று யோசித்தே ஒரு பகலைக் கடக்க முயல்பவர்கள், பேப்பரோ புத்தகமோ தாங்களாகவே தந்து, தன்னைக் கவர்ந்த செய்தியைப் பேசி-விவாதிப்பவர்கள், குழந்தைகளைப் பார்த்துச் சிரித்து நட்புகொள்ள ஆரம்பித்து, பின் திரும்பி உட்கார்ந்து உண்பவர்கள், மேல் படுக்கையை விட்டு இறங்காது தன்னைத் தானே சந்தோஷப்படுத்திக்கொள்ள முயலுபவர்கள், மேல் படுக்கையில் படுத்தபடி, பாதைப் பக்கம் தலை வைத்து வருவோர் போவோரை ஆராய்பவர்கள், துக்கச் செய்தி கேட்டு மனம் முன்பே இடம் சென்று சேர்ந்திருக்க, உடல் தாமதமாய்ச் செல்லும் வலியில் இருப்பவர்கள், எந்த ஊரில் நின்றாலும் இறங்கி நிற்கும் மண்-காதலர்கள், சஹ பயணியைத் தாற்காலிகமாகக் காதலிப்பவர்கள், இறங்க வேண்டிய ஊருக்கு வெகு நேரம் முன்பே பரபரப்பவர்கள், இப்படி எல்லாம் வலைப் பக்கங்களில் எழுதவேண்டி யோசித்தே, பொழுதைக் கழிப்பவர்கள் என்று எத்தனையோ எண்ணக்குவியல்கள், கற்பிதங்கள் வண்ணமிகு ஆடைகளுக்குள் உடல்களை மறைத்து விட்டு வேறு பெயர்களில் பயணச்சீட்டையே ஆவணமாய் வைத்துக்கொண்டு அந்த நேரத்து சொந்த இடத்தை ஆணவமாய் ஆக்ரமிக்கும் பயணங்கள்...
பகலில் உட்கார்ந்துகொண்டே தூங்கினேன். வந்த வழி ஞாபகமிருந்தது. துங்கபத்ரா சொத்துக் கணக்கைக் காட்டி விட்ட நீதிபதி போல் பல இடங்களில் பாறைகளாய்த் தெரிந்தது. மறைபொருள் காட்டுவதுதானே மந்த்ராலயம்... (அப்போ, வெள்ளமா தண்ணி ஒடீண்டிருந்தா என்ன சொல்லுவே? ஏதாவது சொல்லவேண்டியது தான், ஞானம் தளும்பி வழியறது பார், இங்க வந்தவாளோட மனசு மாதிரியே நிறைஞ்சு இருக்கு பார்னு எதாவது...)
கடலை விற்கும் பையன்கள் எவ்வளவு வியாபாரம் ஆகியிருக்கிறதென்று நான்கு பேராய் உட்கார்ந்து பணத்தை எண்ணினார்கள்... பெரியவனாய் இருந்த, பானையில்-லஸ்ஸி விற்பவன் பர்சில் ஆதர்ச நடிகனின் படத்தை வைத்திருந்தான். சைடு பெர்த் முதியவர் யாரென்று கேட்டதும், தலைவனைப் பற்றி கேள்வி வந்த மகிழ்ச்சியில், ஜூனியர் என்.டி.ஆர்.என்று பெருமையுடன் அந்தப் படத்தை இன்னொருமுறை பார்த்தான். ஒரு நாள் வியாபாரத்திற்கான முதலீட்டையே அபிமான நடிகனின் ஒரு படத்தைப் பார்க்க செலவு செய்யும் பெருமிதம் தெரிந்தது.
கட்சி நிதி என்று ஏழையாய் இருக்கும் தொண்டனிடம் கூட, பணம் இல்லாட்டி என்னப்பா... அந்த வாட்சைக் குடேன் என்று, ஒன்றியமோ வட்டமோ கேட்க, தானைத் தலைவரின் உரை கேட்டு உணர்ச்சி வசப்பட்ட, சலவை கசங்கு முன் கையிலிருப்பதைக் கழட்டிக் கொடுத்தவரை என் பதின் பருவ ஆரம்பங்களிலேயே பார்த்திருக்கிறேன். "அடாது மழை பெய்தாலும் விடாது குவிகிறது கழக நிதி" என்று தூண்டில் போட்டதில், அன்று விற்ற பூக்காசை அப்படியே தொலைத்துவிட்டு, அடுத்த நாள் பெருமிதமாய் அந்தப் பேச்சின் கேசட்டை எனக்குப் போட்டுக் காட்டிய பூக்கடை பாய்க்கு நான்கு குழந்தைகள். பத்து வயதான பையன் நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டே இருப்பான்; அவனுக்கு உடலின் சமநிலையில் ஏதோ குறைவிருந்தது. அதற்கு வைத்தியம் பார்த்திருக்கலாம். இரண்டு பெண் குழந்தைகள் வேறு.
யுவதிகளிடம் யாரவது உன்னை எங்காவது இடித்து விடுவான் என்று கூறியே அணைத்துக் கொண்டு "பாதுகாப்பளிக்கும்" கிழவர்கள் போல, இல்லாதவர்கள், இல்(ill-குடும்ப)-ஆதவனை(சூரியனை) காலகாலமாக வழிபட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
அன்றிரவும், மொபைலை அணைத்துவிட்டு பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். ட்ரெயின் அஞ்சு மணிக்கு சென்ட்ரல் போய்டும் என்று அனுபவஸ்தர்கள் கூறியதால் நாலரைக்கு அலாரம் வைத்திருந்தேன். நல்ல உறக்கம்.
திடீரென ஒரு பரபரப்புச் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்ததில், சென்னை சென்ட்ரலுக்குள் நுழைந்து கொண்டிருந்தது இரயில். பலரும் இறங்குவதற்குத் தயாராக நின்றிருந்தனர். மிக மெலிதாக என் கைபேசியின் அலார ஒலி எங்கோ கேட்டது. நான், அருண், சந்திரன் அனைவரும் தேடினோம், சாத்தியமாகிற சகல சந்துகளிலும். கிடைக்கவில்லை.
பத்து நிமிடம் பொறுத்தால் திரும்ப சப்தமெழுப்பும் (snooze) என்று கூட காத்திருந்தோம். சுவிட்ச் off செய்திருந்ததால் அதுவும் இல்லை. நான் அமர்ந்திருந்த ஒன்றாம் எண் இருக்கையில் (S4) ஜன்னலுக்குக் கீழே, இருக்கைக்கை சேரும் இடத்தில் இரயிலின் உட்புறச் சுவற்றில் ஒரு பொந்து இருந்தது. காதில் சிம்மேந்திர மத்யமம் ஒலித்தது. அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்...
வண்டி நேரே ஓடுகையில், பக்கவாட்டில் ஆடுகின்ற ஆட்டத்தில் என் மொபைல் பையிலிருந்து நழுவி, அணைத்து வைத்திருக்கிறேன் என்பதை மறந்து சைலென்ட் மோடில் இருக்கிறோம் என்ற நினைவில், அதிர்ந்து அதிர்ந்து ஓட்டைக்குள் விழுந்திருக்க வேண்டும். அருணின் கைபேசியிலிருந்து வெளிச்சம் பாய்ச்சியதில் பூச்சி புழுக்கள் தெரிவதாகச் சொன்னான்.
விளக்குகளை அணைத்துக்கொண்டே வந்தார் ஒரு ஊழியர். "இத எடுக்கணும்னா அத ஓடைக்கணும்பா... நீ மொதல்ல எறங்கு, இந்த வண்டி இப்போ ஷெட்டுக்கு போகப் போகுது... ஆர்.பி.எஃப். ஆண்ட சொல்லு" என்றார். அங்கிருந்து வெளியே வந்ததில் நேரே அமர்ந்திருந்த மூன்று பெண் காவலர்களிடம் சொன்னேன். ஒரு பெண் தன் வாக்கி -டாக்கியில் ஏதோ தகவல் கொடுத்து ஆர்வமாய் ஏதோ சொல்ல முற்பட, இன்னொருத்தி, "ஒனக்கு ஏன் இந்த வேலை.. பேசாம இரு என்று சொல்லிவிட்டு, வாசல்ல சரவணபவன் மாடில கம்ப்ளைன்ட் குடுங்க, போங்க..." என்றாள்.
கடமை தவறாத காவலர்கள் எழுதிக் கொடுத்த புகாரில் இருந்த விவரங்களையே மீண்டும் மீண்டும் எழுதச் சொன்னார்கள். வாங்கிப் பார்த்துவிட்டு,
"பேர் எழுதுப்பா..."
'மேலே எழுதிருக்கு சார்...'
"அட்ரெஸ் எழுதுப்பா..."
'பேருக்குக் கீழ எழுதிருக்கு சார்'
"உன் நம்பர் எழுது..."
'எழுதிருக்கு சார்..'
"சரி, நீ போ, எதுனா தகவல் கெடச்சா சொல்றோம்..."
"சார், அந்த சந்துல விழுந்திருக்கு.. அத எப்படி எடுக்கறது, ஷெட்டுக்குப் போய் பாக்கனும்னா நீங்க ஒரு லெட்டர் குடுத்தாலோ, ஃபோன் பண்ணி சொன்னாலோ, அங்க பாக்கலாம்ல சார்..."
"நீ, வீட்டுக்கு போய் மத்யானத்துக்குள்ள, இந்த செல் வாங்கின பில்லு கொண்டு வா... அப்புறம் பார்க்கலாம்..."
"சார்.. அதுல முக்கியமான contact details , draft எல்லாம் இருக்கு..."
"அதெல்லாம் கஷ்டம்பா... எத்தனையோ பேர் டெய்லி செல்லத் தொலைக்கறாங்க... பில்லு கொண்டு வந்தா, அப்பிடியே இந்த ஐவி நம்பரோ ஆர்வி நம்பரோ இருக்குமே, அதையும் கொண்டு வரணும்.."
மேற்கொண்டு எதாவது கேட்டால், நீ நோக்கியா CEO , MD எல்லாரையும் கூட்டிண்டு வா என்பார் போலிருந்தது. என்ன கேட்டால், நான் அங்கிருந்து வாழ்க்கை வெறுத்து திரும்பி விடுவேன் என்று முயற்சித்துக் கொண்டிருந்தார். சரி, நமக்குத் தெரிஞ்சவா யாராவது இரயில்வேல இருக்காளான்னு பாப்போம் என்று வீடு அடைந்தேன். சிஷ்யனின் உறவினர் ஒருத்தர் Pathway Inspector ஆகா இருக்கிறார் இன்னொரு நண்பர் ICF-ல் இருக்கிறார் என்று காய் நகர்த்தியதில், அந்த இரயில் ராத்திரி எட்டு மணி வரைக்கும் அங்க தான் இருக்கும், ஈவனிங் போய் பாத்து இருக்கான்னு பாக்கலாம் என்று சொன்னார்கள்.
அதுவரை, காலத்தைக் கழிக்க மனமின்றி, என் மொபைல் தொலைந்து விட்டது, டியூப்ளிகேட் சிம் வேண்டும் என எழுதிக்கொடுத்து, 'இப்போ மூணு மணி, ஆறு மணிக்கு ஆக்டிவேட்டு ஆயிரும்' என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். சொன்னதில் பாதி நடந்தது. ஆக்டி ஆகவில்லை;வேட்டு ஆனது! Unregistered Sim என்று கூறிக்கொண்டேயிருந்தது.
அருண் கிளம்பி ஷெட்டுக்குப் போனான். "அந்த இரயிலா? அது பதினொரு மணிக்கே திரும்பி எக்ஸ்ப்ரஸ்ஸா பாம்பேக்கு போயிருச்சே... எதுக்கும் ஜிஎம்முக்கு ஒரு புகார் எழுதுங்க..." அன்று இரவு 'இதம் ந மம' என்று தெளிந்தேன். BSNL வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு தொலைபேசியதில், "சார்... ஒரு சிம் ஆக்டிவேட் ஆக 24 மணி நேரம் ஆகும், நீங்க பொறுமையா காலைல பாருங்க, அப்பாவும் வரலைன்னா, கூப்பிடுங்க" என்றனர்.
புதன் மாலையும், வியாழன் மாலையும் sms-கள் அழைப்புகளின்றி கழிந்தது. வெள்ளி காலை கூப்பிட்டபோது, உங்க சீரியல் நம்பர தப்பா டைப் பண்ணீட்டாங்க; இன்னிக்கு மதியானம் சரியாயிடும் என்றனர். மதியம் அழைத்ததும், மீண்டும் தவறான எண் அனுப்பிவிட்டோம், இன்று மாலை சரியாகும் என்றார்கள். வெள்ளி மாலை தான் தீனி கிடைத்தது standby மொபைலுக்கு. மூன்று நாட்களாக துருவக் கரடி போல் தூங்கிக்கொண்டிருந்தது.
வியாழன் இரவு கடைக்குப் போய், 5030 basic model ஒன்று வாங்கி வந்தேன்... இப்போது ஒவ்வொரு மெசேஜுக்கும் 'யாரடி நீ மோஹினீ ', 'ஏனுங்க நீங்க யாருன்னு சொல்லிபோட்டு போங்க' என்பது போல் எழுத்துக்களை அமுக்கிக் கொண்டிருக்கிறேன்...

Monday, November 23, 2009
தாதரும் மும்பை மயிலும்... 2
உறங்கச் சென்றபோது, கை பேசியை எங்கே வைத்துக்கொள்வது என்று யோசித்துவிட்டு, கால் சட்டைப் பையில் வைத்துக்கொண்டேன். குறுக்கு வாட்டில் வைத்ததும் German Shepherd-ஐப் பார்த்து stay என்று சொன்னதைப் போல், அமர்ந்துகொண்டது. குழந்தையை விட்டுவிட்டு சற்று வெளியே போகநேர்ந்தால் "கண்ணு... அம்மா வரவரய்க்கும் பொட்டாட்ட கோந்திருக்கோணும்...என்ன..." என்பார்கள் ஈரோட்டில்.
"மாமா, பேன்ட்டுல எல்லாம் வெச்சுக்காத... என்ட்ட குடு, மேல வெச்சுண்டு காலேல தரேன்" என்றான் அருண்.
"வேண்டாம், ஜாக்ரதையா வெச்சுப்பேன்.. எனக்கே பாத ராத்திரி ஒன்னக் கூப்பிடணும்னா, கால் பண்ணனுமே, எல்லாரும் தூங்கீண்டு இருப்பா"
இருள் தந்த சோம்பலில் வேறு வழியின்றித் தூங்க ஆரம்பித்திருப்பானோ மனிதன்? உறக்கம் மட்டும் இல்லையெனில், இன்னும் எந்த அளவிற்கு சாத்தானின் பட்டறை ஆகியிருக்கும் மனம்! இரவையும் தூரத்தையும் ஒரு சேரக் கடந்தபடி விரைந்துகொண்டிருந்தது வண்டி. அதற்குத் தெரியாமல் ஆயிரக்கணக்கான உலகங்களையும் நிகழ்வுகளையும் கனவாய் நினைவுகளாய்த் திருட்டு இரயிலேற்றி, விஷமமாய்த் துயில்கொண்டிருந்தனர் பயணிகள்.
தாதர் வந்தததும், ஸ்டேஷனில் தீராது வந்துகொண்டேயிருந்த திரௌபதி வஸ்த்ரப் பிரயாணிகளை, துச்சாதன சர்தாஜிகள் சின்ன சின்ன ஃபியட்டுகளில் கொத்துகொத்தாய் ஏற்றி, நெரிசலைக் குறைக்க முயன்றுகளைத்துக் கொண்டிருந்தர்கள். ஆனால், கிருஷ்ணர் உயிர்களை சலிக்காது அனுப்பிய வண்ணமிருந்தார். சலித்து அனுப்பினால் இராவணர்கள் ஏது? கம்சன்கள் ஏது? கிருஷ்ணர் தான் ஏது? மாலவனே மூலவனாய் வேலையற்றுப் போயிருப்பான்!!
ஒரு டவேராவில் ஏறி மூன்று திருப்பங்கள் கடந்ததும் தான், மும்பை என்றால் மனதில் தோன்றும் பிம்பமாய் ஒரு பெண், சற்று பரபரப்பாக, மெல்லிய பூச்சுகளின் மேலே சிற்சில முத்துக்களாய் தோன்றிய துளிகளைப் புறக்கணித்து, காற்றில் அலைந்த கற்றைகளை நளினமாக நகர்த்தியபடி சென்றாள். செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், அகாடமி போல ஒரு திருப்பத்தின் முக்கில் இருந்தது. அதைக் கடந்து சற்று தூரம் சென்றால், அன்னபூர்ணா. மூன்று மாடிகள் இருப்பதால், நல்ல வேலை முதல் மாடீலேயே கெடச்சுது என்று சந்தோஷப்படுவார்கள் என்று எண்ணியோ என்னமோ, Lift இல்லாத முதல் மாடியில் அறை. :P
அறை கிடைத்தால் அனுபவிக்கணும்;ஆராயக்கூடாது என்றெல்லாம் அபத்தமாய் வசனங்கள் ஞாபகம் வராமல் பார்த்தபோது, மூன்று விஷயங்கள் கண்ணில் பட்டன. ஏ.சி.மெஷின் இருந்தது; ஆனால், அந்த குளிரோ காற்றோ படுக்கைக்கு வராத அளவில் ஒரு அகலமான செவ்வகத் தூண் இடையில் இருந்தது. 26 இன்ச் நீளமிருக்கும்... தரையில் உட்கார்ந்து சிலம்பக்கட்டை போல் சாதகம் செய்தேன். குளியலறையில் நுழைந்ததும் exhaust fan எல்லாம் வைத்து, தேவலை என்று நினைப்பதற்குள், அதன் இறக்கைகளிடையே தெரிந்த நிறம் எங்கோ பார்த்தது போல் இருக்கவே, உற்றுப் பார்த்தேன். அடப்பாவி... அது, ஹாலில் இருந்த திரைச்சீலை. இது வெளியே அனுப்பும் காற்று அறைக்குள்ளேயே ஏ.சி.யிலேயே வட்டமடிக்கும்! எப்படி மூடினாலும், சிந்திக்கொண்டேயிருந்து ஒரு காலப்ரமாணத்தைத் தந்துகொண்டேயிருந்தன குழாய்கள்.
படிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பிடிகள் ஏதுமின்றி, வழவழப்பாய் வேறு இருந்தன.
மாலை, சிவஸ்வாமி அரங்கில் ரமேஷ் ராமமூர்த்தி வரவேற்று உபசரித்தார். ஒலிப் பொருத்தச் சோதனைகளுக்குப் பின் Green Room-ல் என்னுடைய மும்பை உறவினர்களைச் சந்தித்துவிட்டு ஆறரைக்குத் தொடங்கிய கச்சேரி ஒன்பதரைக்கு முடிந்தது. விமர்சனம் இங்கே. பத்து மணிக்கு அறைக்குத் திரும்பியதும், உணவு இருக்குமா என்ற கேள்வியுடன் சந்தேகமாய் ஆர்டர் செய்தவைகள் அரை மணி நேரம் கழித்து வந்தன. Alu parathaa, Butter Naan, Channa Masala-வுடன் Pinapple Raithaa உன்னுயிரைத்தா என்றது. நல்ல பசியினால் சுவை கூடித் தெரிந்தது.
அடுத்த நாள் என்னை மகாலட்சுமி கோயிலுக்கோ, சித்தி விநாயக் கோவிலுக்கோ அழைத்து செல்லவும் தன் சித்தப்பா வீட்டில் காலை உணவிற்கு அழைத்திருப்பதாகவும் பவதாரிணி கூறினாள். இந்தப் பிறவியில் இன்னொரு முறை இந்தப் படிக்கட்டுகளை இறங்கி ஏறுதல் சிரமம் என்று மென்மையாக மறுத்துவிட்டு, அறைக்குள்ளேயே அடைந்து கிடந்ததில் (இதுல என்ன தில்?) அன்றைய கச்சேரிக்கு வந்திருந்த சஞ்சீவ், நெற்குணம் ஷங்கர், சேர்த்தலை அனந்தக்ருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்தேன். மதியம் இரண்டு மணிக்கு பொவாய்-சேம்பர் மியூசிக் கச்சேரிக்காக கார் வந்தது.
படிகளில் பின்புறமாக இறங்கும்போது திடீரென, இரண்டு வினாடிகளில் கீழ் படியில் இருந்தேன். அந்த இரண்டு வினாடிகளில் ஒரு பிடிப்பிற்காய் கை அலைந்திருக்க வேண்டும்; ஆனால் கவிழ்ந்திருந்த ஆணுடலில் அபாய அடிகளைத் தவிர்க்க வேண்டி, தாடையையும் இடுப்பையும் சற்று உயர்த்திக் கொண்டேன் [Or else, you would have heard a self written "tetsimonial"(testi-moanial)].அருண், நான் சின்னக் குழந்தைகள் போல சறுக்கி இறங்கியதை எண்ணி, சாதரணமாக என் வீல்ச்சேரை பிரித்தவன், விவரம் தெரிந்ததும் கொஞ்சம் அதிர்ந்தான்.
டிரைவர் துரை திருநெல்வேலிக்காரர். பொவாய் எப்படி மலையாக இருந்தது, அதைக் குடைந்து எழுப்பிய கட்டடங்கள், அங்கே மலையில் இருந்த மிருகங்கள், திடீரெனத் தோன்றிய சிறுத்தை, வாயில் கவ்வியபடி எல்லோரும் உறைந்து நிற்க, அது கவ்விச்சென்று, ஓடியபடியே இரத்தம் குடித்து சக்கையாய் கீழே போட்டு இறந்துவிட்ட குழந்தை, பீதியில் உறைந்த மக்கள், அந்த அச்சம் குறைக்க, தேசியப் பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு, அவிழ்த்து விடப்பட்டு திரும்பிப் பிடிக்கப்பட்ட வேறொரு புலி போன்ற கதைகளைக் கூறி நிறுத்திய இடம் ஒரு அபார்ட்மென்ட். "அங்க பின்னாடி ஒரு கொக தெரியுதா.. அங்கிருந்து வந்து மேலேயிருந்து பாத்து கவ்வீருச்சு..."
ரஹேஜா விஹாரின் ஹில் சிட் விங்கில் பதினோராவது மாடியில் கச்சேரி. அங்கிருந்து மலையும் பொவாய் எரியும் அழகாயிருந்தன. ஞாயிற்றுக்கிழமை இராஹு காலம் என்பதால், 4-25 க்கு ஆரம்பித்து ஏழே கால் வரை கச்சேரி. பின்னர் பாஸ்தா, இட்லி என சிறியதோர் விருந்துக்குப் பின், பத்தரை மணிக்கு சத்ரபதி சிவாஜி ஸ்டேஷனின் ஜன சமுத்திரத்தில் கலந்து உள்ளே சென்றதும், "இங்கே இரயில்வே சம்பந்தமாக எதையும் விசாரிக்காதீர்கள்" என்று எழுதி ஒட்டிக்கொண்டு ஆனந்தமாக ஒருவர் கணினியில் spider solitaire விளையாடிக்கொண்டிருந்தார். இரவு-பகல்-இரவு என்று நீண்ட பொழுதுகளைக் கழிக்கப் போகும் அயர்ச்சியில் அமர்ந்தேன். இந்த இரயிலிலும் எங்கும் சார்ஜருக்கான பாயிண்ட்டுகள் இல்லை. காலை வரை கலையாதிருந்தது மொபைல், நாளை நடக்கப் போவதை அறியாமல்!
.
Sunday, November 22, 2009
தாதரும் மும்பை மயிலும்... 1
வெள்ளிக்கிழமை காலை எக்மோர் ஸ்டேஷனை அடைந்ததும் எதிரே பளிச்சென்று வந்தார் OST (ஓ.ஸ்.தியாகராஜன்). அவருக்கு வாஷி காட்கோபர் இரண்டு இடங்களிலும் கச்சேரி. என்னுடன் அருண் துணைக்கு வர, பவதாரிணியும் கோவை சந்திரனும் S4-ல் ஏறினோம்.
எங்கும் சார்ஜருக்கான plug பாயின்ட் இல்லை. பன்னிரண்டு மணிக்குள் ஏதாவது ஒரு பெட்டியில் இதைச் செய்தால் தான் முடியும், பிறகு ஏறும் மக்கள் கூட்டம் கட்டுப்பாடுகளற்றது என்றார் சக பயணி. ஆனால் எங்கும் அது இல்லை, இருந்த ஓரிரு இடங்களில் வேலை செய்யவில்லை. 3rd ஏசியில் சுவிட்ச் மட்டும் இருந்தது, பாயிண்ட்டே இல்லை! ரேணிகுண்டாவிலிருந்து, கரிப்புகை வர ஆரம்பித்தது, இரயிலில்.
எர்ரகுன்ட்லாவைத் தாண்டியதும் கிரானைட் பாளங்கள், பறந்து வரும் பொடிகள், குளங்கள் போன்று வெட்டிய பள்ளங்கள்... கம்பியைப் பிடித்து இழுத்து, வழவழப்பான சுருதி சேர்க்கும் கல் தேடலாம் என எண்ணினேன்... (எண்ணவில்லை,நிறைய இருந்தது,அதனால... நினைத்தேன் போட்டுக்கலாம்...)
பாரதி மணி மாமா கொடுத்திருந்த "பல நேரங்களில் பல மனிதர்கள்" கையிலேயே இருந்தது. அன்னை தெரேசாவை (7வது கட்டுரை) முடிக்கும்போது, muddanur -வை, optical illusion -ல் முத்தன்று என்று படித்தேன். dyslexia?
சற்று நேரத்தில் பக்கத்து சீட் பயணி சீட்டில் எழுந்து நின்றான்...!! சீலிங் ஃபேனுக்கு அருகில் சென்ற அவன் கை, அதற்கும் பின்னே இரயிலின் கூரையைத் தொட்டு வெளிவந்தபோது, கைகளில் இருந்தது அவனுடைய ஷூ!! கோவை சென்றபோது, TTE, சுருட்டிய நூறு ரூபாய் நோட்டுகளை, ஜன்னலில் ஸ்க்ரீன் தொங்கும் கம்பியில் தொங்கும் சந்தில், ஸ்க்ரீனின் சுருக்கங்களுக்கு இடையில் ஒளித்து வைத்ததைப் பார்த்தேன்.
யாராவது பார்க்கிறார்களா என்று அவர் தீவிரமாக செக் செய்தார், நான் கவனிப்பதை அறியாமலேயே...
பல வருஷங்களுக்கு முன் ஸ்ரீராம் ஒரு கல்யாணக் கச்சேரி வாசித்தான். ஆரம்பித்த பிறகு கைனடிக்கில் அங்கே சென்று, எப்படி வாசிக்கிறான் என்று பார்த்துவிட்டு,அவன் வருமுன் பார்க்கிங் இருட்டில் மறைந்து கொண்டேன், Larger than life -ல் யானை ஹோர்டிங்-ன் பின் (இன்று தான் பார்த்தேன், Sony Pix -ல்) ஒளிந்து கொள்வதைப் போல. அன்று அவனுக்கு வேஷ்டி எல்லாம் வைத்துக் கொடுத்தார்கள். ஆனால் பணத்தை ஒட்டிய கவரில் வைத்து விட்டார்கள்! அவனுக்கு உள்ளே எவ்வளவு இருக்கும் என்று ஆவல், ஆனால் அங்கேயே பிரித்துப் பார்த்தால் நன்றாக இருக்காது என்று, டிவிஎஸ் 50 -ல் ஏறி விட்டான். எஸ்.ஜி.எஸ். சபாவிலிருந்து டி.நகர் மெயின் ரோடு வருவதற்குள் 3,4 முறைகள் வண்டியை நிறுத்த தோதான இடம் தேடினான்.
என் ஸ்கூட்டரின் ஹெட் லைட்டை அணைத்துவிட்டு நான் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். இப்போது GRT இருக்குமிடம் அருகே, மரத்தடியில் வண்டியை நிறுத்தி, யாருடைய கவரோ போல், சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு, பிரித்து எண்ணிய போது, சிரித்தபடி அருகில் போய் "டேய்..." என்றேன். வெட்கம், ஆச்சிரியம், மிகுந்த மகிழ்ச்சி எல்லாம் சேர்ந்து, அண்ணா... என்றான். Love you Sriram...
கடப்பா என்று கடந்தும் காணாத கடப்பா கல், ஆதோனிக்கு அப்புறம், நரகூரில் காணக் கிடைத்தது. அடுத்து வந்த, குப்கல், பெயர் தியரிக்கு ஏற்றவாறு குப்பைகள் இன்றி, சுத்தமாகக் காணப்பட்டது.
நீண்ட தூரப் பயணங்களில் அழுக்கு ரெஸ்ட் ரூம்களைத் தவிர்க்க வேண்டி அதிகம் அருந்தாமல் விட்ட தண்ணீர், அந்த அடுக்கின் ஒவ்வொரு வலைக் கூட்டிலும் பாட்டில்களாய்த் தொங்கிக்கொண்டிருந்தது. தண்ணீருக்காகத் தவித்தபடி இருந்தது உடல். பெரும்பாலான நேரங்களில், தவிப்பைத் தான் இன்பம் என்று உணர்கிறோம். In fact, இன்ப அதிகரிப்பே தவிப்பினால் தான்.ஆனால், உடல் நீருக்கு அலைகையில், ஆழ்ந்து மூச்சுவிடத் தோன்றும். அது, மனம் ஒரு முகப்படுவதை எளிதாக்கிவிடுகிறது...
இப்போது, ஸூர்ய-காந்திப் (gandhi அல்ல, kaanthi) பூக்கள் மறைந்து, மரங்களற்ற பாறை மலைகள், கற்குன்றுகள் இரு மருங்கிலும். வேலூரை விட, கோடை கடுமையாக இருக்கும் போலிருந்தது. சிறிய கோவில் ஒன்றில் நேர்த்திக் கடனை முடித்துவிட்டு ஒரு குடும்பம் கூட்டமாகத் திரும்பிக்கொண்டிருந்தது. பக்கத்து அடுக்கிலிருந்து முக்கால் மணி நேரத்திற்கு ஒரு முறை coke வாசனை வந்தது. பெப்சியில் ஒரு ஷூ பாலீஷ் வாசனை இருக்கும்; இது coke தான்.
4-20pm: மந்த்ராலயம் ரோடு. ஒரு இரயில் நிலையத்திற்கு ஏன் ரோடு என்று பெயர்? காஞ்சிபுரத்தில் "சாலை தெரு" மாதிரி. திருவண்ணாமலை தீபத்தை பொதிகை தொலைக்காட்சியில் வர்ணித்துக் கொண்டிருந்த ஒரு "கவிஞர்" யானையைக் கண்டதும், அதோ வருகிறான் கஜமுகன் என்று கூவியதைப் போல. யானையைத் தவிர எந்த விலங்கோ மனிதனோ யானை முகத்துடன் இருந்தால் கஜமுகன் எனலாம்; யானையையே சொன்னால்!!
ஐந்து மணிக்கு இரயில் நுழைந்த ஸ்டேஷனில், ரெய்ச்சூர் என்ற பெயரை BSNL விளம்பரங்களுக்கு இடையே தேடிக் கண்டுபிடித்தேன். சட்டென நினைவு வந்து செல் போனைப் பார்த்ததில் சிக்னல் முழுதாகக் காட்டியது. கர்நாடகாவில் நுழைந்திருக்கிறாய் என்று தொ-lie -பேசி இல்லா-கா கொடுத்திருந்த (எச்சரிக்கை?) குறுஞ்செய்தியை அப்போதுதான் பார்த்தேன்.
இரயில் நிலையத்தை அடுத்திருந்த பள்ளியைப் பார்த்ததும் ஈரோடு இரயில்வே காலனி முனிசிபல் ஹையர் செகண்டரி ஸ்கூல் நினவு வந்தது. அங்கு தான் படித்தேன். அதன் மூன்றாம் மாடியின் வகுப்பறை ஜன்னல் வழியே பார்த்த இரயில்கள் ஞாபகம் வந்தன. சீராகத் (வேறு வழியின்றி) தொடரும் பெட்டிகளை இழுத்தபடி தானைத் தலைவர் எஞ்சின் அய்யா கம்பீரமாக வருவார்.அந்த இடத்தில் ஒரு வளைவும் அதன் பின்னே பெண் படுத்திருப்பது போல ஒரு மலையும் இருந்து, அக்காட்சியின் அழகை அதிகரித்தபடியிருந்தது.
வளைவுகளும் கவர்ச்சிகளும் பிரிக்கமுடியாதவை.
நடு நடுவே, கையிலிருந்த புத்தகம் (பாரதி மணியின் "பல நேரங்களில் பல மனிதர்கள்") இழுத்துக்கொண்டது. ஜன்னலுக்கு அருகில் காதை வைத்தால், வழக்கமான இரயில் சப்தத்தோடு, "ச்சுச்சுச்சுச்சு...." என்ற இரஹச்யக் குரலை கரிப்புகையுடன் எழுப்பிக்கொண்டிருந்தது தாதர். சிவராமன் சார், மிருதங்கத்தின் வலந்தலையில், கடைக்கோடியில் கையைச் செலுத்தி வாசிக்கும் அதி-மேல் கால "தகதின தகதின", தகதகதகதக போன்றவை, "ச்சகதின ச்சகதின" "ச்சக ச்சக ச்சக ச்சக " என்று கேட்பதைப் போல்.
அவர் "தரிகிடதொம்" என்று வாசிக்கும்போது (ஒரு வினாடியில் ஆறு தரிகிட சொல்ல முடிந்தால்? அந்த வேகத்திலிருக்கும், முயற்சி செய்து பாருங்களேன்...) மீட்டில் (white skin on the right side of mrudangam) வாசிப்பது நளினமாகவும், சாதத்தில் (black patch) விழும்போது கம்பீர அதட்டலாகவும், அதுவும் அந்த முறையில் வாசிக்கும்போது அவருடைய கை, ஏறக்குறைய அவர் தோள் உயரத்திலிருந்து மின்னல் போல இறங்கும். என் கண்களுக்கு, கருமேகத்திலிருந்து கீழ் வானம் வரை மின்னல் கீற்றொன்று கோடாய் இறங்குதல் போல, உயர்த்திய அவர் கைக்கும்-மிருதங்கத்திற்கும் இடையே ஒருகோடு தெரியும். அவரே, 'தோடுடைய செவியன்' என்பதைப் போல, "கோடுடைய முகத்தோனை" எப்பொழுதும் மறவா"தவர்" தானே...
அமெரிக்காவின் டெட்ராய்ட் (Michigan) நகருக்குப் போகும் வழியில் Frankfurt -ல் சில மணி நேரங்கள் காத்திருந்தேன். அங்கே, 20 நொடிகளுக்கு ஒரு முறை, ஒரு take off நிகழ்ந்துகொண்டு இருந்தது. நிலத்திலிருந்து விடுபட்டு, மேலேறும் அந்த விமானங்கள் ஒவ்வொன்றும் அவரின் வலது கை விரல்களை நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தன. "நம்" என்ற சொல்லை வாசிக்கும் போது, கை அப்படித்தான் இருக்கும்.
இரயிலின் ஜன்னலுக்கு நேரே, மலைகளுக்குப் பின்னே, நிலாத் தோழி அகன்றிருப்பாள் என்ற நம்பிக்கையில், நிலமகளை ஆரத் தழுவும் ஆவல் கொண்டு, வெளிச்சங்களை ம்ருதுவாக்கியபடி இறங்கிக்கொண்டிருந்தது விழு ஞாயிறு.
ரெய்ச்சூர் நிலையம் தாண்டி, இப்போது மீண்டும் ஸூர்ய-காந்தி மலர்கள். அனால் அவை ஒன்றும் மாலை நேரச் சூரியனைப் பார்த்து இல்லை; எதிரே எங்கள் பக்கமாய் தான் பார்த்திருந்தன. பார்க்காவிடினும், ஒருவேளை அவைகள் ஆதவனை நினைத்துக்கொண்டிருக்க கூடும். எங்கோ இருப்பினும், சிவராமன் "ஸாரை"யே "நாக"ராஜன் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல...
இப்போது மணி 5-27... கடந்த ஊர் யதலாப்பூர்...எதுலயாவது பூர்... மனம் எதிலாவது புகுந்துகொள்கிறது. அப்போது தான் உடல் மரணிக்கும் வரை, அதுவும் வாழ முடியும். மனம் செத்துப் போய் உடல் வாழ்தல் எப்படியிருக்கும்? என்றாவது அறிவோமாயிருக்கும்; அப்போது எழுதவோ பேசிக்கொள்ளவோ மாட்டோம்.
6-58 க்கு வாடியில் (ஆந்திரா)நுழைந்தது இரயில். வாடீன்னு ஒரு ஸ்டேஷனா! ஒண்ணும் இல்லை, நம்ம தமிழ்நாட்டுலேயே கிட்டவாடி, அய்யாவாடி, தோக்கவாடி எல்லாம் உண்டு. பெண்பாற் பெயர் கொண்டதை நேர் செய்யத் தானோ என்னவோ, விஜயவாடாவும் இருந்தது ஆந்திராவில். மூன்று முறை warning tone ஒலித்தது கை பேசியில், தெலுங்கு பேசியபடி... பேட்டரி-லோ...
இரவானதும் காதலர்களைத் தான் கதவைச் சாத்திக்கொள்ளச் சொல்வார்கள்; இங்கே, இரவானதும் காலதர்களைச் சாத்தச் சொன்னார்கள், குல்பர்காவிற்குப் பிறகு. ஜன்னல் ஃபிரன்ச் வார்த்தை, கால் அதர் தான் தமிழ் என்று எப்போதோ குமுதத்தில் படித்த ஞாபகம். கால் - காற்று; அதர் - வரும் வழி. The 'other' way of letting the air, even if door is closed! நானோ, வியாழன் இரவே மூடிவிட்டிருந்தேன், windowsஐ... :)
சென்ற வாரம் பொதிகையில் விஷக்கடிகளுக்கு நேரலையில் வைத்தியம் சொல்லிக்கொண்டிருந்தவரிடம் யாரோ ஒருவர் "பாம்பின் 'கால்' பாம்பறியும்" என்றால் என்ன கேட்டார். "எனக்கு பாம்புக்கடி பத்தி தான் தெரியும், பழமொழிக்கெல்லாம் அர்த்தம் கேக்காதீங்க" என்றார். தொகுத்து வழங்கிய சுபாஷினி தன் போக்கில் எதையோ சொல்லி சமாளிக்க, நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. "மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்தே" என்று ஒளவையார் பாடியிருக்கிறார். குண்டலினிப் பாம்பும் காற்றெனும் மூச்சும் பிரிக்கமுடியாதவை.
சனிக்கிழமை செம்பூர் fine arts -லும் ஞாயிறன்று பொவாயில் ஒரு chamber music concert -ம். அதைப் பற்றி விவாதித்துக் கொண்டு இரவு உணவை முடித்தோம். த்யாகராஜன் (mrudangam artiste, he was also in the same train with OST) வேறு பெட்டியிலிருந்து காண வந்தார். கல்யாணக் கச்சேரிகளில் பாட்டுகள் பற்றிப் பேச்சு வந்தது.
"பேசீண்டே இருப்பா, யாராவது... திடீர்னு வந்து குறையொன்றுமில்லை பாடுங்கோன்னு கேப்பா.. கேட்டவாளே போய் உக்காந்து பேச ஆரம்பிச்சுடுவா... மிக்சர் சாப்டுண்டே காபி குடிக்கறா மாதிரி, குறையொன்றுமில்லை கேட்டுண்டே பேசணும் போலிருக்கு..."
"தந்தனா னா ஆகி எல்லாம் பாடச்சொல்லுவா, அது பாட்டுக்கு சண்டாள பூமின்னெல்லாம் வந்துண்டிருக்கும் அந்த பாட்டுல... பல்லடம் வெங்கட்ரமணா ராவ் ஒரு தடவ சொன்னார், யாரோ வந்து 'மோக்ஷமு கலதா' பாடச் சொன்னாளாம் கல்யாணத்துல! இப்பதான் ஏதோ செட்டில் பண்ணி பக்கத்துல உக்காந்திருப்பா, அதுக்குள்ள மோக்ஷம்னா பொண்ணும் மாப்ளையும் என்ன பண்ணுவா, பாருங்கோ...அப்புறம் கொஞ்ச நாள் பொறுத்து மாப்ள, ஏடி ஜன்மம் இதிஹான்னு பாடுவான்.."
"ஏண்ணா.. அப்படி சொல்றேள்..." என்றாள் பவா.
"ச்சே..ச்சே.. ஏதோ ஆண்கள் மட்டும் அப்படிப் பாடுவான்னு சொல்லலை... பெண்களும், மோஸ ஹோதனல்லோ, நானே மோஸ ஹோதனல்லோன்னு எசப்பாட்டு பாடலாமே," என்றேன். :P
சற்று பேசிவிட்டு, பவா தன் இருக்கைக்குக் கிளம்பினாள். I will follow, good night என்றார், த்யாகராஜன். அதற்கு அடுத்த பெட்டி தான் அவர் இருக்கை. "நல்ல பக்க வாத்யம் என்றால் பாடகாளை follow பண்ணுவா," சந்திரனிடம் திரும்பி, ஆமா... female artiste எல்லாம் எப்படி பாட-"காளைன்னு" சொல்றது என்றேன்.
Wednesday, November 11, 2009
Access denied...
The awareness about access denied to handicapped people seems as if it is actually aware-less!
The ministers, officers, so called followers-party men can never understand such needs of the disabled. They lead a luxurious life; they step into Lexus from their house and gets down at the airport, fana-luna-tics making way for them wherever they go.
They enjoy an uninterrupted journey to anywhere, just as easier as they reach their WC (western closet) from their bedroom. Maybe, the journey that the water, which goes into their stomach, might undergo difficulty to go under, owing to their "service - 24x365"
Ours is a WC problem too, the access through the “Wheel Chair”
Politicians always expect a major percentage for everything! If your caste has a significant percentage of votes, your voice will be heard by the head of the herd. However, the number of people who fight for their survival with their handicap is meagre. In fact, the physical ailment that we have, contributes a lion’s share to the casting of bogus voting, which facilitates their chance of winning.
Napoleon, Minister of State for Social Justice and Empowerment, says ramps cannot be provided for the existin(k)g buildings for want of space! Even the ramps in most of the railway stations are always looking damaged and decorated by phlegm and pawn spits! To fuel the fire more, one cannot find where the ramp is, as autos block them.
This is an age of actors and their followers. It is Indian cinema, which coined the greatest philosophy “oru poNNu manasa oru poNNAla dhAn purinjikka mudiyum” – only a girl can understand a girls mind! Only a disability can make them realise what actually it is...
Therefore, what I think the only way to set it right is, to increase the population of handicapped people by breaking the legs of the so-called authorities and ministers. Even if any one of their eyes is dug, it will be perfect as pigs are one-i-eyed!
Great, it is awesome in writing but will result in mOsam (result otherwise) in material world. We have only one choice but raising the voice.
Please, join hands in mailing the government and the authorities to provide access in a meaningful way and let it prevail forever, unlike many schemes that vanish after a survival for a short period.
Can you fight for a cause? See this link, an experience of mine and send a mail to the concerned authority... (Friends from abroad and citizens of other nations can also write)

Sunday, November 8, 2009
Concert of Gayathri Venkatraghavan on 4.11.09
(Central Lecture Theatre, IIT Chennai at 7pm)
Vocal: Gayathri Venkataraghavan
Violin: Mysore Shrikanth
Mrudangam: Erode Nagaraj
Ghatam: Chandhrasekara Sharma.
Violin: Mysore Shrikanth
Mrudangam: Erode Nagaraj
Ghatam: Chandhrasekara Sharma.
Concerts on rainy days turn awesome and become memorable most of the times; ringing in the mind just like when you think of jasmine you feel the fragrance somewhere. The dark clouds between the people and the sky, chill atmosphere and flooded roads gain significance naturally as the weather brings an impact on voice, instruments and on audience attendance. However, we were able to see the stars of tomorrow as the concert happened in the IIT Campus. Looking at the roads coated with thin layer of water, surrounded by trees, deers and dears, one would easily wish to start a concert with a poetic viruththam like "sAyankAle... vanAnthE... kuSumitha samayE..."
When Gayathri started with vignarAja krupA sindhO and added warmth to the AC auditorium with kAmbOji varNam, the majesty and slower tempo of it, conveyed in a corner of my mind, that this is going to be a real classic evening and she did ishta poorthi too. I liked her singing “ma,, nidhama, padha nidhama...” portion twice.
That was followed by dhanyudevadO in malayamArutham with madhyama kAla niraval and swaram at vara madhdhaLA. Now, I would like to say, she was set all right for a concert packed with soul filling renditions. She delivered varALi in an unhurried but never lagging manner and jAru prAdhAnyam was floating everywhere her voice travelled and sustained.
When the phrases are poetic and complete, the silence modifies into music with real values. Unlike the peace that one gets after the end of any noisy situation, this is the silence, which places you in comfort and enables you to be enjoying an unsung extension in your ears. Your expectations find it difficult to wander more as the sancharams, the beauty of rAga, captures your heart and your mind starts singing along with whatever is happening.
Listening to good sketches of known ragas is a feeling that someone describes how great your kid is and sometimes tells certain fascinating things about them which you are not aware. Her AlApanas in varAli, shree and bhairavi proved the above said and I think she is navigating to a different level of music.
karuNa jUdavamma, one of the best krithis of SS, was sung in a tempo that would have been 60 pulses per minute and she did an impressive niraval at SyAma krishNudu jEsina bhAgyamE tagged with keezh kAla and madhyama kAla swarAs.
Niraval is a place where one line is repeated often. When I was in Erode, might have been in sixth or seventh standard, I heard BMK’s pancharathna krithis cassette and got surprised to hear him singing two types of jagathAnandha kArakA. One sangathi (goes up) for swaram and one sangathi (comes down) for sAhithyam. Then, in rAmanavami concerts, LGJ and N.Ramani surprised with varities of endharo in every charaNam. Then I heard TNS’s unpredictable variations for 'mathurA puri nilaiyE' (heard a replay of that after a long time, TNS-MC-UKS at Nungambakkam Cultural Academy). Gayathri displayed many varieties that jell with the improvisations of niraval in varALi.
shrI rAma nAmam bhajanai sei manamE, in atANA came next. I have played for nee irangAyenil lot of times, but, now only playing for this krithi of sivan. A nice one and it contributed a contrast in terms of tempo, which some would like to call as an energy piece. Actually, to sing and emote in lower tempos, one needs enormous energy and power as they need to take care of both bhAva-laden sangathis along with singing in the slower kAlapramANam and it is a bit difficult only, even when someone is providing the rhythmic support.
Though the mrudangam artiste takes care of the pace, there are many places in such viLamba kAla krithis, where the pause ornaments the krithi (taking care of the ‘rest’). Just like, you look more beautiful, if you take off the raincoat, when you are decently dressed up and especially when it is not raining. Also, it should not be a role of a pillion rider who always screams, “hey... look a water tanker... aahaa... now a pallavan... see the guy on the bike... take left and don’t turn right!!”
I pay my sincere praNAms (obviously, prANa lies in arms for we mrudangam artistes) to UKS sir who made me realise many niceties of this music and embellishments provided according to improvisations apart from just filling with endings.
May be, the shree rAgam is still in my ears and I was reminded of endharO! She presented a good AlApanai and a clear rendition of the valuble krithi ‘thyAgarAja mahAdhvajArOha thAraka brahma rUpam ASrayE’. Thanks to bharath for that request. I remember reading a write up of R.K.Shriramkmar’s lec-dem in rams abode.
parAku jEsina in jujAhuLi (thyAgaraja- Adhi) was nice. UKS sir has mentioned about how Kallidaikurichi Mahadheva Bhagavathar used to sing this. Therefore, naturally I fell in love with the composition.
She took up bhairavi for main. bAlagOpAla..? janani mAmava...? mmhmm... Annaswamy Sasthri’s ‘shrI lalithE kanchi nagara nivAsini mahA thrupurasundhari mAmpAhi’ in Adhi. Ravi in dark is to throw some light, I think. It was well developed, stage by stage (and rajesh, I did not make note of time). The composer says 'chiththam athi chapalam'and asks kAmAkshi to keep it in control, reminding ‘Sanakararin moondrAvadhu vazhi’ like markata kiSora-mArjAra kiSora nyAyams.
Mysore Shrikanth played nicely and his AlApanais and swara prasthArams were ramyams. I have mentioned about the theory, when something exists in the name, it will not be in their personality. what Shree can't? Myself and Chandru played chathusram and kaNda gathi. Gayathri was planning to sing an RTP in nAttakurinji, but skipped it owing to time factor. She sang the lines of pallavi to the audience, as they seemed interested in knowing...
"SukumAranai kumAranai mARanai manamE... nee ninai dhinamE..."
She sang a viruththam “pAl ninaindhoottum thAyinum sAlap parindhu” in dhanyAsi and hamsAnandhi followed by swathi thirunal’s “shankara shrI giri nAtha prabhO” and mangaLam.Saturday, November 7, 2009
hilarity...
I met Professor Narendran in our recent concert at IIT. He said: There was a woman who had some veezing and nose block, hence, she was not able to smell correctly. So to avoid any tragedy, her husband a brainy scientist, connected an alarm which sends her a message from near the stove to her laptop, as she used to on line G-Talk always. How would he named the detector?
"Gas-Ping"
.............................................Gayathri said, the weather makes her cough (rarely). Me: Don't worry, since you are cow(gaai), calves won't trouble you.
............................................
Narendran: If a girl sings shrI, then it is sthree rAgam.
Me: if someone can sing isthiri (ironing clothes) rAgam, that will give warmth for this weather.
Me: if someone can sing isthiri (ironing clothes) rAgam, that will give warmth for this weather.
...............................
todays rain:
I sent a message to krishna (my sishya), "is your area be area or a real Eriyaa?"
"orE kuLamA irukku sir...?"
"innikku office uNdA?"
"illa sir.."
"pinna, anga enna panRE?"
"inga orE mazhai sir, ilaatti inga iruppEnA?"
"submarine-la varavENdiyadhu dhAnE?
"enakku Otta theriyAdhE"
"theriyAma OttinA dhaan submarine, therinjaa, shippu"
" "
"aanaa, unna harbour, navy, 'thekkadi'... engayum velaikku eduththukka maataan..."
"why sir?"
"onakku dhaan "otta" theriyalayE... appuram ellaarum muzhugeeduvaa"

Subscribe to:
Posts (Atom)