Tuesday, January 25, 2011

ஆடுகளம்...




படம் வந்து பல நாட்கள் கழித்து அதைப் பற்றிய விமர்சனம்
எழுதுவதில் நன்மைகள் உண்டு. கதை சொல்ல வேண்டாம்.
மேலும், அந்தப் படத்தை எல்லோரும் பார்த்து அவரவர்க்கும்
ஒரு கருத்து ஏற்பட்டபின்னர் அதை வம்புக்கிழுப்பதில் தான்
பகிர்தலின் உள்ளீடான சுவாரஸ்யம் இருக்கிறது. "என்ன இது!
தனுஷ் பேர் போடறாங்க... ஒரு கைதட்டல் கூட இல்லியே!"
ஆச்சிரியக் குரல் ஒன்று வெளிப்பட்டது, அருகிலிருந்து. ஆனால்,
ஏற்கனவே படம் பார்த்தவர்கள் உள்ளே இருந்தார்கள்; விசிலும்
அடித்தார்கள், டாப்ஸி என்ற பெயருக்கு. 

வெள்ளாவி வெச்சது மாதிரி இருக்க.. வெயிலே பட்டதில்லையா
ஒம்மேல என்ற வியப்பு நாடு முழுவதும் விரவிக்கிடக்கிறது.
இயக்குனர் வசந்த் கூட 'அழகு குட்டிச் செல்லம்' என்ற பாடலுக்காக (சத்தம் போடாதே) பின்புறங்கள் பிங்க் நிறத்தில் இருக்கும் குழந்தையைத் தேடியதைச் சொன்ன ஞாபகம். ஆனால், மனைவி கோதுமை நிறமாய் வேண்டும் என்ற ஆவலின் அடிப்படை,அப்படி ஒருத்தியை ஆளவேண்டும் என்ற வேட்கை.

***********************************************
ஊருக்குப் பொறாமை.


என்னவள்
அழகிய மனைவியாம் - அவள்
ஆங்கிலம் அருவியாம்...
அவள் முதுகுக் கீறல்களை
உறுத்தும் கரு கூந்தல்
என் கைப்பிடிக்குள்...


ஊருக்கு...
பொறாமை.

(கணையாழி ஜூன்  93).

**********************************************

மதிப்பீடுகளை முன்வைக்காமல் நிகழ்வுகளைக் காட்டிச் செல்லுதல் நன்றாகத் தான் இருக்கிறது. அது இயக்குனரின் முதிர்ச்சி. விமர்சகர்கள் அப்படி அல்ல. நாலும் சொல்ல வேண்டும். சாவலுக்காக அம்மாவிடம், 'ஒன்னைய கொண்டே போடுவேன்' என்று சொல்லும் தனுஷை அனேகமாக எல்லோரும் ரசித்தனர். அந்த ரசிப்பின் காரணம் வட்டார வழக்கு. அதை வேறு ஒரு இடத்தில் பிரயோகம் செய்திருக்கலாம்.  'அம்மா கூட படுத்தவன் எல்லாம் அப்பனா? வெரலப் புடிச்சு கூட்டிகிட்டு போய் நல்லது கேட்டது சொல்லித்தறவன் தான் அப்பன் என்ற விவரமான வசனமும் அப்படித் தான். விவாதமெனில், பதில் கேள்வி வரும்.  ஆனால், இது இப்படித்தான் என்ற, குடியரசு தினமானாலும் நாலு படம் டீவீல என்று சந்தோஷிக்கும் மனதில், சரி அப்பன் இப்படி இருக்கணும், ரைட்டு... புள்ள? என்ற கேள்வியை எழுப்பினால் தேவலை.  கிரிக்கெட், கபடி, சேவல் சண்டை, புறா பந்தயம், கோலி என்று களனுக்குப் பஞ்சமில்லை. வில்லனையும் விளையாட்டையும் அருகே வைத்து குறுக்கே காதலை ஓட்டி சேர்த்துவிட்டால் படம். மாறன், வெற்றி பெற்றது சரியான நடிகர் தேர்வினாலும் அதைச் சொன்ன விதத்தாலும். 

