Saturday, June 27, 2009

நாகர்கோயில் பயணம் - 4

திரும்பி வந்ததும், நல்ல பசி. புட்டு கடலை ஆறிப் போயிருந்தாலும் வடையுடன் நன்றாக இருந்தது. தலைவலி மிகுதியானதும், காலையிலிருந்து தேநீர் அருந்தாதது நினைவிற்கு வந்தது. சற்றே குரூரமாக, வலிக்கட்டும் கொஞ்ச நேரம் என்று வலியோடிருந்தேன்... அரை மணி கழித்து, அறை மணி அடித்து டீ வந்தது.

ஆறு மணிக்கு கிருஷ்ண பவனில் வாங்கிய இட்டிலி-பூரிகளுடன் அனந்தபுரியில் ஏறினோம். எக்மோரிலிருந்து மேற்கு மாம்பலத்திற்கு இதுவரை பல தடவைகள் வந்திருப்பினும், இன்னும் ஒரு தெளிவான வழி புலப்படவில்லை!

சற்று சுற்றிவிட்டுக்
கூடடைந்த போது... வேறென்ன?
எப்போதும் போலத்தான்...

6 comments:

  1. EN sir,
    there is a simple medicine for head ache:

    Take one handful Thulasi leaves, add 3 or 5 milagu chew and eat them.
    Drink 1 cup of hot water.
    Thalaivali poye pochu - within 20 seconds.
    kggouthaman.

    ReplyDelete
  2. புத்தகம் படிச்சால் தலைவலி எனக்கு மறந்து போகும். எல்லாருக்கும் அப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனால் காபி, டீ குடிக்கலைனு எல்லாம் தலைவலி வந்ததில்லை. :))))))))))

    ReplyDelete
  3. பெரியவரே!
    இது நாகர் கோயில் பயணம் இல்லை.
    திரும்பல்.

    இப்டி ஒரு போஸ்ட் போட்டதுக்கு, உம்மை என்ன பண்ணலாம்னு "think-கிண்டு" இருக்கேன்!
    :-D

    ReplyDelete
  4. நன்றி கௌதம் அவர்களே. கீதா அவர்களே...

    வெறும் வயிற்றில் தேநீர் அருந்திப் பழகியதால் தலைவலி வருகிறது. இரண்டு நாட்கள் மதிக்காமல் விட்டுவிட்டால் அடங்கி விடுகிறது.

    டியர் மானஸ், கிண்டும்... நன்றாகக் கிண்டும்.. கொதித்து அடங்கும் வரை கிண்டும்... காந்தியடிகளின் வாழ்க்கை என்று பாடம் வைத்தால், சுட்டுக் கொல்லப்பட்டதையும் சேர்த்து தானே படித்தீர்? பயணம் என்பது திரும்பினால் தானே, முடிவுறும்? அதுவும், அது கச்சேரி... அது திரும்பினால் தானே (தொடர்ந்து நடந்தால் தானே) i can survive? :D ஆகவே, உமக்கு தண்டனையாக ஒரு கேள்வி. கணபதியே வருவாய் என்ற பாடலைப் பாடியவர் யார்? படுபவர்யார்?

    ReplyDelete
  5. ///உமக்கு தண்டனையாக ஒரு கேள்வி. கணபதியே வருவாய் என்ற பாடலைப் பாடியவர் யார்? படுபவர்யார்?////

    இதுல மொதல் part-க்கு பதில் தெரியும். ரெண்டாவது பாதி கேள்வி தப்பா இருக்கு. (இல்லேன்னா ஏதோ உள்குத்து இருக்கு).

    அதுனால pass.

    ReplyDelete
  6. சீர்காழி கோவிந்தராஜன் என்று சொல்ல வருவீர்.. அது தான் இல்லை.. அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்குமே அந்தப் பாடலைப் பாடுவது, பிள்ளையார் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் கணபதி ஹோம சாஸ்திரிகளே!

    அவர்களுக்கு "வருவாயே" கணபதி தான்!

    ஒரு முதலியார் இருந்தார். பெரியவாளிடம் நிறைய பக்தி. ஒரு நாள், "சாமீ.. ஏதாவது பணம் கிணம் வர மாதிரி நல்ல ஸ்லோகம் இருந்தா சொல்லி குடுங்களேன்" என்றார்.

    "நீ தான் நிறைய கந்தர் அநுபூதி, அலங்காரம் எல்லாம் சொல்றயே... அதே போதுமே"

    "என்ன சாமி.. அதெல்லாம் ஒரே ஞானநூலா தானுங்களே இருக்கு..."

    " கந்தர் அனுபூதில, கடைசீல என்ன வரது சொல்லு..."

    "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..." சொன்னார் முதலியார்.

    "வருவாய் அருள்வாய்-னு வரதே.. இந்த ச்லோகத்தையே சொல்லு... வரும்.." :)

    இரண்டு மாதங்கள் கழித்து தரிசனத்துக்கு வந்த முதலியார் கண்களில் அளப்பரிய ஆனந்தம். "சாமி.. சொன்னா மாதிரி சொல்லிக்கிட்டு வரேன்... இப்போ நெறய்ய வருதுங்க..."

    ஞானியின் வாக்கு சத்திய வாக்கென்பது அதுதான்.

    ஞானி சத்தியம் சொல்வான் என்பதில்லை அதன் பொருள். ஞானி என்ன சொல்கிறானோ, அதுவே சத்தியம்.

    thank you mAnas... you made me delve deep into my guru...

    ReplyDelete