Friday, April 29, 2011

வில்லியம் & மிடில் - Comments during live relay :)

நம்ம நெனக்கறது எங்க நடக்குது!! தூக்கம் வரா மாதிரி இருந்தது. இந்த News சேனல் எதாவது வெச்சுட்டா, தொண தொணன்னு பேசீண்டே இருக்கும், அப்பிடியே தூங்கீடலாம்னு நெனச்சேன். ஆரம்பிச்சுட்டாங்க! லண்டனில் இருந்து லைவ்னு, sun news! ராயல் வெட்டிங் லைவ்! (Wedding தான், ஆனா, முதலிரவுக் காட்சிகள் கிடையாதாம்:P)

BBC says,the shoulders are covered, but transparent...


நான் ஏதாவது news சொல்லி அனத்துவான், தூங்கலாம்னு நெனச்சேன்..இங்க என்னடான்னா warner bros intro 
range-க்கு ம்யூசிக்க போட்டு ப்ராணன வாங்கறான்...ஐயகோ!!


Comments during live relay:


* "ஏய்... அந்த ஆளு மண்டைல முடியக் காணோம்.. தொறந்து வெச்சிருக்காரு.. இந்த புள்ளைக்கு கொள்ள முடி,  தலைய மூடி வெச்சிருக்கு!"

* "இவன் என்ன கோர்ட்ல மூணு வாட்டி பேர் கூப்பிடறவன் மாறி ட்ரெஸ் பண்ணீருக்கான், இவன் தான் பொண்ணு 
மாப்பிள்ளைய கூப்பிடுவானா? ஆஹா.. அவுரு தான் பையன்!"


* "ஏய்.. பொண்ணு ரொம்ப வயசாளியோ? தலையெல்லாம் வெளுத்துப் போய் மூஞ்சில சுருக்கமாவில்ல இருக்கு? அது மாமியாரப்பா!!"

* "ஏய்.. என்ன இது!! அந்த ஏரோப்ளேன்காரன் ஒங்க ஊர் பல்லவன் பஸ் ஸ்டாப்பிங்க தாண்டி போகுமில்லா.. அதும் 
மாதிரி அரண்மனையத் தாண்டிப் போய்கிட்டு இருக்கான்!"


* "இஞ்சாரு.. அமெரிக்கால பில்லுகேட்டு பில்லுகேட்டுங்கறான்; இங்க வில்லு-கேட்டு வில்லு-கேட்டும்பாய்ங்களா 
இனிமே?"


* "செவப்பு சட்ட-நீலப் பட்டா தான் மாப்பிள்ளையா.. அவரு பக்கத்துல வரது யாரு? கறுப்புக் கோட்டப் பாத்தா, வக்கீலு 
மாதிரியில்ல கெடக்கு!!"


* "ஏ.. எதுக்கு இம்புட்டு பயலுவ இங்கன வேஷம் போட்டு திரியுது? கோட்டியோ? இல்ல மாமா, அப்ப தான் மாப்ள 
அளகாத் தெரிவாஹளாம்"


* "ஏண்டிம்மா...பொண்ணு வந்து நாழியாயிடுத்தே... பையன் இன்னும் வரக்காணுமே!"

"அவர் ரொம்ப தூரம் மூஞ்சி அலம்பணுமோல்யோ.. அதான் சித்த நாழியாறது"


* பொண்ணு பேரு மிடில் டன்னாம்... வெய்ட்டு கல்யாணம்!!


* Q: அந்த ஊர் ராசா மாமியார் ஊட்டுக்கு போறத உலகமே டிவியில காட்டுது, இந்த ஊரு ராசா மாமியார் ஊட்டுக்கு போனத அவங்க டிவில கூட காட்டல?
A: அவரு முடியெல்லாம் கொட்டி, அங்கிள் ராசா; இவரு ஏகத்துக்கு கொள்ளையடிச்ச, ஆண்டி ராசா!

* How come a nagarvalam keeps middle on the edge!!

* The difference between Indian Wedding and the British wedding is, after marriage pAl-kani here and balcony there.

Since the bride is middle, she is duchesse!

* Rajni Impact: William is wearing the clothes Rajnikanth wore in Pandian movie and is riding the Muthu carriage vehicle. Rajnikanth influence undeniable in the royal wedding.

4 comments:

  1. "அவர் ரொம்ப தூரம் மூஞ்சி அலம்பணுமோல்யோ.. அதான் சித்த நாழியாறது"

    romba thaan nakkalu

    ReplyDelete
  2. நம்ம நெனக்கறது எங்க நடக்குது!! //

    அதே, அதே, ரெண்டு நாளா உங்க பதிவைப் படிக்கணும்னு நினைச்சா! ஹும், எங்கே திறக்குது?? இன்னிக்குத் தான் பெரிய மனசு பண்ணித் திறந்திருக்கு. பார்த்தேன் தொலைக்காட்சியில் ஆங்காங்கே சில காட்சிகள். முழுதும் பார்க்கலை. :))))))

    ReplyDelete