தொய்வில்லை என்ற போதும், பேட்டைகாரனை துரோகம் செய்பவனாய் தனுஷ் அறிந்துகொள்ளும் போதுதான் ரசிகனும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற லெவலில் மாறன் மெனக்கேட்டதில், பிற்பாதி நீண்டுவிட்ட தோற்றம் இருக்கிறது. சேவலையும் இன்னொன்றையும்,  ப(ய)ன்-படுத்தி, ஐரினிடமும்  (taapsee pannu)  அவள் பாட்டியிடமும்,  i am... cock வுட்டிங்... biggu.. என்று தனுஷை பண்ணவைக்கிற Blue Comedy-ஐ விட, மூராசில் சேவல் தோற்கும் போல இருக்கையில், "ஒங்க சாவல் ஜமீனாகப் போகுதுடியேய்.." என்ற கிண்டலுக்கு, "அடிக்கும்னு தான் சொன்னோம்..எந்த சாவல்னு சொன்னோமா?" முருகதாஸ் கேட்பது அருமை. 

குணா, அங்காடி தெரு, சுபிரமணிபுரம் மூன்றும் நினைவுக்கு வந்தன. கருப்பு, ஐரினைப் பின் தொடர்கையில் ஆடி ஆடி வருவது பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருந்தது. :P இரவில் ஊர் சுற்றுவது பெண் விடுதலையின் குறியீடாக, உன் கட்டுகளை நான் அவிழ்ப்பேன் (PI) என்ற உறுதிமொழியாகக் காட்டுவது இருக்கட்டும்;  அதை அவ்விதமாகவே பெண்கள் ஏற்கிறார்களா அல்லது traffic police பார்த்திபன் ஆட்டோ திருடிய வடிவேலுவிடம் "நெனச்சடா",  என்பது போல, ஏற்பாள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறதா? பேட்டைக்காரனிடம் வன்மம் கொண்ட இரத்தினசாமி இத்தனை கொலைகளுக்கிடையில் தலையே காட்டாதிருப்பது ஏன்?  கைல என்ன வெச்சிருக்கானோ என்ற  கிஷோரின் படபடப்பு நன்று. 

படம் முடிந்து வெளியே வந்ததும், அலைகள் ஓய்வதில்லைக்கும் இதற்கும் என்ன வித்யாசம் என்றேன். ஏற இறங்கப் பார்த்த அருணிடம், "அதுல சூர்ய அஸ்தமனத்தப் பாத்து காதலர்கள் ஓடுவாங்க;  இதுல இருட்டுக்குள்ள எங்கியோ! இது தான் வித்யாசம்...", என்றேன். (ஒரு வேளை இன்ஸ்பெக்டர் இருக்கும் தைரியமோ?) அதன் பிறகு காதலர்கள் எங்கே சிங்கியடித்தார்கள் என்பதை வசதியாக யாருமே காட்டுவதில்லை.  

இருமை, வாழ்வின் கவிதை என்று வரிகளை "யாத்த" ஜெயபாலன் படத்தின் பெரும்பலம். ராதா ரவியின் குரல் கொடுக்க, அம்முகம் காட்டும் அஹங்காரம்,  வஞ்சகம், வேண்டுதல், வெறுப்பு, மகிழ்ச்சி, பெருமை எல்லாமே அழகு.  ஆனால், சிலோன் கார அண்ணாச்சிய நம்பினா வெளங்குமா என்ற  பாத்திரத்துக்கும் மனிதருக்குமான (நம்பியார்) பிறழ் புரிதல் வெகுஜன அபிப்ராயமாக மாறாதிருக்கட்டும். 

