Wednesday, May 6, 2009

இட்லிவடையில் என் கட்டுரை...


Wednesday, May 06, 2009

இளைய சமுதாயத்துக்கு ஓர் இசைக் கலைஞனின் கடிதம்!

Unrated


யூத்ஃபுல் விகடனில் வந்த - மிருதங்க கலைஞர் - ஈரோடு நாகராஜின் இந்த கடித்ததை சிறந்த கட்டுரையாக இட்லிவடையில்..

அன்பு இளைஞர்/இளைஞிகளே...

படிக்கட்டுகளைப் பார்க்கும்போது, பயந்ததுண்டா நீங்கள்?

படிக்கட்டின் உயரத்தைக் கண்களால் அளந்து, தவழ்ந்து சென்று அதை நெருங்கி, இத்தனை படிகளென்று மனதில் குறித்து, கைப்பிடி இருக்கிறதா... அது தாங்குமா... அது இடது புறம் இருந்தால் எப்படி ஏறவேண்டும், வலது புறம் இருந்தால் எப்படிச் சமாளிக்க வேண்டுமென எண்ணியபடி, இரண்டு கைகளால் உடல் முழுவதும் தூக்கி இழுத்து, நகர்ந்து சென்று...

அரங்கின் வெளி முனையில் ஏறி உள்ளே பார்த்து, எதிர்ப் பக்க ஓரத்திலிருக்கும் மேடை வரை ஊர்ந்து, மூச்சிழுத்து... சக்தியைத் திரட்டி... மீண்டும் சில படிகளை ஏறி...

ஸ்வாசத்தை நிதானம் செய்து, உடலின் அயற்சியை மழுப்பியபடி சிரித்து, ஸ்ருதி கூட்டித் தொடங்கும் என் பெரும்பாலான கச்சேரிகள்.

கோடைக் காலப் படிகள் காய்ந்திருக்கும்; கடந்து விடுவேன் கையுறைகளுடன்.

மழை பெய்தால்?

சேற்றை மிதிக்கச் செருப்பணியும் நாகரீகம், நாங்கள் நகரும் நாலு கால் நடையை நினைப்பதுண்டோ என்றேனும்?

காய்ந்த தரையின் சிறு மண் துகளோ, கல்லோ குத்திய காயங்களை உங்கள் உள்ளங்கைகளோ, முழங்காலோ உணர்ந்ததுண்டா என்றேனும்?

கணவனை இழந்த கதையையோ, பிள்ளையைப் பறிகொடுத்த துக்கத்தையோ, எங்கோ எவரிடமோ ஏமாந்த சோகத்தையோ மறக்க எண்ணும் மனதை, கிளறுவதும் அந்த இரணத்தின் அடிவேர் துளைத்து நினைவூட்டுவதும் மனித நேயமற்ற காரியம் எனில், அது, நாகரீகத்தில் சேராதெனில்...

ஒவ்வொருமுறையும் என் ஊனத்தை, என் இயலாமையை நினைவுறுத்தி, என் பயணத்தில் படர்ந்த பேரிடராய், என் தயக்கங்களை மட்டுமே ஊக்குவிக்கும் தடையாய், என் சமூஹத்தை மூச்சிரைக்க வைக்கும் மூல காரணமாய் முளைத்து நிற்கும் படிகள், சக்கர நாற்காலி வைத்துக் கொண்டும் சமாளிக்க முடியாத நம் அரங்குகளின் கட்டமைப்புகள், ஊனமுற்றவர்களை - அவர்கள் ஆவலாய்ப் பங்கேற்க விரும்பும் விஷயங்களில் இருந்தும் தள்ளி வைப்பது... இன்றைய வளர்ந்துவிட்ட விஞ்ஞான உலகின் வெட்கம் தரும் வேதனைகளில் ஒன்று..!

உங்களுக்குத் தெரியுமா?

Lift இல்லாத மாடிகளின் எண்ணிக்கயைப் போலவே, lift-ஐ அடைவதற்கே ramp இல்லாமல், பல படிகள் ஏற வேண்டிய நிலையில் தான் அரங்குகளும், பொது இடங்களும், கழிவறைகளும் உள்ளன. அதிலும் சில இடங்களில் ramp-கள், ஒருபுறம் சரிவாகவும் மறுபுறம் படிக்கட்டுகளுடனும் இருக்கின்றன!

சாலையின் இருபுறமும் இருக்கும் நடைபாதை கூட ramp இல்லாமலும், பாதையின் நடுவே, கடக்க முடியாத விளக்குக் கம்பங்களும் கொண்டவைகளாகத்தான் இருக்கின்றன.

எண்ணிக்கையில் குறைந்தவர்கள், பெரும்பான்மை இல்லை என்ற எங்களின் நிலையோடு இந்த சங்கீதக் கலையைக் கேட்டு ஆதரிக்கும், பாடிப் பங்களிக்கும் வயதானவர்களையும் எண்ணிப் பாருங்கள்...

அரங்கத்தையோ மேடையையோ அணுக முடியாத கவலைகளில் எத்தனை நாட்கள் எல்லாவற்றிலிருந்தும் தள்ளி இருப்போம்?

எத்தனை நாட்கள் தான் உடல் பலத்தின் உறுதியை நம்பி பொறுத்துக்கொள்வோம்?

துஷ்டனைக் கண்டால் தூர விலகலாம்; துயரங்களை?

எங்களின் ஊனத்தினால் நாங்கள் மேற்கொள்ளும் துயரங்களுக்கு, பரிதாபப் பார்வைகள் பலனளிக்காது.

"If you are not part of the solution then you are the problem"

Please, provide us ramps and make the places user friendly for the physically challenged.

இன்றைய இளைய சமுதாயத்துக்குப் புரிதல் ஏற்படவே இக்கடிதம்!

வாழ்த்துகளுடன்,

ஈரோடு நாகராஜ் - மிருதங்க கலைஞர்

என்னைப் பற்றி மேலும் அறிய...

http://ramsabode.wordpress.com/2006/10/07/erode-nagaraj/
http://www.chennaionline.com/chennaicitizen/2004/02nagarajan.asp
http://www.nscottrobinson.com/southindiaperc.php

( நன்றி: யூத்ஃபுல் விகடன் )

