Wednesday, May 13, 2009

கமல்ஹாசனும் நானும்...யாராவது இந்த வருடம் ம்யூசிக் அகாடமியில் கச்சேரி இல்லை என்று வருத்தப்பட்டால், இதை இப்படியே வெளியே சொல்லாதே, "நானும் பீம்சென் ஜோஷியும் இந்த முறை அகாடமியில் பாடவில்லை" என்று சமாளி என்போம்.

மூன்று மணி அளவில், வாக்காளர் அடையாள அட்டையுடன் தி.நகர் சென்ற என்னையும் லிஸ்டில் பெயர் இல்லையென்று திருப்பியனுப்பி விட்டார்கள். ராமநாதன் தெருவிலுள்ள பள்ளியில் எனக்கு வாக்கு இருப்பதாக அறிந்து, அருண் குமாரை 'கிளப்பி' அழைத்துச் சென்றேன்.

காலையிலேயே சுறுசுறுப்பாக வாக்களித்துச் சென்றிருப்பார்கள் என எண்ணினேன். எல்லோரும் இப்படியே நினைத்து, மதியம் கூட்டமாக இருக்கும் என்று அருண் சொல்லிக்கொண்டிருந்தான்.

தெருக்கள் சற்று வெறிச்சோடி இருந்தன. பூத்திலும் ஜனங்களைக் காணோம். Ramp-ன் வழியில் ஒரு விளம்பரமும் ஒரு TVS 50-யும் நிறுத்தி வழியை அடைத்திருந்தார்கள். 'You Tube புகழ்' விஜய்யின் குருவி - வில்லு படங்கள் ஓடும் தியேட்டர் போல காற்று வாங்கியபடி இருந்தது அவ்விடம்.

"
இங்க இல்ல சார், பக்கத்து ரூம்பு"

பக்கத்து ரூமில் நிறைய காகிதங்களைக் கிழித்துப் போட்ட குப்பைகளுக்கு நடுவே மூவரும், எதிரே ஐவரும் அமர்ந்திருந்தனர்.

"
சார்... இங்க வா சார்... பூத்து சிலிப்பு இருக்கா?"

"
இல்ல..."

"
இரு சார்... பாக்கறோம்..."

ஐவரும் தத்தம் புத்தகங்களில் என் பெயரோ படமோ இருக்கிறதா என்று தேடிக்கொண்டேயிருக்கும்போது நாலு பேராக வந்த ஒரு குடும்பம் கண்டு, ஸஃபாரியில் ஒருவர் சிரித்தபடி, "நீங்க போயிட்டு வாங்க... அடுத்த Election- போடலாம்" என்றார். Presiding Officer அங்கே அமர்ந்து, இதற்கு வழி சொல்ல்லாமல் மௌனம் காத்தார்.

அவர் கவலை அவருக்கு. அதற்கான படிவத்தை நிரப்பி, முத்திரையிட்டு, கையெழுத்து வாங்கி, கவரை ஒட்டி என்ற அலுவல்களில் அலுப்பு கொண்டு பேசாதிருந்தார் என்று பிறகு அப்பா சொல்லத் தெரிந்துகொண்டேன். "இதுக்கு தான் ஒட்டு போட எல்லாம் வரவேணாம்னு சொன்னேன்" என்றான் அருண்.

மீண்டும் கைனடிக்கில் ஏறும் போது, வாசலில் உட்கார்ந்திருந்த சிலர் யாரிடமோ, இப்போது வேண்டாம், பிறகு என்று ரகசியமாய்க் கை காட்டிக் கொண்டிருந்தனர்.

வழியில் அயோத்யா மண்டபம் தாண்டி SBI - ATM வாசலில், கூட்டமாக சில பெண்கள் அமர்ந்து வோட்டு போட முடியவில்லை என்று அங்கலாய்த்தபடி அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்த ஒருவனின் பரம்பரையையே வார்த்தைகளால் மோக்ஷத்துக்கு அனுப்ப முயன்று கொண்டிருந்தார்கள்.

மூன்றிலிருந்து ஐந்து மணிக்குள் தான் கள்ள ஓட்டுகள் பதிவாகும் நேரம் என்று காற்று வாக்கில் காதில் விழுந்தது. Blog-ல் எழுதுவதற்கும் "வாக்கு" வன்மைக்கும் சம்பந்தம் இல்லை தான்.