எண்பத்தி ஒன்பதின் இறுதியில் பெரம்பூர் வந்ததும், ஈரோடு ரயில்வே காலனி போலவே இங்கும் நிறைய ஆங்கிலோ-இந்திய குடும்பங்கள் இருந்தன.  வேலையற்று வெட்டியாய், சிகரெட்-பீடியுடன் உடைந்த ஆங்கிலம் பேசித் திரியும், அழுக்கு ஜீன்ஸ்-கூலிங் கிளாஸ் இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன்.  திரு.வி.க. நகர் கழகக் கண்மணிகள் அவர்களை "பீத்தொற" என்று அடிக்குரலில் கிண்டல் செய்வார்கள்.  தனுஷுக்கு இப்படத்தில் பன்ச் டயலாக் இருக்கிறது. "நாங்க எல்லாம் சுனாமியிலே சும்மிங் போடறவங்க..." ஒரே ஒரு முறை வருவதாலும், ஜி.வி.பிரகாஷின் யாத்தே யாத்தேயின் புயல்-இடி-மின்னலிலும் 
அது கரைந்து விடுகிறது.

"அடுத்த சென்மமுன்னு ஒண்ணு இருந்திச்சின்னா, மவனே நீ (சே)சாவலா இல்ல, இதே மாதிரி ஒரு பக்கியும் இல்லாத எடத்துல அடி வாங்கணும்; நாந்தேன் ஒன்ன தூக்கிகிட்டு போய், துணியக் கொளுத்தி கரிச்ச பொடி ஒத்தடம் குடுக்க்கணும்டா..." என்று ஒரு க்ராப்போ, போந்தாவோ சபதமெடுக்கும் முன்பு வேறு படம் வந்துவிடும்.  அதற்குள், இன்னொரு முறைகூட பார்க்கலாம், ஸ்வாரஸ்யமான படம். 

10 comments:

  1. அட! சினிமா விமரிசனம் கூட எழுதுவீர்களா! படம் எப்படியோ தெரியவில்லை. விமரிசனம் அருமை.

    ReplyDelete
  2. நன்றி! அருமை!

    ReplyDelete
  3. இந்த படத்தை நான் பார்க்கவில்லை, பார்ப்பதாய் உத்தேசமும் இல்லை. ஆனால் உங்கள் விமர்சனம் படித்து, தமிழாலும், வர்ணனையினாலும் நெகிழ்ந்தேன். சிறு வயதில் "ஆனந்த விகடன்" படிக்கும் பழக்கம் இருந்தது எனக்கு. எவ்வளவோ பத்திரிக்கைகள் சினிமா விமர்சனம் எழுதிய போதிலும், விகடன் விமர்சனத்தை காத்திருந்து படித்த நாட்கள் ஞாபகம் வந்தது. நாகராஜ் சார், பலே!

    ReplyDelete
  4. மிக்க நன்றி ஸ்ரீ RK. அவ்வப்போது மற்ற பதிவுகளையும் படித்து, தங்கள் பின்னூட்டங்களை இடுங்கள்... :)

    ReplyDelete
  5. அவசியம் செய்கிறேன்....எனக்கும் பதியும் பழக்கம் உண்டு...நீங்கள் அறிவீர்களா என்று தெரியவில்லை.....நேரம் கிடைக்கும் போது
    இங்கு
    சென்று பார்ப்பீர்களாக.

    ReplyDelete
  6. ம்ம்ம்ம்ம்?? சினிமா விமரிசனமா?? கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாப்போல் இருக்கு! படம் பார்த்து அதாவது வெளியே சென்று தியேட்டரில் பார்த்து எத்தனையோ வருஷங்கள். அவ்வப்போது தொல்லைக்காட்சிப் படங்களை அங்கொன்றும், இங்கொன்றுமாய்ப்பார்க்கிறச்சேயே வெறுப்பு வருது! சாரி! :))))))

    ReplyDelete
  7. Chithappa, indha padam vandha mudhal naale parthutten. Adutha naal Emotional Egambaram comedy partha piragu dhan ennala konjam" sirikkave mudinjudhu!

    ReplyDelete