Thursday, April 10, 2014

தாமரை பூத்த தடாக மடி...






வேங்கையின் தோலினைத் தாம் அரைக்கசைத்தே 
வேதங்கள் ஓதிடும் வேறற்ற மூலவன்

தோடகம் என்கின்ற தாமரை மலர்த்தியே
நாடகம் தீர்த்தே நாடகம் காப்பவன்

தேரகன் வேண்டிடும் தாயகம் ஓங்கவே 
மாரகன் ஆகியே மாற்றினை ஈந்தவன்

மோதகக் கையனின் மத்தகம் போலவே
மோதியே உடைத்து மாயைகள் தீர்ப்பவன்


நாயகன் நாற்பொருள் நல்கிடும் நீறுபூண்
சாயகன் எரித்த சங்கரன் சபையாம்

நானிலம் உய்யவே நன்மழை பெய்யவே
நல்லருள் செய்யென யானுனைப் பணிவனே.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------


கொஞ்சம் போல 
சின்னச்சின்ன ஸ்வாரஸ்யங்கள்:

  • வேதங்கள் கூறிடும் - மறைகள் ஓதி விளக்குகின்ற பிரம்மம் / வேதங்கள் இரு கூராகப் பிரித்துக்காட்டும் சகுண-நிர்க்குணப் பொருளானவன்
  • தோடகம் (தாமரை) என்கின்ற - தோடகாஷ்டகம் விளக்கும் சங்கரனானவன் (குரு வணக்கம்)
  • நாடகம் தீர்த்தே - ends the drama and நாடகம் காப்பவன் saves நாடு & அகம் (veedu)
  • தேரகன் - சாரதி (country is in need of an eminent driver for the smooth running, reaching destination and a drive in the minds to attain)
  • மாரகன் ஆகியே - one who destroys the anti social elements like cong, aap etc.
  • மாற்றினை ஈந்தவன் - who blesses the change to us to be the change itself
  • மோதியே உடைத்து direct meaning: knock and break something / hidden: like சோழ நாடு சோறுடைத்து, பாரத நாடு மோதியை உடையது
  • நாற்பொருள் - அறம் பொருள் இன்பம் வீடு
  • நீறு பூண் - விபூதி அணிந்த / பூண்+சாயகன் - பூஞ்சாயகன் - மலரம்பு விடும் மன்மதனை எரித்த
  • சங்கரன் சபை - உலகம், நம் நாடாகிய ஆலயம்

    படம் உதவி: இணையம் + paint tools.

3 comments:

  1. //மோதியே உடைத்து direct meaning: knock and break something / hidden: like சோழ நாடு சோறுடைத்து, பாரத நாடு மோதியை உடையது//

    jooperu! :)))))

    ReplyDelete
  2. உங்களது சிவபெருமான் பாடலை
    மதியை முடியில் தரித்த அந்த சிவன் புகழ் பாடும் கவிதையை,
    இந்த முதியோன் பாடியிருக்கிறேன்.
    https://soundcloud.com/meenasury/ypsatohtoixb
    சிவ பெருமான் உங்களுக்கு எல்லா அருளையும் தரவே
    வேண்டுகிறேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in
    www.sachboloyaar.blogspot.in
    www.subbuthatha72.blogspot.in
    www.pureaanmeekam.blogspot.in

    ReplyDelete
  3. மோதகக் கையனின் மத்தகம் போலவே
    மோதியே உடைத்து மாயைகள் தீர்ப்பவன்....
    சூப்பர் சார்! சூப்பர்!

    ReplyDelete