16 Comments:

Erode Nagaraj... said...
aahaa... enna ore inba adhirchi!! ikkaruththu makkalai sendradaivadhil idly-vadaiyum pangukondadhu... thank you... thanks a lot...
மானஸ்தன் said...
ஆஹா! அருமையான கலைஞர். (மு.க. அல்ல). பல (நல்ல) முகங்களைக் கொண்டவர்! (தமிழ்குடிதாங்கி அல்ல) நல்ல நண்பர்! (திருமா அல்ல!)...நல்ல சிந்தனைகளைத் தூண்டும், சிரிக்க வைக்கும் செந்தமிழன்! கடின உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் முன்மாதிரியான ஒரு உதாரண "புருஷன்" - பேச்சு ஆளர்! (bachelor)!)! மொத்தத்தில் எனக்கு ஒரு நல்ல அண்ணா! (மு.க. வின் அண்ணா அல்ல!)...
UMA said...
உடல் ஊனமுற்றோரை கவனித்து அவர்களுக்கு பொருத்தமாக கட்டுமானங்கள் செய்யப்படவில்லை என்பதை அழுத்தமாக எழுதிஉள்ளார். இப்போது கட்டப்படும் வீடுகளில் வீட்டுக்குள் நிலைகள் , படிகள் இல்லாமல் ஒரே சமதளத்தில் அறைகள் உள்ளன. அதே போல் வெளிநாடுகளிலும் சாலையிலிருந்து கடைகளுக்குள் செல்லவும் வேறு கட்டிடங்களுக்குள் செல்லவும் படிகள் இல்லாமல் ஸ்லோப் ஆக பாதைகள் இருப்பது போல் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். அது வயதானவர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும்.
vinoth kumar said...
really good one
Anonymous said...
I have been in US and UK for a long time and visited lot of places in these countries. Any physically challanged persons can go anywhere without anyone's help. Right from the apartment to the main road and to any shoping area there entry and exit point pathway will have a slope where the wheelchair can operate smoothly. In fact no one in these countries care about or help or feel sympathy about physically challanged people(as they dont like it) but the govt has made all the arrangements to facilitate their movements. There is separate parking slots for the PC people and you can see it empty even if all other slots(general slot) are full because you will be fined and imprisoned for any violation. Everytime I see old people and PC persons climbing the tall staricases in railway stations my heart will shed tears as I could not help them anyway. - Kamal.
Erode Nagaraj... said...
//உடல் ஊனமுற்றோரை கவனித்து அவர்களுக்கு பொருத்தமாக கட்டுமானங்கள் செய்யப்படவில்லை என்பதை அழுத்தமாக எழுதிஉள்ளார்.// Dear Uma, I am an orhopaedically handicapped guy and that is my personal experience. Most of the halls - weeding, shopping, concert etc. cares least for the disabled and old people. I went to Michigan(USA)and the priority and facilities that the differently abled are enjoying is really great. The right to live your life is balanced. As an artiste surrounded by great friends and well wishers and a guru for many, I do my travels in and around the state, measuring the length and breadth of the city on a kinetic honda 3 wheeler and living a peaceful life. But, there are many people who are not able to discover their ability and there are people who know their mettle but, opportunities denied to prove themselves. The society need to do something for them. Access denied is Avenues blocked.
Swami said...
Idly vadai .. thanks for bringing this article to limelight.. sick and tierd of reading political news..
Krish said...
நல்ல கட்டுரை நாகராஜன்! வளர்ந்த நாடுகளில் இருக்கும் வசதியைப் பார்த்தால் அதுபோல் ஏன் இங்கு இல்லை என்ற அதன்கமே ஏற்படுகிறது.
Chandrasekharan said...
First of all, I would like to thank the blog owner for posting this. I live in the U.S and the facilities for the physically challenged is simply awesome. Right from providing slopes to automated doors, they can lead a close-to-normal life. Nagaraj anna is an inspiration for everyone, who is complaining about their lives.
Anonymous said...
Very well written Nagaraj Sir.
Inba said...
திரு. நாகராஜ், புரிதலோடு, தன்னம்பிகையும் எற்படுகிறது உங்கள் கடிதம் படித்தவுடன். துயரங்களை தூசிகளாக்கி மேன்மலும் தாங்கள் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் அன்புடன் இன்பா
Ravi said...
Very well put, Nagaraj. I wonder if there something similar to US' Americans with Disabilities Act in our constitution. If not, we need something like that, which will prohibit discrimination based on disability. I think that act also forced ramps construction and other special facilities for disabled people in public places in US. How much extra does it really take to construct a ramp when they are spending crores in the building projects?
Kannan.S said...
- It is one of the best post from idlyvadai... - It is all of us to understand that we have to make arrangements for those Physically challenged people...
லவ்டேல் மேடி said...
நெம்ப அருமையான வெளிப்பாடு.....!! இந்த மாதிர் விசியங்கள் .... எடுத்து சொல்ல ஆளில்லாம போச்சு....!! உங்ககிட்ட இருக்குற தன்னம்ம்பிக்கை கூட .... என்கிட்ட இல்ல....!! உங்க கட்டுரை நெம்ப அருமையா இருக்குதுங்கண்ணா...!!! நன்றிங்கோ...!!!!
தமிழ்ப்பிரியா said...
"If you are not part of the solution then you are the problem" - கன்னத்துல பளிச்சுன்னு அரைஞ்ச மாதிரி இருக்குது...
Guru said...
Put your self in other's shoe என்பார்களே, அதைத்தான் உணர்ந்தேன். எத்தனை அழுத்தமான உண்மைகள். தடைகளை தாண்டுவது மட்டுமல்ல தடைகளை எதிர்த்து குரல்கொடுக்கவும் ஓர் வைராக்யமும் பிடிப்பும் வேண்டும். காரனம் செல்லி காலத்தை கடத்தும் என் எண்ணங்களுக்கு சவுக்கடியாக அமைந்தது உங்கள் பதிவு, நன்றி.

8 comments:

  1. லிங்க் கொடுக்க வேண்டாமா? அங்கே பின்னூட்டம் போட்டால் சரியாப் போகிறதில்லை.

    ReplyDelete
  2. oh... link is there, but font colour was in white! :D shall correct now....

    ReplyDelete
  3. அடங்கொன்னியா....!!! நாகராஜ் சார்...!! பட்டைய கெளப்புங்க....!!! நெம்ப சந்தொசமுங்கோ சார்.....!!! வாழ்த்துக்கள்....!!!

    யாருடா இவன்னு பாகுரீங்களா...????? அட... நானுமும் ஈரோடுதானுங்கோ சார்...!!! எம்பட வாழ்த்துக்கள்....!!!!!

    யூத் ஃபுல் விகடனோட ப்ரோபைல் போட்டோவே என்னோடதுதானுங்கோ சார்....!!!!!!

    ReplyDelete
  4. ஆஹா!
    அருமையான கலைஞர். (மு.க. அல்ல). பல (நல்ல) முகங்களைக் கொண்டவர்! (தமிழ்குடிதாங்கி அல்ல)
    நல்ல நண்பர்! (திருமா அல்ல!)...நல்ல சிந்தனைகளைத் தூண்டும், சிரிக்க வைக்கும் செந்தமிழன்!
    கடின உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் முன்மாதிரியான ஒரு உதாரண "புருஷன்" - பேச்சு ஆளர்! (bachelor)!)!
    மொத்தத்தில் எனக்கு ஒரு நல்ல அண்ணா! (மு.க. வின் அண்ணா அல்ல!)...

    ReplyDelete
  5. ஏனுங்க லவ்டேலு.. நீங்க ஈரோடுங்களா.. நம்பூர்காரங்களை பாத்தே நெம்ப நாளாயிருச்சுங்க.. நான் கருங்கல்பாளையம், நாடார் மேட்டுல எல்லாம் இருந்தேங்.. C.S.I.-ல ஒரு வருஷம் படிச்சனுங்க.. பெறவு, ரயில்வே காலனி முனிசிபால் ஸ்கூலுங்க... ஊருக்கு போய் நாளாச்சுங்க, மறுக்கா ஒரு வெச போகணுங்க... ஓரம்பொறைங்க எல்லாம் யாரும் அங்க இல்லீங்.. கெரகம், மெட்ராசுக்கு வந்துட்டு, டயமே இல்லீங்... பாத்தியமல்ல... நீங்க என்ன பண்டீட்டுருக்கறீங்க? ஒங்களப் பத்தி சொல்லுங்... எந்த profile போட்டோ? link?

    ReplyDelete
  6. ஆஹா மானஸ், தருணம் பார்த்து அலைவரிசையை (அல்ல-வரிசையை)போட்டிருக்கிறீர்! அண்ணா நாமம் என்பது அழிவில்லாதது. நாலு (15,000) கோடிக்கும் மேலே (கூட்)அணிவகுக்கும் நெற்றியில் சாத்தப்படுவது!

    ReplyDelete
  7. கீதா சாம்பசிவம் said...

    //லிங்க் கொடுக்க வேண்டாமா? அங்கே பின்னூட்டம் போட்டால் சரியாப் போகிறதில்லை.//

    மேடம் சொல்வது சரி. இது யூத்விகடன் முகப்பின் லிங்க் ஆகையால் கட்டுரைக்கு இட்டுச் செல்லவில்லை. இயன்றால் சரி செய்யுங்கள்:)!

    @ கீதா மேடம்,
    நீங்கள் உபயோகிக்கும் browser Firefox என்றால் யூத்விகடனில் கமெண்ட் பப்ளிஷ் செய்ய முடிவதில்லை. இதற்கு மட்டும் Internet Explorer திறந்து செய்யுங்கள் மேடம்! நான் சொல்லி பலருக்கும் உபயோகம் ஆன குறிப்பு:)!

    ReplyDelete