எப்படியோ, என்னுடைய "WALK"-கினை எப்போதும் போலவே இன்றும் என்னால் பதிவு செய்ய முடியாமல் இயற்கையுடனான என் போராட்டம் தொடர்கிறது.

விஷயம் என்னவென்றால், கமல்ஹாசனும் நானும் ஒட்டு போட முடியவில்லை!


18 comments:

 1. சோகம்.com.

  ReplyDelete
 2. எனக்கும் அதே கதி தான். எங்க தெருவுல பாதி பேருக்கு மேல ஓட்டு இல்ல. ' ஓட்டு இருந்தா மட்டும் என்ன? நம்ம எந்த பட்டனை அழுத்தினாலும் DMK-வுக்கு தான் விழுதாம். அதுக்கு போடாமலே இருக்கலாம் ' அப்படின்னு மனச தேத்திகிட்டு வூட்டுக்கு வந்துட்டேன்.

  ReplyDelete
 3. நாராயணா, இந்த கொசுத் தொல்லை தாங்க முடீலப்பா என்று உம்முடன் வந்தவர்கள் யாரவது புலம்பினார்களா? :(

  ReplyDelete
 4. அங்கதான் வோட்டு விழுகலைன்னா, இங்க பின்னோட்டமும் விழுக மாட்டேன்கறது...(இங்கிலீஷ் மாடு விரட்டிடுடரா!)!!

  மொத்ததுல எல்லாத்துக்கும் ஒரே வார்த்தைதான்.
  சோகம்.com

  ReplyDelete
 5. i have never voted so far .. feeling very bad. idhukaavadhu india vandhudanum pola iruku. aana, votu poda mudiyumnu nichayam illa pola irukku neenga sollardhu.

  btw, how to type in tamizh font ?

  ReplyDelete
 6. i think there is no option here, you can do it in gamil's compose mail, in orkut scrap book or http://www.google.com/transliterate/indic/Tamil

  ReplyDelete
 7. haa, that was quick, will try that. thanks a bunch.

  ReplyDelete
 8. "Epozhudhum pol en WALK inai padhivu seiya mudiyaamal irarkayudanaana en poraatam thodargiradhu" Walk inai erode annavaal padhika mudiyaamal irukalaam aanaal avarai pol vaakinil muthirai padhipadhu migavum siramam... indha vaakiyathileye adhai niroobhithuviteergale!!!!!!!U r always a gr8 source of inspiration for all of us anna :)

  ReplyDelete
 9. Naanum erode nagaraj sir um kamal um indha vaati votu poda mudilingo:(

  ReplyDelete
 10. naanum erode nagaraj sir um indha vaati vote poda mudila:( hmmmm

  ReplyDelete
 11. நல்ல வேளையா எங்க பேர், படம் எல்லாமே அவங்களோட புத்தகங்களில் இருந்தது. ஆனால் இந்த பட்டனை அழுத்தினால் எல்லாமே ஆளும் கட்சிக்குத் தான் விழுகின்றது என்பது பற்றித் தெரியலை. என்னவோ, நாங்க போட நினைச்ச வேட்பாளர் பெயருக்குத் தான் பட்டனை அழுத்தினோம். :((((((

  ReplyDelete
 12. A lot of promises are being thrown up by every party in the fond hope of garnering a major chunk of the votes. I always feel it is because of those promises votes are known as 'walkugal(s)' in Tamil. When the downtrodden fall a prey to briyani and paisa which the so called walk-kings offer (those who have so many walks to spare), it would be clear that we can no longer say these parties make empty promises! For, they are filled with the briyani, paisa, arrack and aroma! Ada Rama! NICE A? KSR

  ReplyDelete
 13. Offering money and comforts for vote is a good sign indicating that people who do this have fell in trap where they can never satisfy people, because, these or just ghee poured on fire and not water. People will never say enough, after all they are a collection of indhriyas...

  Contentment is achieved only by showing the way and making people work for it.

  ReplyDelete
 14. My sishya said, (actually saying, he is on phone)"enga area-la oru road-ye vittuttan voter list-la"

  shall continue later..

  ReplyDelete
 15. எந்த தெருவில (TSV Kovil Street) முப்பது ஓட்டு அனாமத்தா பேர் இல்லாமல் போச்சு, அப்பிடின்னு பூத் ஆபீசர் பொலம்பிண்டு இருந்தார்... by the way, நான் அந்த முப்பதுல ஒண்ணு... :D

  KVG

  ReplyDelete
 16. :) that happened to me too, today too... :( :D

  ReplyDelete