Wednesday, April 22, 2009

திருவனந்தபுரமும் பெங்களூருவும்... 5



பெங்களூரு கச்சேரிக்காக லால் பாக் ரயிலில் ஏறியதும் தான் அது ஒரு town bus of the peak hour என்று தெரிந்தது. இருவர் அமரும் இடத்தில் மூவர். ஜன்னல் ஓர இருக்கை. பக்கத்தில் ஸௌம்யஹரிணி. அதையடுத்து இன்னொருவர். பெரும்பான்மை சமயங்களில் நின்று கொண்டு வந்தார்; "காத்து வேணும் சார்"

நாங்கள் இருவரும் அவரவர் மொபைல் போன்களின் திரையில் எங்களைச் சற்று நேரம் தொலைத்தபின், வினோதமான ring tones ஐப் பெற்றுக்கொண்டேன், அவளிடமிருந்து.

"நான்சென்ஸ் மாதிரி பேசாதீங்க", என்று ஒரு குரல். TNS ஒரு முறை, நங்கநல்லூரில் பாடியபோது.. main முடிந்ததும் பேச வந்த பிரகிருதி (secretary) சேஷுவை விடுத்து, "நேத்து இங்க சுதா பாடினபோது நல்ல கூட்டம்" என்று சம்பந்தமில்லாமல் அரற்றியதில் கடுப்பாகி, பேச்சு முடிந்ததும், "ஸாரமைன மாட்டலேந்து சாலு சாலுரா... " என்று தொடர்ந்தார்.... (அந்த கச்சேரியில் தான் "பரமாத்முடு - ஜீவாத்முடு என்று நிரவல். பரமாத்முடு என்ற வார்த்தையை மேல் ஷட்ஜத்தில் [higher octave] வைத்து, ஜீவாத்முடு என்ற வார்த்தையை சா... ரீ...கா... ஒவ்வொரு ஸ்வரமாகத் தூக்கி பரமாத்மாவிடம் சேர்த்தார் என்று நினைவு...) இந்த ring tone ம் அப்படித்தான் உபயோகமாகும் போலிருந்தது.

இன்னொரு டோனில், "ஐயோ... இந்த போன் கத்தீண்டே இருக்கே, யாராவது அதுங் கழுத்தப்புடிச்சு அமுக்குங்களேன்" என்று ஒரு குழந்தை ஹிந்தியில் சொல்லியது... அபஸ்வரமாக ஏதேனும் நடக்கும்போது, இந்த tone சுஸ்வரமாக ஒலிக்கக் கூடும்!

சிறு வயதில், தீப்பெட்டி படங்களை, தபால்தலைகளை, தீபாவளிக்கு வாங்
கிய பட்டாசுகளை ஒருவருக்கு ஒருவர் காட்டி மகிழ்ச்சியோ எரிச்சலோ படுவதையே தான், ஈ லோகத்தில் (e-world) வேறு விதமாய் செய்துகொண்டிருந்தோம்.

ஸௌம்யஹரிணி, மடிக்கணினி (என்ன ஒரு எகன-மொகன) கொண்டுவந்திருந்தாள். Administrator password போட்டு, user account-ஐ அணுகாதபடி வைத்திருப்பதால், என்னுடைய desk top-ம் “மடி”-கணினி தானோ என்றால், எப்போதாவது ட்ரம்ஸ் முரளி ஈ மயிலில் அனுப்பும் அனாச்சாரமான படங்களால் அப்படி இல்லை எனத் தோன்றியது. குறுக்கும் நெடுக்கும் நடந்து, dvd விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் jurassic park-123, baal ganesh, hanuman, krishna மற்றும் african wild animals வாங்கினேன், குழந்தை உள்ளத்துடன்,சமர்த்தாக; ஸௌம்யஹரிணியும்.

உடனடியாக laptop-ல் சோதித்ததில், ஓடாத ஒரு cd-ஐ, சௌமி சென்று மாற்றி வந்தாள். "கொஞ்ச நேரத்துல, குப்பம் station வந்துரும்... இந்த மாதிரி விக்கறவங்க ஏறங்கீடுவாங்க...சீக்கிரம் போனீங்கன்னா, மாத்தீடலாம்" என்ற அசரீரி, அவள் காதுகளுக்கு அருகில் காற்றில் கரைந்தது.

ஸௌம்யஹரிணியுடன் பேசிக்கொண்டே சென்றதில் வழியில் ஸ்டேஷன்கள் மறைந்து கொண்டிருந்தன.

பெங்களூர் இரயில் நிலையத்தில், மிக அருகில் ஏறக்குறைய எதிரிலேயே இருந்த cabs driver-ஐ செல் போனில் பேசிக்கொண்டே பரஸ்பரம் தேடியதில் 15 நிமிடங்கள் கழிந்து, classic comfort-ஐ அடைந்தோம். இரண்டு படுக்கைகள், குளிர் சாதனம், நவீன குளியலறை என்று ரம்யமாகத்தான் இருந்தது, ஒரு நாள் வாடகை ரூ.2500.

