Sunday, June 28, 2009

பொதுத் தேர்வு ரத்து :) :)

B.Com-ஐ முடித்துவிட்டு அப்பாவின் நண்பருக்குத் தெரிந்த இடத்தில் ஏதேனும் வேலைக்குச் சேருதல் எடுபடாத காலம் இது. தான் என்னவாகப் போகிறோம் என்பதை ஒரு மாணவன்/வி
தீர்மானிக்கும் வயது குறைந்து கொண்டே வருகிறது...

"எங்க நாள்ல எல்லாம் ஒக்காரரதுக்கு பதனாறு பதனேழு வயசாச்சு... இப்போவெல்லாம் ஒம்போது பத்துலையே ஒக்காந்துடறா" என்று பாட்டிகள் அங்கலாய்ப்பது போல. (ஆமாம் இந்த கலாய்க்கறதுக்கும் அங்கலாய்க்கறதுக்கும் என்ன தொடர்பு?)

படிப்பு, அனுபவம், வசதிகள், காதல், காமம் எல்லாமே முன்தேதியிட்டு நடந்துவிடுகின்றன, அரசு அளிக்கும் சம்பள உயர்வு போல.

பத்தாவதோ ப்ளஸ்-டுவோ இரண்டிலும் விருப்பப் பாடம் தவிர மற்றவற்றையும் மிகுந்த கவனத்துடன் படிக்க வேண்டியிருப்பதால் அவ்வருடம் முழுவதுமே, புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்று முனைப்புச் சிதறல் ஏற்படுகிறது.

எட்டாம் வகுப்பிலேயே தான் ஒரு கணிதவியல் நிபுணனாக வேண்டும் என்று ஒருவன் தீர்மானித்து விட்டாலும், தன் முழு கவனத்தையும் கணிதம், மொழியின் வளமை, யதார்த்த வாழ்க்கைக்குத் தேவையான மேலாண்மைத் தகுதிகள், நாளிதழ்களும் வலைப்பூக்களும் தரும் பொது அறிவு, விவாதப் பண்பு மற்றும் communication skills இவற்றில்ஆழமாக வைக்கலாம் என்றால், ம்ம்ஹும்...

"NACL and H2O + கொதிக்கின்ற தண்ணீர் நொதித்து வரும்போது எழுகிற புகையை ஒரு குழாயில் பிடித்து..."

"கடலைகளும் ஒதங்களும் பற்றித் தெரிந்துகொள்ள ஜெர்மெனியின் ஆராய்ச்சியாளர் நாடா மாயா கூறும்..."

"பகுபதப் பண்பிலக்கனம் என்பது ஒரு வார்த்தையின் திரிபிலிருந்து வரும் தனக்குரிய மாத்திரையில் குறைந்தொலிக்கும் குற்றியலுகரத்தை..."

நாராயணா... இதையெல்லாம் ஒரு கட்டத்தில் கழட்டிவிட்டு என்னுடைய பாடத்தில் என் முழு கவனத்தையும் வைத்து, நான் வளரும் காலத்திலேயே என் துறையும் வளர்கிறது என்ற உண்மையை உணர்ந்து, அதன் update-களுடன் என் அறிவையும் தேடலையும் சமன் செய்துகொண்டே என் வேலையை நான் செய்வது, offering the fullest concentration and the best of my ability என்று என் வேளையில் நிம்மதியாக ஈடுபடுகின்ற வாழ்க்கை, இவற்றுக்கு இந்த பொதுத்தேர்வு முறைகள் இடைஞ்சல் என்பது என் அபிப்பிராயம்.

