Thursday, July 30, 2009
அப்படி சொல்லீண்டு இருக்கிற போதே...
பல வருடங்களுக்கு முன், "நாகராஜா.. நீ கச்சேரில எல்லாம் நன்னா வாசிச்சிண்டுஇருக்கேன்னு காதில விழறது... அப்படி ஒரு அபிப்ராயத்துல பல பேர் இருக்கறபோதே, நீ நன்னா வாசிக்க ஆரம்பிச்சுடு..." என்றார் உமையாள்புரம் சிவராமன் சார்.
இங்கே படிக்கலாம்..
Tuesday, July 28, 2009
Differently Abled
http://www.youtube.com/watch?v=26rHd9vXk9s
இன்று ரசிகாஸ் வெப் சைட்டில் இது ஒரு டாபிக்காக ஓடிக்கொண்டு இருந்தது. நானும் இன்று தான் பார்த்தேன்.
இன்று ரசிகாஸ் வெப் சைட்டில் இது ஒரு டாபிக்காக ஓடிக்கொண்டு இருந்தது. நானும் இன்று தான் பார்த்தேன்.
Sunday, July 19, 2009
".....................
review and comments can be read here
Sometimes, from reviewers too... Yes. Sometimes only.
Recently, I played for the concert held at ragasudha on 7.7.09 in memory of the great vidhwan Shri A.Sundaresan.
The Hindu, found it very difficult to even mention the accompanists, as if our names are too longer to fit the pages like…
.................."review and comments can be read here
Friday, July 17, 2009
சங்கீத கலாநிதி திருமதி D.K.பட்டம்மாள்
நான் சென்னை வந்த புதிதில், வானொலியில் இசைப் பயிற்சி நிகழ்ச்சியில் முதலில் கேட்டது பட்டம்மாவின் கல்யாணி தான். "கணபதே மஹாமதே" -வை அவர் சொல்லிக்கொடுத்த விதம் கேட்டு மயங்கவில்லை, மாறாய் தெளிந்தேன். அது பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லியது.
பாரதியிலிருந்து தீக்ஷிதர் வரை, தாமரை மலர் ஒன்று கண்டேன் முதல் பல்லவியின் மிஸ்ர கதியைக் கூட, மூன்றரையாக இல்லாமல் ஒரு விரலின் அசைவில் நிலைப்படுத்தும் லயம் வரை எல்லாம் முடிந்ததுஅவரால்.
அவர்கள் ஒரு முறை கலாக்ஷேத்ராவில் கௌரவிக்கப்பட்டபோது, அந்நிகழ்ச்சியை அடுத்து, உமையாள்புரம் சிவராமன் சார் கச்சேரி இருந்தது. பட்டம்மா மாமி, சிவராமன் சாரை அழைத்தார்கள்...
DKP: சிவராமா... நமஸ்காரம்...
UKS: என்ன இது... நீங்க எனக்கு நமஸ்காரம் சொல்லலாமா.. நாந்தான் உங்களுக்கு சொல்லணும்.. நீங்க எனக்கு ஆசீர்வாதம் பண்ணனும்...
DKP: உனக்கு ஆசீர்வாதம்... உன் வித்தைக்கு நமஸ்காரம்..
சங்கீதம் தவிர ஒன்றறியா உபாசனை செய்து வந்த மற்றுமோர் விளக்கு. விளக்குகள் உடையலாம், ஜ்வாலையின் தீஞ்சுடரும் வெப்பமும் எங்கு செல்லும்? ஒளிக்கேது பின்னம்? அவைஅணைவதேயில்லை.
அவை அணைக்கும்;ஆரத் தழுவும்; ஆற்றுப்படுத்தும்.
அழுத்தமான சங்கீதத்தால் வருடிக்கொடுக்கும்.
அளந்து வைத்த சங்கதிகளால் அகண்டமாகும்.
Sunday, July 12, 2009
நட்பு - இரண்டு கேள்விகள்..
1. நட்பு எல்லையற்றது.
2. மனைவியிடம் கூடப் பேசத் தயங்கும் விஷயங்களை நட்பிடம் பேச முடியும்.
இவ்விரண்டு கருத்துகளும், எங்கு நட்பு பற்றிய விவாதம் எழுந்தாலும் எப்போதும் முன்வைக்கப்படுகின்றன, இன்றைய நீயா-நானாவிலும்.