இரண்டு நாட்கள் மூன்று அறைகள். "அடப்பாவி, அதையும் பணமா கையில வாங்கீண்டு நம்மாத்துல இருந்திருக்கலாமே" - கோபால கிருஷ்ணன். ந்யாயம் தான்.கச்சேரிக்கு சம்பாவனை ரூ.1200 மட்டுமே. நான் தங்கி உணவருந்தியது ரூ.5500! ஆனால், இந்த விஷயங்களை நான் தீர்மானிக்க முடியாது...

மிக மிக வசதியான அறைகளில் தூக்கம் வருவதற்குள் வீடு வந்து விடுகிறது.

காலை தயாராகிக் குளியலறையிலிருந்து வந்ததும், கலைந்து களேபரமாகக்
கிடந்த கட்டிலை தாற்காலிகமாக விவாகரத்து செய்தேன், இன்னொரு கட்டில் இருந்ததால்.

"மாதொருபாகன் மாசில் ஆலயத்தில், நானொரு பாகன் நடக்காமல் போகிறேன்..." என்று ஒரு வரி உள்ளே ஓடியது. ஒரு விதத்தில் உண்மை தான். யானையின் காலில் காலூன்றி, அதன் காதைப் பிடித்திழுத்தே மேலேறும் பாகன் போலத்தான் நான் நேற்று கட்டிலில் ஏறியதும் இறங்கியதும்.

கலைச்சேவை என்பதை "கலைச்சே-வை" என்று ஆக்கிவிட்டேன்.

ரூம் boy-ஐக் (bengali) கூப்பிட்டு சரியாகப் போடச்சொன்னதில், புதுப் படுக்கை
யுடன் உள்ளே வந்து, படுக்கையையும் என்னையும் விஷமமாகப் பார்த்தான். ஜன்னலுக்கு வெளியே, பெருகிவிட்ட போக்குவரத்தில் அரை மணிக்கு ஒரு முறை சகஜமாக ஸ்தம்பித்தபடி கனகபுராவின் சாலைகள்... எங்கெங்கும் உயர்ந்து வரும் விண் தீற்றிகள்... [sky scrappers?]

(என் ஜன்னலுக்கு வெளியே அருகிலிருந்த ஒரு விண் தீற்றி )



காலையிலேயே கார் வந்து,
ஸௌம்யஹரிணி பூஜைக்குப் போயிருந்தாள். யாக சாலைப் பூஜைகள் பாடுவோர்க்குச் சிரமம். அவள் வந்ததும், ஸ்ருதியை சேர்த்துப் பார்த்தேன். நாட்டைக் குறிஞ்சியில் ஒரு தமிழ் வர்ணம் பாடினாள். மூச்சு விடும் இடங்களில் நெடில் பிரயோகங்கள் குறிலாவதைச் சொன்னேன்.

மாலை கச்சேரிக்கு, டாடா சுமோவில் ஏறுவதற்கு பட்ட சிரமங்கள் எனக்குச் சொல்லத்தெரியவில்லை என்று தான் எளிமையாகச் சொல்லமுடியும். அதன் பின்புறக்கதவைத் திறந்து எளிதில் ஏறலாம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால், கால் வைத்து ஏறுவதற்கு வைத்திருந்தந்த அமைப்பு, அந்த வண்டியின் பின்னால் உள்ளடங்கி இருந்தது. பாதங்கள் நுழைந்து பொருந்திக்கொள்ளும்;முட்டி? முட்டி மோதி என்றால் என்ன என்பதை அறிந்துகொண்டேன் :)...

BTM Layout-ன் பெரியதொரு மைதானத்தின் செப்பனிடாத பரப்பில் ஷாமியானா. கடவுளை தரிசிப்பதோ, அடைவதோ மிகக் கடினம் என்பதை மீண்டும் உணர்ந்தேன். கோவில் கச்சேரிகள் என்றுமே எனக்கு nightmare தான். ஜனவரி 18 வாக்கில் முடிந்திருக்க வேண்டிய கும்பாபிஷேகம் மூன்று மாத தாமதத்திற்குப் பின்னும் பல வேலைகள் மீதமிருக்க, 30 அடி உயர சிவன் முத்தமிடக் காத்திருப்பது போல் குவிந்த உதடுகளுடன் அசிரத்தையாய் அமைக்கப்பட்டிருந்தார். அதற்கு வண்ணங்களை வாரியிறைத்து வம்பு பண்ணியிருந்தார்கள்.