கல்லூரிக்கு செல்லுமுன், ஒருவன் எந்தத் துறையை விரும்புகிறானோ அதைப் பற்றிய theoretical knowledge-ஐயேனும் வளர்த்துக் கொண்டால், முழுமையான practical knowledge அவனுக்கு கல்லூரிச் சூழலில் கிடைத்துவிடும். அப்போது, அவசர அவசரமாக நான்கு வருடங்கள் தடவுகிற விஷயங்களை அப்போது நிதானமாகவோ அல்லது தெளிவாக மூன்று வருடங்களிலேயோ படித்து விடலாம்.

எந்தத் துறை சம்பந்தப் பட்ட விஷயத்தையுமே, புரிந்துகொண்டு படிப்பதற்குப் போதுமான கால அவகாசமோ (breathing time) பொறுமையோ இன்றி குழறுவதும் குழப்புவதும் தடுக்கப்படும். மனப்பாடம் செய்து ஒப்பித்து விடுவது எளிமையான வழியாகத் தோன்றுவதற்கு இது ஒரு முக்கியமான காரணம். அப்போ, அதானே எல்லாரும் பண்ணுவான்?

மேலும், கலையிலோ விளையாட்டிலோ இருக்கின்ற திறமைகள் கூட சரியான முறையில் இனங்காணப்பட்டு ஊக்குவிக்கப்படாத நிலைக்கும் இது ஒரு காரணம்.

Also , Stress and anxiety, results in obesity and in a life enveloped with tension and anger. தானே விளையாடுதலில் இருக்கும் ஆனந்தம் அறியாமல் பதினொரு பேர் நாள் முழுதும் விளையாடுவதை வீட்டுப் பாடமும் அசைன்மென்ட்டும் எழுதிக்கொண்டே பார்க்கிற அவலம் என்பது, துணையிருந்தும் நீலப் படம் பார்த்து மைதுனம் செய்து மனம் பிழறும் நிலைக்கு ஒப்பானது.

மருத்துவம், சங்கீதம், மொழியிலக்கணம் போன்றவை குறித்த பொது அறிவு தான் நமக்கு இருக்கிறது. அதற்கு மேலே தேவையென்றால் கற்றுக்கொள்ளவோ குணமடையவோ அதற்குரியவரிடம் போகிறோம். அது போல, அறிவியலோ சரித்திரமோ ஏதாவது தேவை என்றால் கோழி, "பறப்பதைப்" போல தெரிந்து கொண்டுவிட்டு, எஞ்சிய நேரத்தில் கிளரும் வேலையை சரியாகச் செய்தால் வாழ்க்கை சுமுகமாகும்; குஞ்சுகளும் பிழைத்துக்கொள்ளும்.

இந்நிலையில், பொதுத் தேர்வுகள் என்று சகல பாடங்களுக்கும் செலுத்தப் படுகின்ற முனைப்பு சற்று, விருப்பப் பாடங்களின் நுழைவுத்தேர்விற்கென்று முழுவதாகப் பயன்படுத்தப்படும் சூழல் வரவேற்கத்தக்கதே.

இன்னும் சற்று நேரம் கிடைக்கும்...

எனக்கே எனக்கான
என்னுடைய வாழக்கையை
அறுபதும் ஆகியபின்

தேடலுக்கு களைத்து
தேக்கி வைத்த உணர்வுகளை
கனவில் மட்டும் கண்டு மகிழாது,

இன்றே..
இப்பொழுதே...

வாழ்தலுக்கும் வரைவதற்கும்
வாயையே திறக்காவிடினும்
வம்புகளைப் "வலை"யறுத்துப்
பூக்களைப் படிப்பதற்கும்
பதிப்பதற்கும்...

இன்னும் சற்று நேரம் கிடைக்கும்...
10 comments:

 1. EN - i read this 2 to 3 times....
  I am not able to understand what is your conclusion.
  Support 10th std exam - canceling
  or
  oppose it????
  Pl let me know.
  (No offense meant pl)

  ReplyDelete
 2. dear G,

  :) :) how can i mistake you.. :) :)

  the smileys in the header,

  and these lines...