என்னைப் பொறுத்தவரை நட்புக்கு எல்லைகளுண்டு. ஆனால், எல்லைகளை வரையறுத்த பின், நட்பு சாத்தியமில்லை. எல்லைகளைப் பற்றிப் பேசும்போது அதன் இரு வகைகளை நாம் உணர வேண்டும். ஒன்று, காண முடிகிற எல்லை. எடுத்ததும் அந்தக் கோடு தான் கண்ணில் படும். அதுவே நெருங்க விடாமல் செய்யும். அப்படி இருந்தால் அது பழக்கம் மட்டுமே. பரஸ்பர உதவிகள் கூட இருக்கும், அதிக நெருக்கமில்லாமலேயே.
இன்னொன்று, உணர மட்டுமே முடிகிற எல்லை. நட்பின் எல்லையை யாரும் போஸ்டர்அடித்தோ வகுப்பெடுத்தோ அறிவித்தோ செய்யாமல் இருக்கிற இயல்பு. எல்லைகள் கூட, மாறுதலுக்கு உள்ளாகிக்கொண்டேயிருக்கும் அங்கே.
மனைவியை விட நட்பு பெரிதென்று சொல்லுவார்கள். Going by emotion or going by intellect என்ற இரண்டு அடிப்படை விஷயங்கள் இருக்கின்றன. எனவே, உணர்வுபூர்வமாக எது இருந்தாலும் அது அறிவினால் செல்ல வேண்டிய தருணத்திற்கு இடைஞ்சலாய் இருக்குமெனில், அங்கே மனைவியோ அல்லது நட்போ, எது உணர்வுபூர்வமானதோ, அது தள்ளி வைக்கப்படுகிறது.
விவாதம் தொடரலாம்.
Saturday, July 4, 2009
ஒரு சுவாரஸ்ய கடிதம்...
ஜெயமோகனின் "மீசை" படித்துவிட்டு அவருக்கு எழுதியிருந்தேன்.
Dear J,
ஒரு நாள், என்னுடைய குரு, உமையாள்புரம் சிவராமன் சார், “ஏண்டா… எதுக்கு மீசை… அதை எடுத்துடேன்”, என்றார். மறுநாள் சரஸ்வதி பூஜை. இன்னிக்கு மீசையை எடுத்துட்டு, நாளைக்கு விஜயதசமிக்குப் போய் மீசை இல்லாம ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கணும் என்று, எடுத்துவிட்டேன்.
Dear J,
ஒரு நாள், என்னுடைய குரு, உமையாள்புரம் சிவராமன் சார், “ஏண்டா… எதுக்கு மீசை… அதை எடுத்துடேன்”, என்றார். மறுநாள் சரஸ்வதி பூஜை. இன்னிக்கு மீசையை எடுத்துட்டு, நாளைக்கு விஜயதசமிக்குப் போய் மீசை இல்லாம ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கணும் என்று, எடுத்துவிட்டேன்.
“இப்போ தான் ஒரு ஜீனியஸ் லுக் இருக்கு”
“இன்டெலெக்சுவல் களை”
“மொழு மொழுன்னு இருக்கேள்”… என்று பலவிதமாய் காம்ப்ளிமெண்டுகள் காற்றில் பறந்தன.
“இன்டெலெக்சுவல் களை”
“மொழு மொழுன்னு இருக்கேள்”… என்று பலவிதமாய் காம்ப்ளிமெண்டுகள் காற்றில் பறந்தன.
மீசை, உடல் உழைப்பின்-வாசிப்பின் சின்னச்சின்ன சிரமங்களை ரகசியப்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது சாதாரணமாக வாசித்தாலும் எவரேனும் வநது, உடம்பு சரியில்லையா என்று கேட்டார்கள். முடியும் வெட்டிக்கொண்ட தினத்தில், டாக்டர் ஸ்ரீனிவாசன் “அப்பா சௌக்கியமா இருக்காரோன்னோ..” என்றார்.
மூன்று மாதத்தில் மீண்டும் மீசையிடம் சரண் புகுந்தேன்!
ஈரோடு நாகராஜன்.
இதுதான் வித்தியாசம். என்னிடம் எல்லாரும் மீசை எடுத்தபின் ”என்ன சார் சீரியஸா ஏதாவது யோசிக்கிறிங்களா’ என்றுதான் கேட்கிறார்கள்.
ஜெ (ஜெயமோகன்)
ஜெ (ஜெயமோகன்)
Subscribe to:
Posts (Atom)