மேடை, "anytime you may die" என்று மௌனமாய், அதன் ஏற்றக்குறைச்சல்களால் செய்தியனுப்பிக்கொண்டிருந்தது. ஐந்து கட்டையில் கச்சேரி நடந்துகொண்டிருக்கும்போது, ஊர்வலம் செல்ல வேண்டி, தவிலின் ஆர்ப்பரிப்புகளுக்கிடையில் இரண்டு கட்டையில் நாதஸ்வரம் முழங்கியது. கிட்டத்தட்ட ஒரு கல்யாணக் கச்சேரிதான் அது. ஆர்குட் நண்பரான ஸ்ரீவத்சா பிரம்மா வந்திருந்தார். முடிந்தால் முன்பே வருகிறேன் என்று சொல்லியிருந்த கோபாலகிருஷ்ணன், முடியுமுன்பே வந்துவிட்டான். . (PIN)

கோர்மங்களா செல்லும் வரைதான் அவனுடன் பேச முடிந்தது. அதற்கு பிறகு, காரிலிருந்து இறங்கிய வினாடியிலிருந்து நாலு வயது ஸ்ரீ வர்ஷினி என்னை ஆக்ரமித்துக்கொண்டாள். அவள் பிறந்தவுடன் தேதி பார்த்து , மாதுவுடன் கலந்து பேசி பெயர் வைத்த தருணங்கள் தோன்றின. ( ரமணன் பெண்ணிற்கு பாரதி, ரங்கராஜனின் பெண்ணிற்கு ஸ்ரீமதி என்று மாது தான் "neumorology" படி பெயர் சொன்னான்... அனேகமாக இந்த வரியால் blog-ல் மீண்டும் சூடு கிளம்புமோ என்றொரு ஆசை ). நானும் அவளும், கொஞ்சல்களையும் கதைகளையும் முடித்துத் உறங்கச் சென்ற போது, இரண்டு மணியாயிருந்தது.

அடுத்த நாள், பத்தரைக்கு அறையை அடைந்து மாலை வரை வரை சும்மா இருந்தேன்.
ஸௌம்யஹரிணியை escort-ஆகப் போட்டு டிக்கெட் வாங்கியிருந்ததால், அவள் திரும்பும் போதுதான் நானும். ஸ்ரீ வத்சா பிரம்மா வந்ததும் அந்த மாலை ச்வாரச்யமாகப் போயிற்று. அவனுக்கு நல்ல சம்ஸ்க்ருத ஞானம், அதோடு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், தமிழ் என பல பாஷைகள் தெரியும். இரவு, station-க்கும் வந்தது மிகவும் உதவியாக இருந்தது.

ஸௌம்யஹரிணி சற்று அவள் அறைக்குச் சென்ற பொழுதுகளில், மைசூர் அரண்மனையில் வாசலில் நிறுத்தப்பட்ட புலவன் எழுதிய கவிதையைச் சொன்னான். "மன்னன் அரண்மனை தொழிலில் இருக்கும் பெண்ணின் உறுப்பைப் போன்று இருக்கிறது... பணம் கொடுத்தால் உள்ளே அனுமதிக்கும் காவலர்களை கவனித்து பல dicks உள்ளே செல்ல, நான் மட்டும் கொட்டைகள் போல் கோட்டை வாயிலிலேயே...."

"this is too much.... I never wish someone calling me an outstanding artiste here after", என்றேன்.

பிறகு சீரியஸாக கவிதை, அஷ்டாவதானம், சதாவதானம் போன்றவைகள் பற்றிப் பேசினோம். sms-லும் தொடர்ந்தது, இரயில் கிளம்பிய பின்னும்.

Banglore would have become a dot in the distance. I slept without realising it, but enjoying new dots becoming bigger inside my closed eyes...

9 comments:

  1. பானகத் துரும்புகளைத் தவிர்க்கலாமோ??

    ReplyDelete
  2. adhaanthaan, swaamkku nivEdhanam seyyum pOdhu, ElakkAyai appadiyE pOdAmal, araiththup pOduvadhu, prasAdhaththai thuppa vENdA'mendru'

    ReplyDelete
  3. ரெண்டு "option" குடுக்கறேன் ஒங்களுக்கு!

    1. ஒன்னு இந்த மாதிரி எழுதறத நிறுத்துங்கோ.

    2. இல்லேன்னா, "கண்டிப்பாக வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்", "பிஞ்சிலே பழுத்தவர்களுக்கு மட்டும்" அப்டின்னு போர்டு போட்டுடுங்கோ.

    :-D

    ReplyDelete
  4. இன்னிக்கு வசந்த் தொலைக்காட்சியில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி கோயில் ஆறாட்டம் காட்டினார்கள். உங்களைப் பற்றித் தான் பேச்சு! கோயில் முழுதும் காட்டலை! ஆனால் ஆலய அமைப்பும் ஸ்வாமி அலங்காரமும் பிரமாதம்.

    ReplyDelete
  5. Oh... what time? So nice to hear that you remembered...

    ReplyDelete
  6. ஒவ்வொரு ஞாயிறும் மாலை ஆறு மணிக்குக் காட்டறாங்க. ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு கோயில்.

    ReplyDelete
  7. நல்ல கட்டுரை - மறுபடி எப்ப பெங்களூரு வர்றீங்கங்கற தகவல் மிஸ்ஸிங் :>

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  8. வரவேண்டும். நினைத்த வண்ணம் அமைகையில். நண்பர்களைச் சந்திப்பதற்காகவும்.

    ReplyDelete
  9. ஐந்து போலவே மற்ற நான்கினையும் பார்க்கவும். பின்னோட்டமில்லையேல் பரவாயில்லை.

    ReplyDelete