  " என்னுடைய பாடத்தில் என் முழு கவனத்தையும் வைத்து, நான் வளரும் காலத்திலேயே என் துறையும் வளர்கிறது என்ற உண்மையை உணர்ந்து, அதன் update-களுடன் என் அறிவையும் தேடலையும் சமன் செய்துகொண்டே என் வேலையை நான் செய்வது, offering தி fullest concentration and the best of my அபிளிட்டி என்று என் வேளையில் நிம்மதியாக ஈடுபடுகின்ற வாழ்க்கை இவற்றுக்கு இந்த பொதுத்தேர்வு முறைகள் இடைஞ்சல் என்பது என் அபிப்பிராயம்"


  "இந்நிலையில், பொதுத் தேர்வுகள் என்று சகல பாடங்களுக்கும் செலுத்தப் படுகின்ற முனைப்பு சற்று, விருப்பப் பாடங்களின் நுழைவுத்தேர்விற்கென்று முழுவதாகப் பயன்படுத்தப்படும் சூழல் வரவேற்கத்தக்கதே."

  "இன்னும் சற்று நேரம் கிடைக்கும்..."

  ReplyDelete
 3. Very soon we would be witnessing a "Fasting" protest by Tution Centre owners/employees ! Am I wrong dear E.N sir?

  ReplyDelete
 4. நேக்கு புரியல ..........(நன்றி "மைகேல் மதன காமேஸ்வரன்")
  இரண்டு வார்த்தைகளில் - அல்லது வாக்கியங்களில் சொல்லக் கூடாதா?
  நீள வாக்கியங்கள் (கவனியுங்கள்: நீல அல்ல) எழுதுவதில்
  சாண்டில்யனை மிஞ்சிவிடுவீர்கள் என்று நினைக்கிறன்!

  ReplyDelete
 5. //விளையாடுதலில் இருக்கும் ஆனந்தம் அறியாமல் பதினொரு பேர் நாள் முழுதும் விளையாடுவதை வீட்டுப் பாடமும் அசைன்மென்ட்டும் எழுதிக்கொண்டே பார்க்கிற அவலம்//
  இது உண்மைதான். வீட்டுப்பாடம் தருகிற ஆசிரியர்கள், பள்ளிக்குப் பிந்தைய குழந்தைகளின் கால அட்டவணையையும் உத்தேசிக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்கால இந்தியாவில் விளையாட்டு மைதானங்களை மூக்குக்கண்ணாடிக் கடைகள் முழுங்கிவிடும் ஆபத்து அதிகம். மற்றபடி நான் கிரிக்கெட் பார்ப்பதை விட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகிவிட்டன. அந்த விளையாட்டின் அபரித போஷாக்கே இதற்கு காரணம்.

  ReplyDelete
 6. Dear N,

  You are right.. They may follow yellow shawl..

  G... neeLa vAkkiyangaL dhAn.. i am a bachelor and don't wanna get into "blues" :D

  J... you are right...

  nice comments..

  ReplyDelete
 7. அண்ணாத்தே!
  நாகர் கோயில்-2 நெறைய "பச்சையா" இருந்தது அப்டின்னு சொன்னேன்.
  அதுக்காகவே "மஞ்ச" துண்ட சம்பந்தேமே இல்லாம இழுத்துருகீங்க போல.

  இப்போ இந்த லைன் வேற. ///(... neeLa vAkkiyangaL dhAn.. i am a bachelor and don't wanna get into "blues" :D)////

  கொஞ்சம் கூட சரி இல்ல. :-P
  ஆமாம். சொல்லிட்டேன். :-D

  ReplyDelete
 8. //படிப்பு, அனுபவம், வசதிகள், காதல், காமம் எல்லாமே முன்தேதியிட்டு நடந்துவிடுகின்றன, அரசு அளிக்கும் சம்பள உயர்வு போல.//

  ரசிக்க வைக்கின்ற எழுத்து

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete