Tuesday, March 27, 2012

உண்மையில் ஊனமுற்றோர் இவர்களா? அவர்களா?

ஏப்ரல் மாத சினேகிதியில் வந்த கட்டுரை. படங்களை க்ளிக் செய்து படிக்கலாம்.







Monday, March 26, 2012

பொய்திகள் வாசிப்பது புருடோத்தமன் - இம்முறை கொஞ்சம் லேட்டாக



    1.   டெபாசிட் இழந்த கட்சிகளின் அலுவலக வளாகங்களில் டப்பா செட்டி இஞ்சி லேகியம் விற்றவர் கைது. #ஜீரணிக்க முடியாத செயல்.

 2.வைப்பு நிதியாண்டுக்குள் தேர்தல் வைப்பு-நிதி இழப்பு ஈடுசெய்யப்படும் – பா.ம.க. ‘மாதிரி’ சட்டசபை தீர்மானம். 
#கூடங்குளத்தை ஆதரித்து, இலங்கையை எதிர்த்து, முல்லைப் பெரியாறு அணையை எதிர்த்து… இது எல்லாம் தீர்மனம் தீர்மானம்னு சொல்றாங்களே, ஏன், மானம் தீரணும்?




3.   ”வைப்பு மீட்பு இயக்கம்” – கட்சி வேறுபாடுகளை மறந்து தலைவர்கள் துவக்கம். தில்லித் தேர்தல் ஆணையம் நோக்கி ’நிதி’ கேட்டு நீண்ட பயணம். 

#சங்கர்&கோ-வில் முடிவு தெரிஞ்சு போச்சே, இனிமே கலீஞர் அண்ட் கோ, கேப்டநண்டுக்கோ, வைகோவண்டுக்கோ எல்லாம் என்ன செய்யும் எனக்  கேட்பவர்களுக்கு தக்க பதிலடியாம்.


4.   வெட்டி ப்ளாகர்கள் கண்டபடி கலாய்ப்பதால், இயக்கத்தின் பெயரை “டெபாசிட் மீட்பு இயக்கம்” என மாற்றுவதாகத் இனமானத் தலைவர் அறிவிப்பு. 

#நிதி மோசடிப் பிரிவின் கீழ் பொது நல வழக்கு போட்டுப் பாருங்களேன்.


5.   இயக்கக் கூட்’டங்’களில் நாக்கைத் துருத்திப் பேச தம்பிக்கு சிறப்பு அனுமதி-தமிழினத் தலைவர் தாயுள்ளத்தோடு அனுமதி. 

#துரோகிகளை பிறகு பார்த்துக்கொள்ளப் போவதாய் செவி வழிச் செய்தி.



6. கூடங்குளத்தில் உலை கிடையாது – அரசு திட்டவட்ட அறிவிப்பு. வீடுகள்-ஹோட்டல்கள்-சத்துணவுக் கூடங்கள் என எங்குமே சமைக்கக்கூடாது; அங்கிருந்து வெளியேறி அகதிகள் முகாமில் உலை வைத்து வடிக்கலாம் என்று அமைச்சர் நாராயணசாமி விளக்கம். #சொல்லிட்டாலும்…


7. ரஜினியின் கோச்சடையான் – கமலின் விஸ்வரூபம் படங்களில் ஜாக்கி ஷ்ராஃப், ராஹுல் போஸுக்கு பதிலாக வில்லன் வேடத்தில் அப்துல்கலாமை நடிக்க வைக்கவேண்டும் – ஞானி, முத்துகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் உருக்கமான வேண்டுகோள்.


#கோட்டா, ஆஷிஷ், சுமன் வயிற்றில் புளி


8. கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அடியில் எரிமலை குறித்து அச்சம் தேவையில்லை – நடுவண் அரசு அறிவிப்பு. சேது சமுத்திரம் புகழ் டி.ஆர்.பாலு-நிதி சகோதரகள்-ராகுல் காந்தி கூட்டணியில் “எரிமலை தலைகீழ் திருப்பு” திட்டத்திற்கு மன்மோகன் அனுமதி. 

#இதனால், அது வெடித்தாலும் மெக்ஸிகோவில் பயிரிடப்பட்டிருக்கும் கிழங்குகள் அரிசி ஆகியவை தானே வேகும் என்றும், அதன் மூலம் அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் ப.சி.-க.சி. கூட்டறிக்கை. (ப.சிதம்பரம்-கபில் சிபல்)


9.  குஜராத்திலும் பா.ஜ.க. உறுப்பினர்கள் ‘படம்’ பார்த்ததைத் தொடர்ந்து அனைத்து ச.ம.உ.க்களின் செல்பேசிகள் பறிப்பு. பதிலுக்கு பேஜர் அல்லது க்ரஹம் பெல் காலத்து டெலிஃபோன்களைக் கையில் எடுத்துச் செல்ல அனுமதி. 

#பேஜரில் ஆபாச செய்திகள் படிப்பதைத் தடை செய்ய முடியாது என்பதால் ‘பேஜர்-பேஜார்’ கோஷங்களைப் பெண்ணுரிமைச் சங்கங்கள் அறிவிப்பு. 



10. மணிமணியாய்க் கூடியிருந்து மாட்டிக்கொள்ளும் ஞானப் பழ கட்சியான பா.ஜ.க.வில் புதிதாக ’போர்னோ-க்ராண்ட்-நைட்-விங்க்’, மன்னிக்கவும், நாக்கு தடுக்கிறது, போமோக்ரானெட் அணி விரைவில் துவக்கம். 

#அந்த அணியினருக்கு ”ஸாம்சங் கேலக்ஸி” அலைபேசிகளும் தரப்படுமாம். இந்த அறிவிப்பு ச.ம.உ.க்கள் காதில் ’செமசீனுங்க-சோ செக்ஸி’ என்று தான் விழுந்திருக்கும். 


11.  ’கோ’ பட நாயகி தெரியும், ராதா மகள்; யார் இந்த ’க’ பட நாயகி – தொண்டர்கள் ஆர்வம். 

#கட்சித் தலை வேதனை என்பது இது தானோ!


12. ப்ரதிபா பாட்டீல் 22 நாடுகள் சுற்றுப்பயணம், செலவு 205 கோடி.
   #ஒரு கோடிக்குப் பத்து கோடின்னு வெச்சா கூட, எண்பது கோடிக்கு மேல ஆகாதே!


Wednesday, March 14, 2012