Monday, May 4, 2009

பாலகுமாரன் என்ற இனியவர்...

9.9.2003 - 11.45 pm

நேற்று, ஓணம் முடிந்து, இரவு உணவுக்குப் பின் சக்ரவாஹம் கதையின் பின்னே, ஸ்ரீயவாளைப் பற்றி பாலகுமாரன் எழுதியிருந்ததை ஹரிஹரனுக்குப் படித்துக் காட்டியது ஆனந்தமாக இருந்தது.

காலையில் மீண்டும் அதை படித்த்துவிட்டு, கண்கள் கேள்வி பதிலை மேய்கையில், "எழுதவேண்டியவற்றை மொட்டை மாடியில் நடந்தபடி வாக் மேனில் பதிவு செய்து...." என்று கூறியிருந்ததை படித்ததும், இதே மாதிரி பெரியவாளைப் பத்தி பேசச்சொல்லி ரெக்கார்ட் பண்ணித் தரச்சொல்லணும்... என்று எண்ணம் ஏற்பட்டது.

வேறு ஒரு பதிலில், தலையணைப் பூக்கள் நாவலில் அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்றும் சூட்சமத்தில் கலந்து விட்ட ஞானியரைப் பற்றி எழுத பயமாயிருக்கிறது எனவும் படித்த ஞாபகம் வந்தது. கூடவே, ஒழுக்கக்கேடு பற்றிய கேள்விக்கு, 20அடி ரோட்டில்,4அடிக்கு குறுக்கே சைக்கிளை நிறுத்துவதற்கு திட்டும்.

எல்லாமே சாயங்காலம் மறு ஒளிபரப்பாகும் என்று அப்போது தெரியவில்லை.

காயத்ரி வெங்கடராகவனுக்கு கல்கி விருது கிடைத்த மனமகிழ்வின் பகிர்தலாய் ஏதேனும் வாங்கிக் கொடுக்க, சுந்தருடன் கபாலீச்வரர் கோவிலருகே தேடும் பொழுது, கற்பகம் ஹோட்டல் அருகே வந்ததும் பாலகுமாரனைப் பாக்கணுமே என்று நினைத்துக் கொண்டேன்.

கேஸட் ஸ்டாண்ட் நன்றாக இருந்தது, ரெண்டாய் வாங்கினேன். RK Mutt road ல், போளி ஸ்டாலில் வடை சாப்பிட்டுக் கையலம்பி, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து, கிளம்பலாம் என வண்டியை ஸ்டார்ட் செய்ய நினைத்தால்... அருகில் வந்து நின்ற வண்டியில் பாலகுமாரன்!

"அடடே! நீயா! ஸௌக்யமா இருக்கியா?"

"இன்னிக்கு காலேலதான் பெரியவாளைப் பத்தி நீங்க எழுதீர்ந்ததப் படிச்சுட்டு, இன்னிக்கு பாத்துடலாமான்னு யோசிச்சுண்டு இருந்தேன்.... ரொம்ப ஸந்தோஷம்.... நீங்க ஏழு வயசுல பெரியவா கிட்ட திருப்புகழ் பாடினது, நீ ஸூர்ய வம்சமான்னு யோகியக் கேட்டது.... எல்லாம்...."

"ஆமாம், என் குருநாதரக் கேட்டார்"

"நீங்க சொல்லீருந்தேளே, ஒரு தடவ... மொட்ட மாடீல நடந்துண்டே வாக் மேனில் பதிவு செய்துன்னு... அது மாரி, பெரியவாளப் பத்தி பேசச் சொல்லி ரெக்கார்ட் பண்ணிக்கணும்னு நெனச்சேன்.

எனக்கு பெரியவா தான் எல்லாம்... எங்காத்துக்கு எதுத்தாத்துல பெரியவா 17வருஷம் போட்டுண்டு இருந்த பாதுகையக் குடுத்திருந்தா... எங்க குல தெய்வம்கோவில் திருவண்ணாமலை பக்கத்துல... அதனால அங்க போனோம். பாதுகைக்கு பூஜை பண்ணீண்டு இருந்த TVS Rao மாமா, யோகி கிட்ட அழச்சுண்டு போனார்.

பெரியவாளப் பாக்கறதுக்கு முன்னாடி யோகியத் தான் பாத்தோம் ஒரு.. காமணி,அரைமணி போல அவர்ட்ட ஒக்காண்டு இருந்தோம். ஒரு ஆப்பிளைக் குடுத்து, "நீ ஸாப்டுன்னார்... "You are from Erode? Convey this beggar's pranams to K.V.Subburathnam Iyer" அப்படீன்னார்...

நமஸ்காரம் பண்ணீட்டு கோவிலுக்கு வந்தோம். அங்க வந்தார். அந்த ப்ராகாரத்த, செகண்ட்ல கடந்து, அந்த பக்கம் போய்ட்டார். நடக்கவேயில்ல; மெதந்துண்டு போனார். அப்புறந்தான், அடுத்த நாள் பெரியவாளண்ட போனோம். ஒரு 13,14 தடவ, எப்பவும் அவாளோட கிட்டக்க வெச்சுண்டா" என்றேன்.

"நாகராஜா... நான் அப்ப மடத்துக்கு போவேன். chain smoker. ஒண்ணு தீர்றதுக்குளே, இன்னொண்ணு பத்த வெச்சுப்பேன். ஒரு நாளைக்கு 10 பாக்கெட் - Filter Wills....

ஸதஸ் நடந்துண்டு இருந்தது...நான் 3வது rowல இருக்கேன். சலம்-அசலம் பத்தி பேசீண்டிருக்கா.. எல்லாம் Sanskrit. தமிழா இருந்தா நாமளும் உள்ள போலாம்..

நான் ரெண்டாவது row க்கு வந்தேன். குண்டா ஒரு மாமா, இந்த வோத்லா ப்ராம்மணன் தான் உண்டே, அது மாதிரி. அப்புறம் ரெண்டு தம்பதி. தம்பதிகளுக்கு குறுக்கே போப்டாதுன்னு நின்னுண்டு இருக்கேன். சிகெரெட் புடிக்கணும் போல இருக்கு.

இது சரிப்படாது. சட்டயக்க் கழட்டீட்டு கையக்கட்டீண்டு நிக்கணும்; வாயப் பொத்தீண்டு பேசறான். அது ரொம்ப ஸூக்ஷமமா பேசீண்டு இருக்கு."

"டக்னு ஒரு எண்ணம். எனக்கு குருவா இருக்கறவரும் சிகெரெட் புடிச்சா எப்படி இருக்கும்னு நெனச்சுண்டேன்... என் சகல விதமான அநாச்சாரங்களையும் பொறுத்துக்கொள்ளும் ஒரு குருவை குடுங்கோன்னு.... விவரமா பத்திரிகைல எழுதல...."

"பெரியவாகிட்ட என்னன்னா, யாராவது நெனச்சிண்டா திரும்பிப் பார்ப்பா... அப்படி பாத்தா என்னை...அடி வயத்துல என்னமோ ஓடறது.. உள்ளல்லாம் கலங்கறது.."

"ஒரு சாத்துக்குடிய உருட்டிவிட்டா... நான் எடுக்கப்போனேன், front row மாமா பாஞ்சு எடுத்துண்டா. எனக்குத்தான்னு, நேக்கு தெரியறது.. இருந்தாலும் சரி, எனக்குத்தான்னா, எனக்குக் குடுத்து தான் ஆகணும்னு நின்னுட்டேன்".

I waited with crossed fingers.

"இங்க வான்னு கையைக் காட்டி கூப்டா.. ஒரு மாம்பழம் அப்படியே கைல போட்டா..
திருவண்ணாமலைக்குப் போ"....... அப்படீன்னு சொன்னா... ந்யாயமா உடனே போயிருக்கணும்..
ஆனா, அடுத்த நாள் வேல.. அது-இதுன்னு நான் போல. உத்யோகத் திமிர்... 6 மாசம் கழிச்சுப் போனேன்.

"NOT NOW" ன்னு குரல் வந்தது.

6,7 மாசமாச்சு அப்புறம்.தொட்டு, தடவி, பார் - கடவுள் பார்னு காமிச்சார்.... நான், நீ, அந்த மரம், பூ, பூச்சி எல்லாம் சாமீன்னு தெரிஞ்சு, நான் என்னயும் அறியாம இப்படி நிக்கறேன்..."

(இடது கை மார்பிலும் வலது கை மேலுயர்த்தியும் நின்று காண்பித்தார், பகவான் ஸ்ரீ இராமக்ருஷ்ணர் அப்படி நிற்பது போன்ற நினைவுக்கு வந்தது. அதையும் சொன்னார்).

இடையில், பெரியவாள் எனக்கு உபதேசம் செய்தது, எலுமிச்சம்பழ மாலையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தால்... பல்லக்கின் கதவைத் திறக்கும்போதே கையை நீட்டி வாங்கிக்கொண்டது,
"இந்தப் பையன் மிருதங்கம் அடிப்பான்" என்றது... எல்லாம் சொன்னேன.

"நானும் யோகியும் ஆளுக்கு 9 cigarette எடுத்துண்டு ஒண்ணொண்ணா புடிப்போம். சிகரெட்டா அது? உள்ள போய் என்னென்னாமோ பண்ணும்.

"நீயா இங்க வரல... யாரோ உன்ன இந்த beggar கிட்ட direct பண்ணீருக்கா" என்பார். பெரியவா அனுப்பிச்சத சொல்லுவேன்.என்னக் கட்டீண்டு படுத்துப்பார். நெஞ்செல்லாம் தடவி விடுவார். 20,25 பேர் இருப்பா; என் கால மடீல வெச்சுண்டு விரல் விரலா அழுத்துவார். எல்லாரும் அய்யய்யோம்பா... அது காலை அது பிடிச்சுக்கறதும்பேன்.. we became one... யார் என்ன சொன்னா என்ன...."

இரவு நேர விரைதல்களால் மைலாப்பூர் இடையறாது கடக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

"குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடைல யாருமேயில்ல.. எனக்கு ஸ்மரணை, நயனமெல்லாம் போறல... உன் ஸ்பர்சம் வேணும்னு பெரியவாளைக் கேக்கறேன்.." என்றேன்.

"உன் தாபம் எனக்குப் புரியறது நாகராஜா....என் வேலை என்னன்னு யோகியக்க் கேட்டேன்...To destroy No God movement. Take youngsters closer to God" என்றார். எனக்கு இன்னோரு ஜன்மா இருந்துதுன்னா, பாலகுமாரனோட தான் இருப்பேன்னார். நான் எழுதல, என் மூலம அவர் நடத்தீண்டு இருக்கார்.

18 ஆன்மீகப் பத்ரிகை வர்றது இப்போ. I don't claim that I am the reason for this, ஆனா அப்படி ஆச்சு....

ஒரு நாள் காலைலேர்ந்து ஒரே உன்மத்தம்... முதுகுல தட்டி.... எழுப்பி விட்டு.. எங்க பாத்தாலும் சாமி... மத்யானம் கத்தறேன்... "என் குரு எனக்கு ஒரு தநுஸக் குடுத்துருக்கார்..... அத வெச்சுண்டு... I will destroy... tell me what is to be destroyed"....அப்படீன்னு கத்தறேன்".

"புருஷ விரதத்துக்கு அப்புறம் trend ஏ மாறீடுத்துல்ல" என்றேன்.

"ஆமா... ஒன் எழுத்து ரொம்ப long periodக்கு பேசப்படும்னார்".

அப்போது நிஜமாகவே, அவர் scootter பின்ன்னால் ஒருவன் 4 அடி குறுக்காக cycleஐ நிறுத்திவிட்டுப் போனான். "மடைய்யன்..." என்றபடி நகர்த்தி சரியானபடி நிறுத்தினார். காலையில் தான் கேள்வி பதிலில் படித்ததைச் சொன்னேன், சிரித்தோம்.

