Saturday, July 4, 2009

ஒரு சுவாரஸ்ய கடிதம்...

ஜெயமோகனின் "மீசை" படித்துவிட்டு அவருக்கு எழுதியிருந்தேன்.

Dear J,


ஒரு நாள், என்னுடைய குரு, உமையாள்புரம் சிவராமன் சார், “ஏண்டா… எதுக்கு மீசை… அதை எடுத்துடேன்”, என்றார். மறுநாள் சரஸ்வதி பூஜை. இன்னிக்கு மீசையை எடுத்துட்டு, நாளைக்கு விஜயதசமிக்குப் போய் மீசை இல்லாம ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கணும் என்று, எடுத்துவிட்டேன்.

“இப்போ தான் ஒரு ஜீனியஸ் லுக் இருக்கு”
“இன்டெலெக்சுவல் களை”
“மொழு மொழுன்னு இருக்கேள்”… என்று பலவிதமாய் காம்ப்ளிமெண்டுகள் காற்றில் பறந்தன.

மீசை, உடல் உழைப்பின்-வாசிப்பின் சின்னச்சின்ன சிரமங்களை ரகசியப்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது சாதாரணமாக வாசித்தாலும் எவரேனும் வநது, உடம்பு சரியில்லையா என்று கேட்டார்கள். முடியும் வெட்டிக்கொண்ட தினத்தில், டாக்டர் ஸ்ரீனிவாசன் “அப்பா சௌக்கியமா இருக்காரோன்னோ..” என்றார்.
மூன்று மாதத்தில் மீண்டும் மீசையிடம் சரண் புகுந்தேன்!
ஈரோடு நாகராஜன்.
இதுதான் வித்தியாசம். என்னிடம் எல்லாரும் மீசை எடுத்தபின் ”என்ன சார் சீரியஸா ஏதாவது யோசிக்கிறிங்களா’ என்றுதான் கேட்கிறார்கள்.
ஜெ (ஜெயமோகன்)

5 comments:

  1. எங்கள் ஊரில் போகி காலத்தில் பகல் வேஷம் கட்டிக் கொண்டு சிலர்,
    பணக்காரர்கள் வீட்டிற்குச் சென்று, ஆடிப் பாடி வசூல் செய்வார்கள்.
    அவர்களில் சிலர் - ஒரு பக்கம் மீசையும் (வரைந்ததுதான்) மறு பக்கத்தில்
    மழுங்கச் சிரைத்து மஞ்சள் பூசியவர்களாகவும் இருப்பார்கள் - சிவன் ஆகப் பாடும் பொழுது மீசை பக்கம் திறந்து மறுபக்கம் முக்காடிட்டிருப்பார்கள். பார்வதி ஆகப் பாடும் பொழுது vice versa. உங்கள் பதிவைப் ப்டிக்கும் பொழுது அதுதான் நினைவிற்கு வந்தது.

    ReplyDelete
  2. ஹிஹிஹிஹிஹிஹி!!!!!!!!!!அடையாளம்!!!!!

    ReplyDelete
  3. நான் கூட ஒருக்கா மீசைய எடுத்திட்டு அமர்க்களம் பண்ணிட்டிருந்தேன்.. கல்யாணம் முடிவு பண்ணினாங்க. எங்கம்மா, வீட்டுக்காரம்மா ​தொந்தரவு தாங்க முடியாம திரும்ப மீசை வச்சுக்கிட்டேன்.
    முன்பு மீசை எடுத்திருந்தப்போ பாக்கறவங்க ​​கேப்பாங்க
    "எங்க மீசைய காணோம்?"
    "தும்மும்போது கீழ விழுந்திருச்சுங்க"

    ReplyDelete
  4. i did try this once. somebody commented that my meesai was brown in colour and if i shave and let it re-grow it would become black. did try being mozhu-mozhu for a few weeks. aathula ore sandai, thittu... and it wasnt getting darker anyway.. so, back to having mustache.. ippo kooda shave panracha, yeduthudalaama-nu thonum.. but kai varaadhu :P

    ReplyDelete