Friday, February 25, 2011

சும்மா தமிழில் முயன்றது...

http://www.youtube.com/watch?v=C21G2OkHEYo


(u fill up my senses, like a night in a forest...)


கானகத்தில் கலந்து நிற்கும்
காற்றாகிக் காரிருளும் போல...

வருடுகின்ற வசந்தத்தை
வாங்கிக்கொள்ளும் மலைகளென,

மழை நாளின் மகிழ்வானதொரு
மாலைக் காற்றில் நடையாக...

மணற்துகளை மலையாய்க் குவித்து
மூச்சடைக்கும் பாலைப் புயலென,

நீண்டு கிடந்து நீலமாய்,
நீங்காத அலைகளின்றி
நீள் விழிகள் இமை மூடிக்
கண்ணயர்ந்த கடலாக...

நீ நிறைக்கிறாய்; நீரிறைக்கிறாய்.

வா...
வந்து நிரப்பிவிடு - என்
ஜீவக் கலயங்களை
மற்றொரு முறை கூட,

மீண்டும் மீண்டும் சுவாசம் போல்
மீளாது காதல் செய்ய.






12 comments:

  1. கவிராயரே! பிடியும் பொற்கிழியை!

    பாரதி மணி

    ReplyDelete
  2. ம்ம்ம் நல்லா இருக்கு! :)

    ReplyDelete
  3. அருமை நாகராஜ்..:))

    ReplyDelete
  4. கானகத்து இரவு கவிதையில் இ(ப)டம் பிடிக்குது!
    அருமை!நாகராஜ்!வாழ்த்துகள்!

    அன்போடு,
    தங்கமணி.

    ReplyDelete
  5. கண்ணயர்ந்த கடலாக...

    நீ நிறைக்கிறாய்; நீரிறைக்கிறாய்.
    நிறைவான வரிகள்.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி, கோவையில் எங்கே?

    ReplyDelete
  7. pun in words beautiful Nagaraj sir !! Thanks for sharing

    ReplyDelete
  8. நீண்டு கிடந்து நீலமாய்,
    நீங்காத அலைகளின்றி
    நீள் விழிகள் இமை மூடிக்
    கண்ணயர்ந்த கடலாக...

    நீ நிறைக்கிறாய்; நீரிறைக்கிறாய்.

    அழகு கவிதை திரு நாகராஜ்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete