Friday, April 24, 2009

காதிலே பூவும் கொஞ்சாத புறாவும்...


புறாக்களின் நகர்தலால் புலால் உண்ணும் காகங்கள்
புலம் பெயரும்; புதிதாய்க் குடிவரும்,
அலகுகளை அகலத் திறக்கும்.

அழைப்பதற்கு என்றெண்ணுகையில்,
அஞ்சுவதால் அலறி அலறி
கூட்டம் சேர்க்கும்; கூடும் கட்டி அமரும்.

மாண்டு விட்ட கணவர்களை
'மதம்' கொண்டு மறந்து போகும்,
மன்னிப்பென்று மழுப்பிவிட்டு
நளினமாய் சிறை மீட்கும்.

மைனாக்கள் வருகுதென்று
மைதுனிக்கும் மனங்களூடே,
அந்தோ! நீயோ..! மைனாவோ...?!!
என்று புறாக்கள் கிளம்பிவிடும்.

கடைசி முறையாய் கரம் பற்றி விடைகொடுக்கும்.

உலகம் நம்மைச் சுற்றி விரையும்;விரியும்...
பந்தயத்திற்காய் பறக்கவிடினும்
பரவாயில்லை திரும்ப வரும்
பாவம் மெகாக்கள்...

இல்லையில்லை, புறாக்கள்.

(photo courtesy: idli vadai)


2 comments:

  1. சூப்பர்!
    prize: கதர் வேஷ்டி, துண்டு, குல்லா. சீக்கிரம் அனுப்பிடுவாங்க!

    ReplyDelete
  2. i actually need other vEshti, peace and juice-gullA only

    ReplyDelete