"எப்பிடி இருந்தேன்..... எப்பிடி மாறீட்டேன்! பெரிய்ய ரவுடி நான். ...பரத்தேவ்டியா மகனே...ன்னு தான் ஆரம்பிப்பேன். ஏகக்கோவம் வந்துரும். அடிக்கப் போவேன். இப்பவும் அந்த ரௌத்ரம் இருக்கு", என்றபடி.. முகத்தில் - உடம்பின் அலைகளில் ஐந்து விநாடிகள் அந்தக் கோபம் மின்னி மறைந்தது... அந்த ரௌத்ரம் பார்த்து சுந்தர் பயந்தான்.

"இருவது வருஷம் முன்னாடி எடுத்த photo, பத்து வருஷம் முன்னாடி எடுத்தத விட இப்பத்தான் முகம் அழகா , நன்னாயிருக்கு....இது தான் லக்ஷணம்... உள்ள மொத்த்மும் மாறீடுத்து..."

"பெரியவா உடனே போன்னு சொன்னதைக் கேக்காததுனால, கிடைக்கவே 6,7 மாசம் ஆயிடுத்து... உடனே போயிருந்தா என்ன நடந்திருக்குமோ தெரியல.... அப்பெல்லாம் புத்தி இல்ல..."

"அப்புறமா ஆத்துக்கு வரேன்"

"ஆத்துக்கு வந்தா பேசமுடியும்னு தோணல... என்னை timeலாம் குடுத்து, இதப் பத்தி பேசுன்னா முடியாது. இப்படிச் சொல்லும்போதே, pocketல போட்டுக்கோ.... நீ தான் மஹா பெரியவாளப் புடிச்சிண்டிருக்கயே...."

"இல்ல... முன்னாடியே நீங்க வரச்சொல்லியிருக்கேள். நான், வந்தாலும், ஒங்களத் தொந்தரவு பண்ணாம, ஓரமா இருக்கேன், பேசாம..."

"நான் இருக்கும் போது வா. என்னோட card குடுத்திருக்கேனா? "

"இல்லயே"

"இந்தா... சௌக்யமா இரு.."

"ரொம்ப சந்தோஷம்.."

அதற்கு பிறகு எங்கேனும் வழியில் சந்தித்துக் கொண்டோம்...

நீண்ட நாட்களுக்குப் பின் இவ்வருட ஆரம்பத்தில் மயிலை ஆஞ்சநேயர் கோவில் வாசலில் பார்த்துக்கொண்டோம். வயது கூடியிருந்தது.. என்னுடன் பேசுவதற்காக மனைவியை "இருடா கண்ணு.... வந்துடறேன்...." என்றுவிட்டு வந்தார்.

உடையார் நாவல் மிக நன்றாக வந்திருந்ததை பாராட்டி சில வார்த்தைகள்.... "சரித்திர நாவல்ங்கற பேர்ல soft porn எழுதீண்டு இருந்தான்... அத ஒடச்சேன்... அது இருந்த இடத்துல இது நிஜமா வந்ததுருக்கு...."

விடை பெற்றுக்கொண்டோம்.

மஞ்சள் அழகிய குதிரையில் வைத்து சவாரியினூடே சடுதியில் புணர்ந்ததை விவரிக்கும் (so called - naval?!? ) சரித்திரக் கதைகளின் இடையில் பாலகுமாரனின் "உடையாரும்", ப்ரபஞ்சனின் "வானம் வசப்படும்" நாவலும் மிகவும் ஆறுதல் தான்....

6 comments:

  1. //"சரித்திர நாவல்ங்கற பேர்ல soft porn எழுதீண்டு இருந்தான்... அத ஒடச்சேன்... அது இருந்த இடத்துல இது நிஜமா வந்ததுருக்கு...."//

    உடையார் படிச்சதில்லை, ஆனால் இதை ஒத்துக்க முடியலை. மன்னிக்கவும். :(

    ReplyDelete
  2. avar sonnadhu uNmai dhAn. kalkiyai vidungaL. vishayamondrumillai and harmless. sAndilyan sp thAn.

    ReplyDelete
  3. thamarai sirithathunu periyavala sonnapothu ( thalaianai pookal novel ) .. nijamave periyava padam paakum pothu ippellam thamarai poo mathiri thaan irukku ...avvalavu powerful ezhuthu bala sirthu

    Manikandan H

    ReplyDelete