Friday, July 17, 2009

சங்கீத கலாநிதி திருமதி D.K.பட்டம்மாள்



நான் சென்னை வந்த புதிதில், வானொலியில் இசைப் பயிற்சி நிகழ்ச்சியில் முதலில் கேட்டது பட்டம்மாவின் கல்யாணி தான். "கணபதே மஹாமதே" -வை அவர் சொல்லிக்கொடுத்த விதம் கேட்டு மயங்கவில்லை, மாறாய் தெளிந்தேன். அது பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லியது.

பாரதியிலிருந்து தீக்ஷிதர் வரை, தாமரை மலர் ஒன்று கண்டேன் முதல் பல்லவியின் மிஸ்ர கதியைக் கூட, மூன்றரையாக இல்லாமல் ஒரு விரலின் அசைவில் நிலைப்படுத்தும் லயம் வரை எல்லாம் முடிந்ததுஅவரால்.

அவர்கள் ஒரு முறை கலாக்ஷேத்ராவில் கௌரவிக்கப்பட்டபோது, அந்நிகழ்ச்சியை அடுத்து, உமையாள்புரம் சிவராமன் சார் கச்சேரி இருந்தது. பட்டம்மா மாமி, சிவராமன் சாரை அழைத்தார்கள்...

DKP: சிவராமா... நமஸ்காரம்...
UKS: என்ன இது... நீங்க எனக்கு நமஸ்காரம் சொல்லலாமா.. நாந்தான் உங்களுக்கு சொல்லணும்.. நீங்க எனக்கு ஆசீர்வாதம் பண்ணனும்...
DKP: உனக்கு ஆசீர்வாதம்... உன் வித்தைக்கு நமஸ்காரம்..

சங்கீதம் தவிர ஒன்றறியா உபாசனை செய்து வந்த மற்றுமோர் விளக்கு. விளக்குகள் உடையலாம், ஜ்வாலையின் தீஞ்சுடரும் வெப்பமும் எங்கு செல்லும்? ஒளிக்கேது பின்னம்? அவைஅணைவதேயில்லை.

அவை அணைக்கும்;ஆரத் தழுவும்; ஆற்றுப்படுத்தும்.
அழுத்தமான சங்கீதத்தால் வருடிக்கொடுக்கும்.
அளந்து வைத்த சங்கதிகளால் அகண்டமாகும்.

4 comments:

  1. // DKP: உனக்கு ஆசீர்வாதம்... உன் வித்தைக்கு நமஸ்காரம்.. //

    ஆகா என்ன பணிவு! நல்ல anecdote அண்ணா.

    // விளக்குகள் உடையலாம், ஜ்வாலையின் தீஞ்சுடரும் வெப்பமும் எங்கு செல்லும்? ஒளிக்கேது பின்னம்? அவைஅணைவதேயில்லை. //

    அதே. பட்டம்மாள் பற்றிய எனது அஞ்சலியிலும், இறுதியில் இதே போன்று எழுதியிருக்கிறேன் -
    http://www.tamilhindu.com/2009/07/dk-pattammal-anjali/

    படித்து கருத்து சொல்லவும். நன்றி.

    ReplyDelete
  2. நாகராஜ்,

    மறுமொழிகள் போடும்போது வரும் அந்த word verfication ஐ எடுத்து விடுங்கள். கமெண்ட் போடுபவர்களுக்கு எரிச்சலூட்டும். எனிவே, கமெண்ட் மாடரேஷன் இருப்பதால் உங்களுக்கு பிரசினையில்லை.

    ப்ளாக்கர் உள் சென்று settings -> comments மூலம் இதை செய்யலாம்.

    ReplyDelete
  3. DKP: உனக்கு ஆசீர்வாதம்... உன் வித்தைக்கு நமஸ்காரம்..//

    விநயம் கண்ணீரை வரவழைக்கிறது. நன்றி.

    ReplyDelete
  4. நல்ல அஞ்சலி.
    பாரதியார் பாடல்கள் பிரபலமானதற்கு டி கே பி யின் இசைத் தட்டுகளும் ஒரு காரணம்.

    ReplyDelete