Thursday, December 27, 2012

காகிதத்தில் பகிர்ந்தவைஎழுத்துருவைத் தேர்வு செய்து
ஆவலொன்றே மீந்திருக்க
ஆங்கிலத்தில் விசை தடவிமொழியைச் சுருக்கி
விதிகள் புறந்தள்ளி
கணினித் திரையிலும் 
கைபேசியிலுமே பகிர்ந்து

மையெழுத்தே மறந்து போய் - வையகத்தே
வந்து சேர்ந்த வசதிகளால்


வரிகளே கானலாகிக்
கனவாகிப் போயிற்றோ,

கையெழுத்து பிடிபடாமல்
போனதொன்றும்

பெரிதல்ல; 

பேனாவில் மை நிரப்பி
பேப்பரில் எழுதி வைத்துக்
கடிதமாய் கையில் நிற்கும்
..

காகிதங்கள் சொல்லிவந்த
கதைகளும் போயினவே.

தவறாகப் பிரித்ததனால்
குறுக்காகக் கிழிந்ததில்
அப்பாவிடம் திட்டு,
அன் டூ செய்யவே முடியாது.

140-க்குள் முடியாமல் 
ட்விட்லாங்கர் போடுமுன்னே
முகவரிகள் நீங்கலாக
மூலையெல்லாம் நுணுக்கிக் கிணிக்கி
வலைப்பதிவே போட்டு விடுவார்
வைரமங்கலத் தாத்தா.

பத்திகளின் இடையில்,
பக்கங்களின் ஓரங்களில்
பட்டாம்பூச்சியோ கிளியோ

கிறுக்கலாய் வரைந்தவைகள்

கண்களை மட்டுமா வருடிக்கொடுக்கும்...

மனக்குரலில்
மழலையாய் ஒலித்துக்
காதுகளும் சற்றே கண்மயங்கும்.

சைக்கிளை நிறுத்தும் சத்தம் கேட்டாலே
முற்பகலில் மூச்சுத்திணறும்
மூளை பரபரக்கும்

மின்னஞ்சல் வந்ததாய்
மினுமினுக்கும் திரையில்லை,
கற்றையாய்க் கொண்டுவரும்
கவர்களில் தேடிடுவேன்.

பிரிவுணர்தலைச் சொல்லுமே
கண்ணீர்த் துளி பட்டு
கரைந்து போன 
வார்த்தையோ
எழுத்தோ ஒன்றேனும்...

தூக்கம் வந்ததெனப் பாதியில் நிறுத்தி
மற்றொரு நாளின் தேதியிட்டு,
அடுத்த பக்கம் ஆரம்பித்த
மீதிக் கடிதத்தின் வரிகளைப் 
படிக்கவே தோன்றவில்ல,

அதன் மீதே உறங்கிப்போன உன்

வாசம் தேடி காகித்தை முகர்ந்தேன்,
கணினித் திரையை என்ன செய்வது?

7 comments:

 1. naanum adha thaan kekkaren.. adhey thaan.. paper ponaa phone, computer.. phone, computer ellaam poidchu naa, edha nenachu feel panna? feeling thaane mukyam?

  ReplyDelete
 2. computer, phone ellAm pOyiduchunnA, you please try puRaa legs, adhak katteeNdu feel :)

  feeling mattum pORaadhu ram, adhukku thAn oru manthram appadeennaa koodavE prayOgam-nu oNNu vechirukkA.

  ReplyDelete
 3. அடுத்து வரும் தலைமுறையினருக்கு இந்த அனுபவம் புரியவெ புரியாமல் போய்விடும். நான் அமெரிக்காவில் இருந்த பொழுது ஒரு கடிதம் என் தாயிடம் இருந்து வந்து சேர கோரின்தது பத்து நாட்கள் ஆகும். ஆனால் அடுத்த கடிதம் வரும் வரை அதை ஒர்ராயிரம் தடவை படித்திருப்பேன் :-) எனக்கு துணையும் தைரியமும் அந்த கடிதங்களே! காலம் மாறிவிட்டது, நல்லதுக்கு என்றே கொள்ளவேண்டும் :-)

  amas32

  ReplyDelete
  Replies
  1. How can explain my agony when I was waiting for a mail from my son in 6th Std in Amaravathi nagar school...? I was mailing daily to him... not knowing if was getting those letters...

   Delete
 4. அருமை சார்..நாம் அனைவருமே ட்ரான்ஸ்ஃபரில் ஊர் விட்டுப்போன நண்பன்/பிக்கு மூன்று, நான்கு முறை கடிதம் எழுதி கைவிட்டவர்கள் தானே..

  எனக்கு கவிதை அவ்வளவா தெரியாது. ஆனா உங்கள் கவிதையில் ஒரு ‘ரிதம்’ (லயம்) இருப்பது உணரமுடிகிறது. குறிப்பாக அந்த வைரமங்கலம் பாரா கச்சிதம்..

  வாழ்த்துக்கள் சார்..

  ReplyDelete
 5. நன்றி. தையில் ரிதம், ட்ரம்ஸ், ஃப்ளூட் வாசிப்பவர்களுக்கு, எனக்குக் கையில் :)

  ReplyDelete